• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருநல்கார்த்திகை

திருநல்கார்த்திகை

திருநல்கார்த்திகை“
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)


”மாதங்களில் நான் மார்கழி” என்று கணணன் உரைப்பினும், கார்த்திகையில், கார்த்திகை நட்சத்திரத்தில் அவன் பிறப்பித்த, திருமங்கை மன்னனாலும், நம்பிள்ளை என்ற ஆச்சார்யராலும், கார்த்திகை ரோஹிணியில் அவதரித்தத் திருப்பாணாழ்வாராலும், கார்த்திகை பரணி நட்சத்திரத்தில் பிறந்த “அருளாளப்பெருமாள் எம்பெருமானாராலும் இந்த கார்த்திகை மாதம் “நல் கார்த்திகை“யானது. கார்த்திகையில் அவதரித்த வடமதுரை தாமோதரனால் “திருநல்கார்த்திகை“ என்றழைக்கப்படுவதே சிறப்புடையதாம்..!


இதை அடியேன் கூறும் போது, நம் பூர்வாச்சாரியார்கள் ‘திருக்கமலபாதம்’ என்பதை மூன்றாகப் பிரிக்கின்றார்.
1. திருப்பாதம்: ‘துயரறு சுடரடி” இது துயர்போக்கும் பேரருளாளன் காஞ்சி வரதனைக் குறிக்கும்.
2. கமலப்பாதம்: ”பூவார் கழல்கள்” - புஷ்பம் போல் தரிசித்த மாத்திரத்தில் மனதிற்கு ஹிதத்தைத் தரக்கூடிய திருவேங்கடமுடையானுடைய கமலப்பாதம்.
3. திருக்கமலப்பாதம்: ”பொது நின்ன பொன்னங்கழல்’
சமஸ்தலோகத்திற்கும், அனைவரையும் உஜ்ஜீவிக்கச் செய்யக்கூடியதான, எல்லாருக்கும் பொதுவான பாதங்கள். இது ஸ்ரீரெங்கநாதனுடையது!
என அனுபவித்தது நினைவுக்கு வருகின்றது.


கார்த்திகையில் கார்த்திகை அவதரித்தத் திருமங்கையாழ்வாரே, வைகுந்த ஏகாதசித் திருவிழாவினை ஆழ்வார்களின் அருளிச்செயல் விழாவாக மாற்றியமைத்த முன்னோடியாவார்..!


நம்பெருமாள், கார்த்திகையில் கார்த்திகையன்று, கலியனை (திருமங்கை மன்னன்) மறக்கவியலாமல், சேர பாண்டியன் சிம்மாஸனத்தில், சுந்தரபாண்டியன் திருமுத்துப் பந்தலின் கீழ், ஹரிஹர ராயன் திருப்பள்ளிக் கட்டிலின் மேல், கலியன் பாட்டினை ஆனந்தமாகக் கேட்டு, அனுபவித்துக்கொண்டிருக்கையில் கோவணவர் (மணியக்காரர்) கொடவர் (இவரது வம்சம் தற்போதில்லை) கொடுவாள் எடுப்பார் (கந்தாடை முனி) ஆடுவார் (தாஸிகள்) பாடுவார் (அரையர் ஸ்வாமிகள்) தழையிடுவார் (வாதுால தேசிகர் - (ஸ்தலத்தார்களில் ஒருவர்)) மற்றுமுள்ள இராமனுஜ அடியோர்களும், நம் சடகோபனுக்கு (கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றுவதற்காக ஸ்ரீரங்கம் எழுந்தருளுகையில், ”நம் சடகோபனைப் பற்றி பாடினாயோ..?” என்று அரங்கன் வினவ, கம்பர் சடகோபர் அந்தாதி பாடிய பிறகே இராமாயணம் பாட அனுமதி கிடைத்தது வரலாறு.” - இங்கு சடகோபனுக்கும் “நம் சடகோபன்“ என்ற பெயர் ஏற்றம் கவனிக்கத் தக்கது..!) முன் பெற்ற பெரும் பேற்றினைத் தரவேணும் என விண்ணப்பித்தனர்..!


