• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருக்கோஷ்டியூர் தெப்பம்

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவிலில் மாசிமகத்தன்று தெப்பத் திருவிழா நடக்கிறது. பக்தர்கள் தங்களின் கோரிக்கை நிறைவேற குளக்கரையில் ஏற்றும் விளக்குகளை எடுத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர்.

பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் மூன்று உலகங்களையும் அடிமைப்படுத்தினான். இதனால் அவனது அட்டூழியம் அதிகரித்தது. அவனை அழிப்பதற்காக பூலோகத்தில் கதம்ப மகரிஷியின் ஆஸ்ரமத்தில் தேவர்கள் ஆலோசித்தனர். அந்தக் கூட்டத்திற்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் தலைமையில் சப்தரிஷிகள் கோஷ்டியாக வந்தனர். இதனால் இத்தலம் 'திருக்கோஷ்டியூர்' எனப் பெயர் பெற்றது. இங்கு சவுமிய நாராயணப் பெருமாள் என்ற பெயரில் மகாவிஷ்ணு அருள்பாலிக்கிறார்.

விருப்பம் நிறைவேற தெப்பத் திருவிழாவன்று இங்கு குளக்கரையில் ஏற்றிய அகல் விளக்கை, வீட்டுக்கு எடுத்து வர வேண்டும். கோரிக்கை நிறைவேறிய பின், அத்துடன் புதிய அகல் ஒன்று வாங்கி அடுத்த ஆண்டு மாசிமகத்தன்று குளக்கரையில் ஏற்ற வேண்டும். இந்த இரண்டு விளக்குகளை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வர். நமக்கு கிடைத்த நன்மை பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே விழாவின் நோக்கம்.
இந்த ஊரில் வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் உபதேசம் பெற வந்தார் ராமானுஜர். 'யார் நீ?' என்று நம்பி கேட்க, 'நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,” என்றார். வீட்டுக்குள் இருந்தபடியே, 'நான் செத்த பின் வா!' என்றார் நம்பி. புரியாத ராமானுஜர் அங்கிருந்து புறப்பட்டார்.

இப்படி 17 முறை இந்நிலை தொடர்ந்தது. 18வது முறை 'அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன்' என்று சொல்ல, நம்பி அவரை சீடராக ஏற்று 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை உபதேசித்ததுடன், 'ராமானுஜா இதை நீ மட்டும் சொன்னால் சொர்க்கம் கிடைக்கும். பிறரிடம் சொன்னால் நரகம் செல்வாய்' என்று எச்சரித்தார். இருந்தாலும் ராமானுஜர் கோயில் விமானத்தின் மீதேறி மந்திரத்தை ஊரறியச் சொன்னார். குருநாதரரான நம்பி கண்டித்தார்.

'குருவே! நான் ஒருவன் நரகம் போனாலும் இந்த ஊர் மக்கள் சொர்க்கம் போவார்களே!' என்றார் ராமானுஜர். இதனடிப்படையில் விமானத்தின் மீது ராமானுஜர் சிலை உள்ளது.

கருவறையில் மூலவர் சவுமிய நாராயணருடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன். மது, கைடபர் என்னும் அரக்கர்கள், இந்திரன், புரூருப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, சந்தான கிருஷ்ணர், பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி காட்சி தருகின்றனர்.

எப்படி செல்வது: மதுரையிலிருந்து 62 கி.மீ., துாரத்தில் திருப்புத்துார். அங்கிருந்து 8 கி.மீ.,
விசேஷ நாட்கள்: மாசிமகம்
நேரம்: காலை 6:00 -- 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 94862 32362, 04577 - 261 122
அருகிலுள்ள தலம்: 8 கி.மீ., துாரத்தில் திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில்
 

Latest ads

Back
Top