தை ஹஸ்தம் – ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகளின் 150வது பிறந்த நாள்

drsundaram

Active member
இன்று தை ஹஸ்தம்

காமாக்ஷியின் அவதாரம் என போற்றப்படும் மகான் ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகளின் 150வது பிறந்த நாள்

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள், ஒரு பெரிய சித்த புருஷர். அவர் காஞ்சீபுரத்தில் பிறந்தவர். அவருக்கு பரமேஸ்வரனே ஸ்ரீ பாலாஜி ஸ்வாமிகள் என்ற பேரில் நாலு சிஷ்யர்களோடு வந்து தக்ஷிணாமூர்த்தியாக தரிசனம் தந்து ஸன்யாசம் தந்தார்.

ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் பிறந்த க்ரஹத்தை மஹா பெரியவா எழுத்தாளர் ஸ்ரீபரணிதரனை கொண்டு கண்டு பிடித்து அதை மடத்தில் வாங்கி அதுக்கு *“ஸ்ரீ காமகோடி சேஷாத்ரி விலாஸம்”* னு பேர் வைத்து அங்க போயி மூகபஞ்சசதி படீன்னு சொல்லி இருக்கார்.
அந்த இடத்தை வாங்கின ட்ரஸ்ட் காரா, அந்த காரியங்கள் பண்ற எல்லாரையும் வச்சுண்டு மஹா பெரியவா, சேஷாத்ரி ஸ்வாமிகள் மாதிரி யோகாசனத்துல்ல ஒரு போஸ் ல உட்காருவாராம்.
அப்படி உட்கார்ந்து காண்பித்து *”இப்படித்தான் அவர் உட்காருவார். அவர் மாதிரி உட்காரமுடியும். ஆனா அவர் மாதிரி நிலை எனக்கு எப்ப வருமோ? எத்தனை ஜன்மாக்கு அப்புறம் வருமோ”னு சேஷாத்ரி ஸ்வாமிகளை கொண்டாடி இருக்கார்.*
சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கும் “மூகபஞ்சசதி” க்கும் என்ன தொடர்புன்னா, அவர் காஞ்சிபுரத்துல பிறந்து *மூகபஞ்சசதி யை படிச்சு, காமகோட்டத்தை இராத்திரி 12 மணிக்கு மூகபஞ்சசதி சொல்லி கணக்கில்லாம ப்ரதக்ஷணம் பண்ணுவார், கணக்கில்லாம நமஸ்காரம் பண்ணுவார்,* அப்படின்னு மஹா பெரியவா சொல்லியிருக்கா.
அப்படி மஹா பெரியவாளே தன்னைக் காட்டிலும் ஒரு பெரியவர் அப்படின்னு சொன்னால் ஸ்வாமிகளுக்கு அவரிடம் எவ்வளவு பக்தியும் ஸ்ரத்தையும் அது மூலமா ஞான வைராக்கியமும் ஏற்பட்டிருக்கும்!…
?

*ஜய ஜய ஜய ஜய காமாக்ஷி*
*ஜய ஜய ஜய ஜய காமகோடி*
*ஜய ஜய ஜய ஜய சேஷாத்ரி*
என்று காஞ்சி மகா ஸ்வாமிகள் நாம ஜபம் அருளி இருக்கிறார்


sesha.jpg
 
Back
Top