• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருப்பேர் நகர் (கோவிலடி, அப்பக்குடத்தான

திருப்பேர் நகர் (கோவிலடி, அப்பக்குடத்தான

திருப்பேர் நகர் (கோவிலடி, அப்பக்குடத்தான்)


108 திவ்ய தேசங்களுள் ஒன்று. சோழமண்டலத்தைச் சேர்ந்தது.


இவ்வைணவ திருத்தலம் திருச்சிக்கு அருகில், லால்குடியிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில், கொள்ளிடத்தின் தெற்குக் கரையில், கோயிலடி என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த திவ்யதேசம், இந்திரகிரி மற்றும் பலாசவனம் என்ற புராதனப் பெயர்களாலும் அறியப்படுகிறது. இத்திருத்தலம், கர்னாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம், ஸ்ரீரங்கம், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய ஐந்து தலங்களும் பஞ்சரங்க ஷேத்திரங்கள் எனப்படுகின்றன. இங்குள்ள ராஜகோபுரம், நுட்பமான, அழகிய வேலைப்பாடுகள் நிறைந்தது. இரட்டை பிரகாரங்களுடன், கிட்டத்தட்ட 2.5 ஏக்கர் நிலப்பரப்பில், இக்கோயில் அமைந்துள்ளது


இவ்வாலயம், இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் மூலவர், அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்), மேற்கு நோக்கிய கிடந்த திருக்கோலத்தில், புஜங்க சயனத்தில், உபமன்யு (என்கிற மார்க்கண்டேய) முனிவரை வலக்கையால் அணைத்து ரட்சித்தவாறும், பால் நிறைந்த அப்பக்குடத்தை இடக்கையில் ஏந்தியும், காட்சியளிக்கிறார். தாயாரின் திருநாமங்கள் இந்திரதேவி மற்றும் கமலவல்லி.


தலபுராணம்: எம்பெருமான், அடியார்களின் இதயத்திலிருந்தும், அவ்வுறைவிடத்திலிருந்தும், தன்னை "பெயர்த்தெடுப்பது" இயலாத ஒன்று என்பதை உணர்த்துவதின் காரணமாக, திருப்பேர் நகர் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இத்தல புராணம் குறித்து வேத வியாசரின் பிரும்மாண்ட புராணத்திலும் சொல்லப்பட்டுள்ளது. உபமன்யு முனி, குழந்தையாக இருக்கையில் ஒரு முறை பசியால் அழுதபோது, சிவபெருமான் திருப்பாற்கடல் பாலை அவருக்கு அளித்த தகவல் சிவபுராணத்தில் உள்ளது. சிவபெருமான் தன் பக்தரான உபமன்யு முனிக்கு தந்த தரிசனம் முழுமை பெறும் வண்ணம், திருமாலும் முனிவருக்கு உதவியருளுவது போல் இங்கு அமைந்துள்ளது சிறப்பு !


இத்திருச்செயலுடன் தொடர்புடைய பழங்கதை ஒன்று, தலப்பெருமாளுக்கு "அப்பக்குடத்தான்" என்ற திருநாமம் ஏற்பட்ட காரணத்தை சுவைபடச் சொல்கிறது ! உபரிசரவசு என்ற பாண்டிய மன்னன், மதம் பிடித்த ஒரு யானையை வேட்டையாடச் சென்றபோது, தவம் செய்து கொண்டிருந்த ஒரு யோகியை தவறுதலாகக் கொன்று விட்டான். அதனால் மனமுடைந்த அவன், தன் அரச பதவியைத் துறந்து, பாப விமோசனம் வேண்டி, திருப்பேர் நகரில் கடுந்தவம் செய்தவுடன், சிவபெருமான், மன்னன் முன் தோன்றி, அருளாசிகள் வழங்கி, அவ்விடத்தில் பெருமாள் கோயில் ஒன்றைக் கட்டுமாறு பணித்தார்.


