• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தேவராஜ அஷ்டகம்

ஸ்ரீதிருக்கச்சி நம்பிகள் திருநட்சித்திர உற்சவம் -பதிவு-4
தேவராஜ அஷ்டகம்

திருக்கச்சி நம்பிகள் அருளிச் செய்த ஒரே கிரந்தம் தேவராஜ அஷ்டகம்;
8 ஸ்லோகங்களைக் கொண்டது.தம் ஆசார்யரும், ஸ்வாமி ராமானுஜரின் பரமாசார்யருமான ஸ்ரீஆளவந்தார் அருளிய "ஸ்தோத்ர ரத்னம்" என்னும் கிரந்தத்தின் ஸாரத்தைக் கொண்டு நித்யாநுஸந்தேமாயும்,சுலபமாயும்,சுக்ரமாயும்,சர்வவர்ணார்ஹமாயும் ஆன தேவராஜ அஷ்டகம் என்னும் ஸ்தோத்ர மாலையை அருளிச்செய்தார். எட்டு(8) ஸ்லோகங்கள் கொண்ட இந்த மாலையைப் படிக்கும் முன் நம்பிகளின் தனியன்கள் இரண்டையும் அநுசந்தானம் செய்ய வேண்டும்.நாம் இந்தத் தனியன்களை ஒரு தனிப் பதிவில்(பதிவு1) ஏற்கனவே பார்த்துவிட்டோம்.எனவே நேராக ஸ்தோத்திரத்துக்குச் செல்வோம்.

ஸ்லோகம்-1:
"நமஸ்தே! ஹஸ்திசைலேச!
ஸ்ரீமந் அம்புஜலோசன;
சரணம்த்வாம் ப்ரபன்னோஸ்மி
ப்ரணதார்த்திஹரா அச்யுத!!"

ஸ்ரீபெருந்தேவித்தாயாருக்கு, வல்லபன்ஆனவனே,அத்திகிரி
என்னும் குன்றின் அதிபதியே!
அரவிந்தநிவாஸிநியான பெருந்தேவித் தாயாரையும், அவருடைய ஆசனமான தாமரையையும் பார்த்துப் பார்த்து,அவர் உருவத்தைத் தம் கண்மலர்களில்கொண்டவனே!
உன் திருவடிகளில் சரணமடை ந்தோர் அனைவருடைய வருத்தங்களையும் நாசம் செய்பவனே! உன்னை அண்டியவர்களை
விடாதவனே! அச்சுதனாய், ப்ராப்யனாய்,என் எதிரே அர்ச்சாவதரமாய், ஸுலபனாய் நிற்கிற உன்னையே-
சரணமாக-உபாயமாகப் பற்றுகிறேன்.நின் திருவடிகளில் தண்டம் சமர்ப்பிக்கிறேன்.

இந்த முதல் ஸலோகத்தில் அர்த்தபஞ்சகமும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
i)ஹஸ்திசைலேச--சர்வேஸ்வரத்வத்தைக் கொண்ட
சர்வகாரணத்வம்-ப்ராப்யம்.
ii)ஸ்ரீமந் அம்புஜலோசன-
ப்ராப்ய அநுரூபமான ஸ்வரூபம்-அபாத்யத்வம்.
iii)சரணம்- ஸ்வரூப அநுரூபமான உபாயத்வம்.
iv)அச்சுதா-உபாயபலமான ப்ராப்யப்ராப்தி
v)ப்ரணதார்த்திஹர-விரோதிஸ்வருப நிராஸம்.

ஸ்லோகம் 2-8:இந்த 7 ஸ்லோகங்களால் ப்ராப்ய, உபாய விரோதி நிராகரண த்தைப் பிரார்த்தித்து,ஸ்வ ஸ்வரூபத்தைக் காட்டுகிறார்.

ஸ்லோகம் 2:
"சமஸ்தப்ராணி ஸந்த்ராண ப்ரவீண கருணோல்பன;
விலசந்து கடாக்ஷாஸ் தே, மய் யஸ்மின் ஜகதாம்பதே!!"


