P.J.
0
திருப்பதியில் அனைத்து தரிசனங்களும் ஆன்&#
திருப்பதியில் அனைத்து தரிசனங்களும் ஆன்லைனில் பதிவு: 3 மணி நேரத்தில் சாமி தரிசனம்
நகரி, அக். 10–
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிக பக்தர்கள் வருவதால் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு செல்லும் நிலையும் ஏற்படுகிறது.
சாமி தரிசனம் செய்வதற்காக 5 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். கடந்த வாரம் தொடர்ந்து விடுமுறை தினங்கள் வந்ததால் தர்ம தரிசனத்தில் சாமி கும்பிட 35 மணி நேரம் ஆனது. இதனால் தேவஸ்தான அதிகாரிகள் மீது பக்தர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது.
நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 30,750 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று தர்ம தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் 31 அப்பார்ட்மெண்ட்களிலும் நிரம்பி வழிந்தனர். இதனால் தரிசனம் செய்ய 22 மணி நேரம் ஆனது.
இந்த நிலையில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும், உடனடியாக சாமி தரிசனம் செய்யவும் வழிவகை செய்யும் வகையில் உயர் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
திருப்பதியில் தற்போது ரூ.300 டிக்கெட் மட்டுமே ஆன்லைன் மூலம் விற்கப்படுகிறது. இனி எல்லா தரிசன டிக்கெட்டுகளையும் ஆன்லைன் மூலமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலவச தரிசனம், கைக்குழந்தைகளுடன் வருபவர்களுக்கு சிறப்பு தரிசனம், வி.ஐ.பி. தரிசனம், 50 ரூபாய் சுதர்சன டிக்கெட் தரிசனம் என அனைத்து தரிசனங்களுக்கான டிக்கெட்களும் ஆன்லைன் மூலம் வழங்கப்பட உள்ளன.
இதன் மூலம் குறித்த நேரத்துக்கு சென்று எளிதில் சாமி தரிசனம் செய்யலாம். அனைத்து பக்தர்களும் 3 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.
????????????? ??????? ???????????? ????????? ?????: 3 ??? ????????? ???? ??????? || tirupati all darshan online registration 3 hours darshan