நதியில் - ஸமுத்திரத்தில் ஸ்நானம், குளியல&#3021

Status
Not open for further replies.
நதியில் - ஸமுத்திரத்தில் ஸ்நானம், குளியல&#3021

நதியில் - ஸமுத்திரத்தில் ஸ்நானம், குளியல்



நதியில் - ஸமுத்திரத்தில் ஸ்நானம், குளியல் போன்றவற்றைப் பற்றிப் பலருக்கு நிறைய சந்தேகங்கள்! அதில் ஒன்று ஸமுத்திரத்திலோ, நதியிலோ ஸ்நானம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்து மறுபடியும் குளிக்கலாமா என்பது ஒன்று.


இதற்கு மகாபாரதத்திலேயே பதில் இருக்கிறது. காவேரி - கங்கா - யமுனை - கோதாவரி போன்ற புண்ணிய நதிகளிலும் ஸமுத்ரத்திலும் ஸ்நானம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்து மறுபடியும் குளிக்கக் கூடாது. இவ்வாறு செய்வதால் நாம் முன்பு செய்த நதி (ஸமுத்ர) ஸ்நான பலன் கிட்டாமல் போகலாம்.
பொதுவாக வைதிகமாக (மந்திரங்களால்) ஒரு செயல் செய்யப்பட்டு பிறகு அதே செயலை லௌகிகமாக மறுபடி (மந்திரமில்லாமல்) செய்தால் முன் செய்த வைதிகமான செயல் பயனற்றுப் போகும். இதை ஸ்ரீமத் ராமாயணத்தில் வால்மீகி ஓர் ஸம்பவம் மூலம் எடுத்துக் காட்டுகிறார்.


ஸ்ரீசுந்தர காண்டத்தில் இலங்கையில் ராவணன் மகன் இந்திரஜித், ஸ்ரீஆஞ்சநேயரை ப்ரம்மாஸ்திரத்தால் கட்டி விடுகிறான். பிதாமஹரான ப்ரும்மாவிற்கு மதிப்பளிக்க ஸ்ரீஆஞ்சநேயரும் ப்ரும்மாஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டு கிடக்கிறார். பிறகு அரக்கர்கள் அனைவரும் சேர்ந்து சணல் போன்ற கயிறுகளால் ஸ்ரீஹனுமாரை கட்டுகிறார்கள். இதனால் முன்பு மந்திரத்தால் கட்டப்பட்ட கட்டு விடுபட்டு பயனற்றதாகிப் போய் விடுகிறது. இதைக் கண்ட இந்திரஜித் மிகவும் வருந்துகிறான்.


தான் அஸ்திரத்திலிருந்து விடுபட்டதை அறிந்துகொண்ட அனுமார் ராவணனைக் காண வேண்டும் என்பதால் கட்டுப்பட்டவர் போலவே நடிக்கிறார். ஆனால் இந்திரஜித்துக்கோ அனுமார் தான் கட்டிய கட்டிலிருந்து விடுபட்டது தெரியாது. ஆகவேதான் கட்டப்பட்டு ராட்சசர்களால் அழைத்துச் செல்லும்போது தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கவில்லை என்று எண்ணுகிறான்.


இந்த நிகழ்ச்சியின் மூலம் வைதிக கர்மாவின் - மந்திரத்தின் சக்தியானது அதே செயலை மறுபடியும் லௌகீகமாகச் செய்வதால் பயனற்றதாகிவிடும் என்னும் தர்ம சாஸ்திரத்தை அழகாக விளக்குகிறார் வால்மீகி. ஆகவே நதிகளிலோ, சமுத்திரத்திலோ ஸ்நானம் செய்த பிறகு வீட்டிற்கு வந்து மறுபடியும் ஸ்நானம் செய்யக்கூடாது. இதனால் முதலில் செய்த ஸ்நான பலன் முழுமையாகக் கிடைக்காமல் போகலாம்.


"ஸந்தேக நிவாரணி (பாகம் 5)' என்ற நூலில் ப்ரும்மஸ்ரீ ராஜகோபால கனபாடிகள்.



????????? - Dinamani - Tamil Daily News
 
Status
Not open for further replies.
Back
Top