--உலகங்களுக்கு எல்லாம் ஸ்வாமியானவனே!எல்லா ஜீவராசிகளுக்கும் ரக்ஷ்ணம்/ஸமுஜ்ஜீவனம் அளிக்கும் அளவற்றசக்தியும்,கருணையும் உடையவனே!பலத்தை/வரத்தைக் கொடுக்கத் தன்னையும்,பெருக்கி விஞ்சி கடாக்ஷங்களாய் நிற்பவனே!
உன்னுடைய கடாக்ஷமான பார்வை,நின்எதிரே சேவித்து நிற்கும் அடியேன் மீது முழுதும்
நன்றாக இருக்க வேண்டு கிறேன்.

இங்கு ஸமஸ்த ப்ராணி என்றது அனைத்து ஜீவன்களுக்கும்-தேவதைகள்,மனிதர்கள்,பசுக்கள்,பட்சிகள்,செடி/கொடி மரங்கள்-என்று அனைத்தும்;
"லோகாஸ்ஸமஸ்தா:ஸுகிநோ பவந்து"என்கிறபடியே,வரதரின் வரமும்,கடாஷமும் நம்பிகளிடம் வந்தால்,அதனால் உலகம் எல்லாம் வாழும். அப்படியே வரதர் அருளிய அந்த 'ஆறு வார்த்தைகளை' நம்பிகள் எம்பெருமானாருக்கு அளிக்க,அவர் உலகோர் எல்லோருக்கும் அளித்து தர்சனஸித்தியாலே வாழும்படி செய்தார்.நம்பிகளின் ஆலவட்டக் கைங்கர்யமும், உடையவரின் தீர்த்தக் கைங்கர்யமும்,(சாலைக் கிணற்றிலிருந்து) ஊருக்காக வும்,உலகத்துக்காகவும் பலன் தரவேயாகும்.

ஸ்லோகம் 3:
"நிந்தித ஆசார கரணம் நிர்வ்ருத்தம் க்ருத்யகர்மண:
பாபீயாம்ஸம் அமர்யாதம்
பாஹி மாம் வரதப்ரபோ!"

---நல்ல வரங்களைக் கொடுக்க வேண்டுமென்று, இங்கே எழுந்தருளியுள்ள ஸ்வாமியானவனே!
நல்லவர்கள் விலக்கச் சொல்லும்,ஆசார நடைமுறை களையே செய்யுமவனான, செய்யவேண்டும் என்பவற்றை செய்யாதவனான,அவர்களை/அவைகளைப் பார்க்காமல் பின் காடடிப் போகிறவனான என்னை,பாபங்களையே எல்லா வடிவிலும் நெஞ்சிலும்/வாயிலும் கொண்ட என்னை,(லோகத்திலும்சாஸ்த்ரத்திலும் சொல்லுகிற) எந்தவொரு நியமத்துக்கும் கட்டுப்படாத என்னை('என்னை' என்று அஹங்காரத்தோடு சொல்லும வனை) இனி தேவரீர் ஸ்வாமிகளே காப்பாற்ற வேண்டும்.

ஸ்லோகம் 4-8: இந்த 5 ஸ்லோகங்களால் ஆகிஞ்சந்யாதிகளை,முன்னிட்டு,அபராதஸஹஸ்ரபாஜநத்தை விளக்கி,சரணாகதத்தையும் விரிவாக்கிக் கொண்டு சொல்கிறார்.இந்த ஸ்லோக வரிசையை குலகம் என்று கூறுவார்கள்.

ஸ்லோகம் 4:
"ஸம்ஸார மருகாந்தாரே
துர் வியாதி ஆக்ரபீஷணே;
விஷய க்ஷத்ரகுல்மாட்யே
த்ருஷ்ணாபாத பசாலினி !! "

ஸம்ஸாரம் என்னும், நிதமும் நாம் வாழும் வாழ்க்கை, கொடிய பாலைவனங்களில் அங்கங்கே இடைப்படும் காட்டினைப் போன்றது. தினமும் நமக்கு ஏற்படும் வித விதமான மனம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட நோய்களின் தீவிரம் காட்டுப்புலிகளினுடைய தாக்குதலுக்கு ஒப்பானது.