இடைப்பட்ட சிறிது காலமாக இந்த உற்சவம் நடைபெறவில்லையா அல்லது ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வார் எழுந்தருளவில்லையா.? எனத் தெரியவில்லை..! மீண்டும் இந்த உற்சவம் நடைபெற எண்ணினார்கள் கோவிலார்கள்..! ஏற்றத் தருணம் எது..? என்று காத்திருந்தனர்..! கலியன் பாட்டினை நம்பெருமாள் ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டிருக்கும் காலமே உகந்தது என எண்ணி விண்ணப்பம் செய்தனர்..! அவர்கள் நினைத்தது நடந்தது..! உடனே நம்பெருமாள், நம்மாழ்வார் இங்கு வரக்கோரி ஒரு ஸ்ரீமுக பட்டயத்தினையும், தாம் சாற்றி களைந்த சந்தனமும், சூட்டிக் கழிச்ச சுகந்தமும், உடுத்திக் களைந்த உடையையும், சடகோபனுக்கு மரியாதை பொருட்டு, வாதுால தேசிகர் மூலம், ஆழ்வார் திருநகரிக்கே அனுப்பி வைத்து, முக்யமான கைங்கர்யபரர்கள் தவிர அனைத்துக் கோவிலார்களையும் கூடவே அனுப்பி வைத்தார்..! இங்கிருந்து சென்ற கோவிலார்கள், நம்மாழ்வாரை அங்கிருந்தே எழுந்தருளச் செய்து, வைகுந்த ஏகாதசியினைக் கொண்டாடியதாக வரலாறு..! மிக மிக முக்கியமான சில கைங்கர்யபரர்களைத் தவிர, கோவிலார்கள் அனைவரும் கோலகலமாக நம்மாழ்வாரை எழுந்தருளச் சென்றுவிட்டமையினால், இங்கு வேதம் ஓதுதல், திவ்யபிரபந்தங்களை அத்யயனம் (அத்யயனம் என்றால் சொல்லுதல் என்று பொருள்..!) செய்தல் ஆகியன நம்மாழ்வார், இங்கு ஸ்ரீரங்கம் வரும்வரை நின்று போயின..! இதனை நினைவுகூறும் வகையில் இன்றும் ஸ்ரீமுகபட்டயம் வாசித்தபின்பு, அனத்யயன காலம் (வேத, திவ்யபிரபந்தங்கள் சொல்லாமலிருத்தல்) என்று அனுஷ்டிக்கப்படுகின்றது..!


நம்பெருமாள் எப்போது பரவசப்பட்டாலும், அவசரப்பட்டாலும் அர்ச்சகர்களின் கைத்தலத்தில் (கைகளில் எழுந்தருளுதல்) எழுந்தருளுதல் வழக்கம்..! கைத்தலம் என்றால் உடனேயே எழுந்தருளி விடலாமல்லவா..! நம்மாழ்வாரை அழைத்து வர ஆணையிட்ட சந்தோஷம், நம்மாழ்வார் எழுந்தருளுதலினால் கொண்ட மகிழ்ச்சி எல்லாம் மேலிட, இன்றும் கார்த்திகை ஸ்ரீமுகபட்டயம் வாசித்தப்பின்பு, அன்பு மேலிட்டு, அரங்கன் கைத்தலத்தில் எழுந்தருளுதல் கண்கொள்ளாக் காட்சியாம்..!


நம்மாழ்வார், ஆழ்வார் திருநகரியிலிருந்து எழுந்தருளுதலில், நடுவே நிறைய சிரமங்களிலிருந்தன..! எனவே சில நுாற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீரங்கம் திருக்கோயிலிலேயே நம்மாழ்வார் விக்ரஹம் ஒன்று பிரதிட்டை செய்யப்பட்டது. தற்சமயம் ஸ்ரீமுகபட்டயமானது சேனை முதலியார் ஸந்நிதியில் வைக்கப்பட்டு, பின்பு இங்குள்ள நம்மாழ்வார் ஸந்நிதியில், நம்பெருமாளின் விருதுகளுடன் சமர்ப்பிக்கப்படும். இந்த ஆனந்தத்தில், நம்மாழ்வாரும் கைத்தலத்தில் எழுந்தருளுவார். ஆக, கார்த்திகையில் கார்த்திகை, ஒரு மகத்தான நாள்..! ஆழ்வார் ஆச்சார்யர், அவதரித்த நல்கார்த்திகையாம்..! நம்பெருமாள், பின்பு நம்மாழ்வார் ஆனந்தித்துக் கொண்டாடி, நம் அனைவரையும் கைத்தல சேவையில் அனுக்ரஹிக்கும் “திருநல்கார்த்திகை”..!
 

Latest ads

Back
Top