தமிழ் தெரியுமா? Tamil Quiz -2

Status
Not open for further replies.
தமிழ் தெரியுமா? Tamil Quiz -2

Chera,+Choza+Flags.jpg


Do You Know Tamil?
Score level:
25 –30 You are a Tamil Scholar!
15-25 Well Done! You are good at Tamil.
10-15 Not good at Tamil.
Under Ten- Are you a Tamil?


இந்த சங்க கால மன்னர்களைக் கண்டு பிடிக்க முடியுமா?

31)காழசோகல்ரின்
32)இபெழுதிருளம்வ
33.பெருழகோசோப்ஞ்ன்
34)முபெருதுழுதிமிப்வகுடு
35)தஞ்சேலாநெடுரன்
36)நெசெயன்டுஞ்ழி
37)அஅஞ்தியடுமான்மான்சிநெ
38)கரும்இணைக்பொகால்றை
39)நறன்மான்
40)கிநெள்ளிடுங்


கீழ்கண்ட நூல்களை எழுதியவர் யார்?
41)மணிமேகலை
42)சிலப்பதிகாரம்
43)பெரியபுராணம்
44)திரு அருட்பா
45)கண்டதும் கேட்டதும்
46)பாஞ்சாலி சபதம்
47)மனோன்மணீயம்
48)மதுரைக் காஞ்சி
49)திருமுருகாற்றுப்படை
50)திரிகடுகம்


51)மணிக்கொடி காலம் என்ற நூலை எழுதியவர் யார்?
52)கடலோடி என்ற நூலை யார் எழுதினார் ?
53)பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணமென்ப- என்று கூறியது யார்?
54) ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பொன் மொழி யாருடையது?
55)நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை—யாருடைய வாசகம் இது?
56)கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென் என்று யார் பாடினார்?
57)சரஸ்வதி/ கலைமகள் மீது சகல கலா வல்லி மாலை பாடியவர் யார்?
58)தொல்காப்பியத்தில் எத்தனை அதிகாரங்கள் இருக்கின்றன? அவை யாவை?
59)பெருந்திணை, கைக்கிளை என்றால் என்ன?
60.பத்துப் பாட்டில் நக்கீரர் எழுதிய இரண்டு நூல்கள் எவை?

Pandya+Flags.jpg


(Pictures of Tamil Flags are imaginary. Nobody knew how they looked like.)

ANSWERS, விடைகள்:
31)கரிகால்சோழன் 32)இளம்பெருவழுதி 33)கோப்பெருஞ் சோழன் 34) முதுகுடுமிப் பெருவழுதி 35)நெடுஞ்சேரலாதன் 36)நெடுஞ்செழியன்
37)அதியமான் நெடுமான் அஞ்சி 38)கணைக்கால்இரும்பொறை 39)நன்மாறன் 40) நெடுங்கிள்ளி 41)சீத்தலைச் சாத்தனார் 42)இளங்கோ அடிகள் 43) சேக்கிழார் 44)ராமலிங்க சுவாமிகள் 45)உ.வே.சுவாமிநாதய்யர் 46)பாரதியார் 47)சுந்தரம் பிள்ளை 48)மாங்குடி மருதன் 49)நக்கீரன் 50)நல்லாதனார் 51) பி.எஸ்.ராமையா 52)நரசையா 53)தொல்காப்பியர் 54)திருமூலர் 55) அவ்வையார் 56)அப்பர் 57)குமர குருபர சுவாமிகள் 58)மூன்று அதிகாரங்கள். அவை எழுத்து, சொல், பொருள் அதிகாரங்கள் 59) பெருந்திணை= பொருந்தாக் காமம் (நோ எண்ட்ரீ), கைக்கிளை= ஒரு தலைக் காமம்/காதல் (ஒன் வே ட்ராFபிக்) 60)திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை


For more, contact [email protected]
 
Status
Not open for further replies.
Back
Top