காட்டிலே மேலாக புற்களால் நிரப்பப்பட்ட புதர்களான ஆழப் பள்ளங்கள் அவற்றின் மேல் நடப்பவரை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும் வண்ணம், நம்முடைய பல வித ஆசைகளும் அங்கங்களின் உணர்வுகளும் கொடிய புதர்களாக நாம் வெளியே வர முடியாத வண்ணம் உள்ளே இழுத்துக் கொள்ளும் தன்மை யானவை. .

'ஸம்ஸார மருகாந்தாரே' என்னும் பதத்திற்கு ஸம்ஸார பாலைவனம் என்று பொருள். 'த்ருஷாபாதபசாலினி' என்பது மரம் செடி கொடிகளைக் (பனை/ஈச்ச மரம்,முட்புதர்கள்) குறிப்பது.

நம்பிகள் இந்த வேறுபட்ட இரண்டு பதங்களைப் பிரயோகிக்கக் காரணம்,
பாலை வனத்து வெறுமையும் காட்டுப் பகுதியின் அந்தகாரமும், அடர்த்தியும் ஒன்று சேர்ந்தால் எவ்வளவு கொடுமையாக இருக்குமோ, அத்தகையது இந்த இருள்தரு மாஞாலம் என்பதைக் குறிப்பிடத்தான்.

ஸ்லோகம் 5:
"புத்ர தார க்ருஹ க்ஷேத்ர,
ம்ருகத் த்ருணாம்பு புஷ்கலே!
க்ருத்ய ஆக்ருத்ய விவேகாந்தம்
பரிப்ராந்தம் இதஸ் தத:"

--இப்பிறப்பில் நமக்கு ஏற்படும் புத்ர/புத்ரிகள் இல்லாள்(ன்), வீடு, நிலம் முதலிய சொந்த பந்தங்கள், காடுகளில் காணப்படும் கானல் நீரைப் போன்று தொடர்ந்து நம்மை ஏமாற்றிக் கிடக்கும்.இந்த சொந்தங்களின் நலத்திற்கான ஒரே நோக்கில் எதைச் செய்தல்,எதை விலக்குதல் என்ற ஞான விவேகங்கள் அற்று, இங்கும் அங்கும் சுழன்று கொண்டே இருப்போம்.

அருளிச் செயல் சொன்ன வண்ணம் 'தாயே தந்தை என்றும், தாரமே கிளை மக்களென்றும்' என்னும் வகையில் வாழ்ந்து என்ன பயன்? பந்துக்களைக் கண்டால் பாம்பைக் கண்டாற் போலவும், பாகவதர்களைக் கண்டால் பந்துக்கள் போலவும் இருக்க வேண்டும் என்பது பூர்வர்கள் உபதேசம்.

நம் ஆத்மாவின் உற்ற நிரந்தர உறவினன், எம்பெருமான் ஒருவனே என்று உணர்ந்திடும் சமயத்தில் தான், நாம் துக்கங்களிலிருந்து கரையேற முடியும், என்று நம்பிகள் விளிக்கிறார்.

ஸ்லோகம் 6:
"அஜஸ்ரம் ஜாதத்ருஷ்ணா ர்த்தம் அவஸந்நாங்கமக்ஷமம்;
க்ஷீணசக்த்தி,பலாரோக்யம்
கேவலம் க்லேச சம்ச்ரயம்!"

--எப்போதும் இடைவிடாதபடி விஷ்யாந்தரங்களை விரும்பி அநுபவித்துக்கொண்டும்,அவற்றை விட முடியாமல் வருந்திக் கொண்டும்,வேறு நல்ல காரியம் எதுவும் செய்யாமலும்,
வெறும் அங்கங்களை உடையவனாயும்,
ஆத்மஞானம்/பகவத்த்யானம் பெறாதவனாயும், குறைந்த சக்தி/பலம் உடையவனாய், ஆரோக்கியம் இருந்தும் எதற்கும் உதவாமல்,அடியேன், கேவலம் கஷ்டங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.

