தூங்கி விடுவதால் ஏற்படும் வாகன விபத்தை த

Status
Not open for further replies.
தூங்கி விடுவதால் ஏற்படும் வாகன விபத்தை த

தூங்கி விடுவதால் ஏற்படும் வாகன விபத்தை தவிர்க்க புதிய கண்டுபிடிப்பு

செப்டம்பர் 15,2015,




201509150245295201_By-leaving-the-vehicle-to-avoid-an-accident-sleeping--New_SECVPF.gif




காஞ்சீபுரம்,



காஞ்சீபுரம் நகராட்சி எஸ்.வி.என். பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி ஞானசவுந்தரி. இவர்களுடைய மகன் மனோகரன். இவர்,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். படித்து உள்ளார். தண்டலம் ராஜலட்சுமி என்ஜீனியரிங் கல்லூரியில் எம்.இ. படித்து முடித்து உள்ளார்.


மனோகரன், வாகன ஓட்டுனர்கள் தூங்கி விடுவதால் ஏற்படும் விபத்தை தவிர்க்க, புதிய ‘ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷனை’ உருவாக்கி உள்ளார். இந்த ‘அப்ளிக்கேஷனை’ நமது ‘ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால்’ செய்து, வாகனத்தில் உள்ள ‘மொபைல் போல்டரில்’ டிரைவரை பார்த்தார் போல வைத்து விட்டால் போதும். வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது டிரைவர் தூங்கினால் உடனடியாக அது அலாரம் ஓசை எழுப்பி டிரைவரின் தூக்கத்தை கலைத்து விடும்.



இந்த புதிய ‘ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷனை’ கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த புதிய கண்டுபிடிப்புக்காக மனோகரனை, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வி.கே.சண்முகம், பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.



மனோகரனுக்கு இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்புக்கு இடம் கிடைத்து உள்ளது. படிப்புக்கான முழு செலவையும் அந்த பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


http://www.dailythanthi.com/News/Di...the-vehicle-to-avoid-an-accident-sleeping.vpf
 
Status
Not open for further replies.
Back
Top