திருமூலர் நினைவு தினம்.

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
திருமூலர் நினைவு தினம்.

[h=1]திருமூலர் நினைவு தினம்.[/h][h=1]வாழ்க்கை நெறியை கற்று தரும் திருமந்திரம்... திருமூலர் திருநட்சத்திர தின பகிர்வு #Thirumoolar[/h]"ஒன்றே குலமும், ஒருவனே தேவன்..."என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமுதாயத்திற்கு வேண்டிய நல்லிணக்க செய்திகள் திருமந்திரத்தில் அழகாக விளக்கியவர் திருமூலர். ஆன்மிகம், மருத்துவம், விஞ்ஞானம், தத்துவம், உளவியல் என திருமூலர் தொடாத துறைகளே இல்லை. திருமூலர் இயற்றிய மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திர பாடல்களே இதற்கு சான்றாகும்.

தேவர் குறளும், திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும், முனிமொழியும் - கோவை
திருவாசகமும், திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர் - இது ஔவையார் பாடல்.

திருக்குறள், நால்வேதங்கள், மூவரின் தேவாரம், மணிவாசகர் திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம் ஆகிய 11 நூல்களின் கருத்தும் மனிதரைப் புனிதம் ஆக்கும் ஒரே வழியையே காட்டுகின்றன என்று ஔவையார் பாடியுள்ளதே திருமந்திரத்தின் சிறப்புக்கு சாட்சியாகும். திருமந்திரம் சைவ சமயத்திற்கு மட்டும் உரிய ஒரு சமய நூலாக அமையாது. உலக மக்களுக்கெல்லாம் அறத்தையும், ஆன்மிகத்தையும், மருத்துவத்தையும் எடுத்துரைக்கும் பொது நூலாக அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமந்திரம் ஆன்மிக வட்டத்திலேயே முடங்கி கிடக்கிறது. இதனை சமூகத்துக்கு பயன்பட வேண்டி, பலர் உரையெழுதியும், சொற்பொழிவாகவும் மக்களை சென்றடைய செய்கிறார்கள். அந்த வரிசையில் கடந்த முப்பது ஆண்டுகளாக திருமந்திர விளக்கவுரையாற்றி வரும் ஆன்மிக சொற்பொழிவாளர் மா.கி.இரமணன், இன்று திருமூலரின் திருநட்சத்திரத்தையொட்டி, திருமூலரைப் பற்றி பல அரிய தகவல்களையும், அவர் காட்டிய வாழ்க்கை நெறியையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

Excerpts:…..
அன்பே சிவம்

திருமந்திரம் ஆகமத்தின் சாரமாக அமைந்திருந்தாலும் அனைவரும் அறியக்கூடிய எளிமையும், இனிமையும் உடைய பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ‘அன்பே சிவம்’ என்ற தொடரைப் பலரும் அறிவோம். மனிதர்கள் ஏனைய மனிதர்கள்பால் செலுத்தும் அன்பில்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் தோன்றிய கடவுள் சார்புடைய மதங்களும், கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட அன்பினைப் பெரிதும் போற்றியே உரைக்கின்றன. இதைதான் நீங்கள் பிறர் மீது அன்பு செலுத்தினால் இறைவன் உங்கள் மேல் அன்பு செலுத்துவார் என்று திருமூலரும் வலியுறுத்தியுள்ளார்.

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
- திருமந்திரம் 270

உள்ளமே கோயில்
இறைவனை அறிவதற்கும் அடைவதற்கும் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அக வழிபாடு, மற்றொன்று புற வழிபாடு. இதில் அக வழிபாடு தியானம் அதாவது தவம், அதேபோல புற வழிபாடு பூஜை, தொண்டு ஆகியவைதான். உள்ளம் பெருங்கோயில் எனக்கூறிய ஆன்ம நேய அருட்கவி திருமூலர். கடவுள் வெளியே இல்லை உன் உள்ளேயும் இருக்கிறார் என்பது தான் கடவுள் பற்றிய இவரது ஒற்றை வரி கண்டுபிடிப்பாகும். இதைதான் அகம்பிரம்மா என்று வேதம் கூறுகிறது. எனவே உள்ளத்தில் அன்பு இல்லாமல் கூடைகூடையாய் கோயிலுக்கு லட்சார்ச்சனை செய்வதை விட, உள்ளன்போடு கடவுளை வணங்கினால் போதுமானது என்கிறார்.

Read more at: http://www.vikatan.com/news/spiritu...rticle-for-thirumoolar-thiru-natchathiram.art
 
Status
Not open for further replies.
Back
Top