ஸ்ரீமன் நாராயணன், அவனுக்கு பாப விமோசனம் அளிக்கும் வரை, தினம் பெருமாளைத் தொழுது, பிராமணர்களுக்கு அப்பத்தையும், பாயசத்தையும் பிட்சையாக வழங்குமாறும் சிவபெருமான் கூறினார். அதன்படி, திருப்பேர் நகரில் கோயில் கட்டிய உபரிசரவசு, தினம் அவ்வாறே பிட்சை வழங்கி வந்தான். ஒரு நாள், பெருமாள், ஓர் ஏழை பிராமணர் உருவில் மன்னன் முன் வந்து, தான் நெடுந்தூரத்தில் இருந்து வருவாதாயும், கடும்பசியில் உள்ளதாயும் கூறி, உணவளிக்குமாறு வேண்டினார். நூறு பேருக்கான உணவை (அப்பங்களை) உண்ட பின்னரும் பெருமாள் தன் பசி தீர்ந்தபாடில்லை என்றுரைத்ததால், மேலும் உணவு சமைத்து வழங்க சற்று நேரம் ஆகுமென்பதால், பெருமாளை தன் வீட்டில் ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு மன்னன் வேண்டினான்.


அதே நேரத்தில், தன் பக்தனான மார்க்கண்டேயரின் முன் தோன்றிய சிவபெருமான், திருப்பேர் நகரில், ஒரு ஏழை பிராமணர் வடிவில், பெருமாள் வந்து தங்கியிருக்கும் விஷயத்தை (மார்க்கண்டேயர் தனது 16-வது வயதில் மரணம் அடைவார் என்று விதிக்கப்பட்ட காரணத்தின் பேரில்) அவரிடம் கூறி, அவருக்கு இறவா வரம் கிடைக்க, பெருமாளின் அருளாசியைப் பெறுவதே ஒரே வழி என்று கூறி மறைந்தார்.


மன்னனின் வீட்டுக்குச் சென்ற மார்க்கண்டேய ரிஷி, சயன கோலத்தில், ஒரு கையில் அப்பக்குடத்துடன் இருந்த ஏழை பிராமணரை நூறு முறை பணிந்தெழுந்தார். உடனே பெருமாள் அவருக்குத் தன் சுயரூபம் காட்டி, வலக்கையை உயர்த்தி அவரை ஆசிர்வதித்து, இறவா வரமளித்தார். உபரிசரவசுவுக்கும் சாப விமோசனம் வழங்கினார்.


மார்க்கண்டேயருக்கு ஆசி வழங்கிய அத்திருகோலத்திலேயே, திருப்பேர் நகரில் மூலவர் காட்சியளிக்கிறார். பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் பிரசாதமாக நைவேத்யம் செய்வதும் மரபானது. மார்க்கண்டேய ரிஷி இத்திருத்தலத்தில் இறவா வரம் வேண்டிப் பெற்றதால், அவர் தினம் ஸ்நானம் செய்த குளம் மிருத்யு விநாசினி என்று போற்றப்படுகிறது.


நம்மாழ்வார் திருவாய்மொழியின் முடிவில் எழுதிய திருப்பாசுரங்கள் இத்தலப் பெருமாளின் புகழ் பாடுவதை வைத்து, அவர் திருப்பேர் நகரில் மோட்சம் அடைந்ததாக நம்பப்படுகிறது. நம்மாழ்வார் இப்பதினோரு பாசுரங்களில், பெருமாள் திருமாலிருஞ்சோலையிலிருந்து திருப்பேர் நகர் வந்து, மாந்தர்க்கு காட்சியளித்து, தன் திருவயிற்று அப்பங்களை அவர்கட்கு வழங்கி, பசித்துயரை போக்குவதாகப் பாடியுள்ளார் ! "ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே" என்று உருகுகிறார்.


வைகுண்ட ஏகாதசியும், பங்குனி பிரம்மோத்சவமும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தினமும், பெருமாளுக்கு 'ஆறு கால பூஜை' நடைபெறுவது மரபு. இக்கோயிலுக்கு சோழ மற்றும் விஜயநகர மன்னர்கள் செய்த திருத்தொண்டுகள் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன.


மங்களா சாஸனம் -


பெரியாழ்வார் - 173, 205


திருமங்கையாழ்வார் - 1428-37, 1851, 1857, 2048, 2050, 2059, 2060, 2070, 2673 (70) , 2674 (118)


திருமழிசையாழ்வார் - 2417


நம்மாழ்வார் - 3744 - 54.


மொத்தம் 33 பாசுரங்கள்.
 

Latest ads

Back
Top