தென்னகத்து கும்பமேளா "மகாமக பெருவிழா" - க&

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
தென்னகத்து கும்பமேளா "மகாமக பெருவிழா" - க&

தென்னகத்து கும்பமேளா "மகாமக பெருவிழா" - கும்பகோணத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது

கும்பகோணம்: 'தென்னகத்தின் கும்பமேளா' என்று பெருமையுடன் அழைக்கப்படும் மகாமக பெருவிழா இன்று கும்பகோணத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்று முதல் 10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.

குரு சிம்மராசியில் இருக்கும் போது மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி வரும் நாள் மகாமகம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2004ம் அண்டு மகாமக விழா நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மகாமகம் விழா கொண்டாடப்படுகிறது. இது தென்னகத்தின் கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/mahamaham-festival-begins-kumbakonam-246790.html
 
எங்கள் குடும்பம் 1968 மஹாமகத்தின்போது, கும்பகோணத்தில் வசித்து வந்தது. தட்டுப்பாடில்லாத முனிசிபல் குடிநீர், மேன்மையான சுகாதார நடவடிக்கைகள், ஊர் முழுதும் விழாக்கோலம் - மனதுக்கு விவரிக்க முடியாத ஒரு குதூகலம் இவற்றை அனுபவித்தோம். வீட்டில் பத்து பதினைந்து உறவினர்களும் நண்பர்களும் மகாமகத்திற்காகவே வந்து தங்கியிருந்தனர். என் தாயார், மிகுந்த மகிழ்ச்சியுடன் அயராது விருந்தினர்களுக்கு உணவு தயாரித்து பரிமாறியதும், என் தகப்பனார் தனித்தனியே ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டதும் இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது. அதன் பிறகு 3 முறை மஹா மகம் நிகழ்ந்துள்ளது. வெளியூரில் இருந்த போதிலும் அவற்றிலும் கலந்து கொள்ளும் பாக்கியம் பெற்றேன். கூடுதலான வசதிகள் இருந்தபோதிலும், 1968 மஹாமகத்தின்போது கிடைத்த நிறைவும், குதூகலமும் வேறு எந்த மஹா மகத்திலும் கிடைக்கவில்லை. எதிர் வரும் மஹா மகத்திற்கு செல்லும் எண்ணம் இல்லை - இருந்தபோதும் நினைவுகளை அசை போட தடை ஏது ?
 
Status
Not open for further replies.
Back
Top