ஸ்லோகம் 7:
"சம் தப்த்தம் விவிதைர் துஃகை:
துர்வசைரேவம் ஆதிபி:
தேவராஜ தயா ஸிந்தோ
தேவ தேவ ஜகத்பதே!!"

இப்படிப்பட்ட பலவித துக்கங்களினால் சூழப்பட்டு, தாபங்கள் மிகுந்தவனாக வாழும் அடியேனை, தேவாதி தேவர்களின் தேவனான, தேவராஜ மஹா பிரபுவான உந்தன் கருணையின் குளிர்ச்சி தான் சீர்படுத்த வேண்டும்.

ஸ்லோகம் 8:
"த்வ தீக்ஷண ஸுதா
ஸிந்து வீசிவிக்ஷேப கரை:
காருண்ய மாருதா நீதை
ஸ்ஸீகரைர் அபிஷிஞ்ச மாம்!!"

--காருண்யம் என்னும் மாருதத் தென்றலால் தள்ளப்பட்ட உம்முடைய கடாக்ஷம், குளிர்ச்சியுள்ள கடல் அலைகளில்/நீர்வீழ்ச்சிகளில், அடியேனை,உம்முடைய கைங்கர்யமாகிற ஸாம்ராஜ்யத்தில் பட்டாபிஷேகம் செய்யும்படி நன்றாக திருமஞ்சனம் செய்து வைக்க வேண்டுகிறேன்.

இப்படி'நமஸ்தே' என்று முதலில்,ஜீவாத்ம ஸ்வரூப அநுரூபமான கைங்கர்ய த்தையே,அநந்ய ப்ரயோஜன மாகக் காட்டி,அந்த கைங்கர்ய சாம்ராஜ்யத்திலே பட்டாபிஷே கம் செய்ய வேண்டும் என்று முடிவிலேபிரார்த்திக்கிறார்; மண்ணுலகிலும்,விண்ணுலகிலும் எங்கும் ஜீவாத்மாவுக்குக் கைங்கர்யமே தஞ்சமான புருஷார்த்தம் என்று பரம காருணிகரான திருக்கச்சி நம்பி,நமக்கெல்லாம் தெரிவித்து "தேவராஜ அஷ்டகம்" என்னும் இந்தத் திவ்யப்ரபந்தத்தைக் தலைக்கட்டுகிறார்

தம் ஆசார்யர் ஆளவந்தாருக்கு உத்தம சிஷ்யராய் இருந்து,
(எம்பெருமானாருக்கு) அவரின் பிரதிநிதியாய் இருந்து,
தேவப்பெருமாளுக்கு அந்தரங்கக் கைங்கர்யங்களைச் செய்து கொண்டு,
ஆழ்வார்கள் போலவே பகவானுடன் வார்த்தையாடிக் கொண்டிருந்து,
பரிபூர்ணராய் தம் ஸ்வரூபத்தையும், ஆர்த்தியையும்,உள்ளே அடக்கி வைக்க முடியாதே,இந்த ஸ்தோத்ரத்தில் வெளிப்படுத்தினார்.

இந்த தேவராஜாஷ்டகம் தன் 16 பகுதிகளில், ஒரு புருஷ ஸுக்தத்துக்கு சமமாய் ஸம்ப்ரோஷணாதிகளில் சுத்தி மந்திரமாய் ஸம்பரதாயத்திலே விளங்குவதால்,ஸகல ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் உபாதேயம்!!

(படங்கள்: நன்றி "THIRUKKANNAMUTHU")
(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

1613817756760.png
 
Last edited:
Will appreciate of Sanskrit verses are also added. Or provide vargam for Tamil characters. TVa is first "ta" Deekshana is first "dh". That will help all readers to pronounce slokas properly.
 
As committed i am attaching the TRANSLITERATION with tamil vargam superscripts.
BhaghavAn's grace alone shines through because that is the energy driving human actions. And this effort is also submitted at his feet.
Hopefully some see beneft in chanting with correct intonation / pronounciation.
 

Attachments

  • தேவராஜ அஷ்டகம் ஸ்ரீதிருக்கச்சி நம்பிகள் திருநட்சித்திர உற்சவம்.pdf
    998.8 KB · Views: 81

Latest ads

Back
Top