• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தோஷங்கள் நீக்கும் கருடாழ்வார்!

Status
Not open for further replies.
தோஷங்கள் நீக்கும் கருடாழ்வார்!

தோஷங்கள் நீக்கும் கருடாழ்வார்!


Evening-Tamil-News-Paper_32826960087.jpg




நம் ஆலய வழிபாடு, உற்சவம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான காரணங்கள், ஐதீகங்கள் உள்ளன. உற்சவத்தின்போது பல்வேறு விதமான அலங்காரங்களில் பகவான் திருவீதியுலா வருவது வழக்கம், அதில் வாகனங்களும் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித்தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும். விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுகிறார். இவர் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார். ஆலயங்களில் தரிசிக்கும் கருட வாகனம் மனித உருவத்துடன் கருடன் போன்ற முக தோற்றத்தில் காட்சியளிப்பார். முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும்.

உடல் முழுவதும் அஷ்ட நாகங்களை ஆபரணமாக தரித்திருப்பார். ஒரு காலை முழங்காலிட்டு மற்றொரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில் இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களை தாங்குவதற்காக நீட்டியிருப்பார். இரு புறமும் பெரிய இறக்கைகள் இருக்கும். பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது, ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்தார்.

கருட தரிசனம் சுப சகுனமாகும். கருடன் மங்கள வடிவினன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம். சபரிமலையில் ஐயப்பனின் திருவாபரணங்களை கொண்டு வரும்போது ஊர்வல பாதை முழுவதும் கருடன் வட்டமிட்டபடியே இருக்கும். இதை இன்றளவும் தரிசிக்கிறோம்.
பிரம்மோற்சவ காலங்களில் கருட சேவைக்கு தனி சிறப்பு உண்டு. இரட்டைக் குடை பிடித்திருக்க, கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசிப்பதால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ராமாயணத்தில் ராம பிரானின் தூதனாக இலங்கைக்கு சென்று சீதா பிராட்டியை சந்தித்தவர் அனுமன். அதேபோல, கிருஷ்ண அவதாரத்தில் தாயார் ருக்மணி கொடுத்த ஓலையை ஸ்ரீகிருஷ்ணரிடம் கொடுக்க தூது சென்றவர் கருடன். அனுமனும் கருடனும் பகவானின் தூதர்கள். இவர்களிடம் மனமுருக வேண்டினால் நமது பிரார்த்தனைகள், வேண்டுதல்களை பகவானிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்பது ஐதீகம். விஷ்ணு ஸ்தலங்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய கருடன் அருள்பாலிக்கிறார்.

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கல் கருடன் மிகவும் பிரசித்தி பெற்றது. சுவாமி புறப்பாட்டின்போது இங்கு ஒரு அதிசயம் நடக்கிறது. சன்னதியில் இருந்து புறப்படும்போது இந்த கல் கருடனை 4 பேர் மட்டுமே தூக்குவார்கள். அங்கிருந்து நகர நகர, கருடனின் எடை அதிகரித்துக் கொண்டே போவதால் 8 பேர், 16 பேர் என்று பலர் சேர்ந்து தூக்குகின்றனர். இந்த கல் கருடன் நவக்கிரக தோஷத்தை நீக்கக் கூடியவர். ஜாதகத்தில் புத்திர தோஷம், ருணம், ரோகம், சத்ரு பீடை, பில்லி, சூனியம் போன்றவற்றை நீக்கி சகல சவுபாக்கியங்களும் தரக்கூடியவர் கருடாழ்வார். ராகு, கேது போன்ற சர்ப்ப தோஷங்களை நீக்கி மங்களத்தை அருள்வார். அவரை வணங்கி சகல வளங்களும் நலன்களும் பெறுவோமாக. -


See more at:

???????? ???????? ???????????!||Tamilmurasu Evening News paper
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top