தீபம் வாசலில் வைக்கும் சரியான முறையிது..

தீபம் வாசலில் வைக்கும் சரியான முறையிது..

தீபம் வாசலில் வைக்கும்
சரியான முறையிது...


மறந்தும் தெற்குமுகமாய்
வைத்துவிடாதீர்கள்.....


அணையுமுன்
திருவிளக்கினை
உள்ளே எடுத்து
குளிரப்பண்ணவும்.......


பல குடும்பங்களில்
கார்த்திகை அல்லாத
மாதங்களிலும்
அதிகாலை ப்ரஹ்ம
முகூர்த்தத்தில்
திருவிளக்கேற்றுவர்கள்.....


சிரமமான கார்யந்தான்,


ஆனால் அதனனுபவம்
தவறாமல் தீபமேற்றி
ஸந்தோஷமடைபவர்களிடத்தே
காணமுடியும்
அவர்களின் அபரிமிதமான
வளர்ச்சியால்.......


லக்ஷ்மி நிரந்தர வாஸம்
பண்ணுவதற்கு
திருவிளக்கினைச்சுற்றி
புஷ்பங்களால்
அலங்கரியுங்கள்....


குங்குமத்திலகமிடுங்கள்


பழங்கள்,பாயசம்
வைத்து நிவேதனம்
செய்யுங்கள்......


க்ருஹங்களில்
ஸ்வாமி ஸன்னிதியில்
நெய்தீபம்மட்டுமே
ஏற்றுதலால் மங்களம்
நிறைந்து சந்ததிகள்
தழைத்தோங்கும்......


ஒருபோதும் மறந்தும்
கடலெண்ணையில்
தீபமேற்றாதீர்......


கடன் சுமை
தாங்கமுடியாது......


ஏதோ ஒரு ஸ்வாமி
ஸ்லோகங்கள்
பக்திமணங்கமழும்
ஒலிநாடா மெல்லியதாக
ஒலித்துக்கொண்டேயிருக்கட்டும்......


கூடியமட்டிலும் எந்த தீய
சொற்களையும் க்ருஹங்களில்
பேசாதீர்கள்.....


சொல்லிலும்,
செயலிலும்,
கவனம் தேவை.....


அஸ்து தேவதை அருகிலேயே
நிரந்தரமாய் வாஸம் செய்வதால்,


தீய வார்த்தைகள் பேசும்போது
நல்ல vibration அங்கே நிலை
கொள்ளாது......


அக்ஞானத்தைப்போக்கி
நல்ல திருந்திய ஞானமும்
செல்வமும் கொழிக்கும்
ஸக்தி
திருவிளக்கின்
பரகாசத்துக்கு உண்டு......


நான்கு முகங்கொண்ட விளக்கினில்
ஒரு முகம் தென் திசை நோக்குவதால்
ஐந்து முக
விளக்குமட்டும் ஏற்றி உயர்குடிப்-
பிறக்கும் பெறும் பேறு அடையலாம்....


உலகினை ப்ரகாசிக்கச்செய்யும்
சந்த்ரஸூர்யாதிகளைப்போலே,


நம் குடும்பமும் எற்றைக்கும்
ஏழேழ் பிறவிக்கும்
வாழையடிவாழையாக
மேன்மேலும் தழைத்தோங்க


மஹாலக்ஷ்மியை தியானித்து
நாளை நல்விடியல்கண்டு
பிறவிப்பயனடைவோமே.......


பத்மாஸனஸ்திதே தேவி
பரப்ருஹ்ம ஸ்வரூபிநி !!!!!
பரமேஸி ஜகன்மாதா
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !!!!
 
Back
Top