P.J.
0
தமிழ்நாடு முழுவதும் ஆதார் அட்டை பதிவு செ
தமிழ்நாடு முழுவதும் ஆதார் அட்டை பதிவு செய்ய 469 முகாம்கள்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆதார் அட்டை பதிவு செய்ய 469 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த காங்கிரஸ் அரசில் ஆதார் அடையாள அட்டை திட்டம் தொடங்கப்பட்டது. அதன் மூலம் மத்திய அரசின் மானியங்களை பொதுமக்களுக்கு வழங்கவும், தேசிய அடையாள அட்டையாக அதை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜ.க. அரசு ஆதார் அட்டை திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டவில்லை. அது கைவிடப்படலாம் என்றும் கூறப்பட்ட நிலையில், மீண்டும் ஆதார் அடையாள அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. அதனால், ஆதார் அட்டையை பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆதார் அடையாள அட்டைக்கு கைவிரல் ரேகை, கண் கருவிழி ஆகியவை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் அட்டைக்கான பயோமெட்ரிக் பதிவு நடந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் 2 ஆம் கட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன. விடுபட்ட மாவட்டங்களில் இந்த பணி தற்போது நடைபெற்று வருகிறது.
ஆதார் அட்டைக்கு பதிவு செய்துகொள்ள தற்போது தமிழ்நாட்டில் 268 நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பதிவு விரைவாக நடைபெறும் வகையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 469 நிரந்தர முகாம்கள் அமைக்கப்படுகின்றன.
சென்னை மாநகராட்சி பகுதியில் இதுவரை 18 நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை உயர்த்தி 50 நிரந்தர முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்காலிக முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அதன் பிறகே பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும். ஆனால், நிரந்தர முகாம்களில் விண்ணப்பம் பெற்ற ஒன்றிரெண்டு நாட்களில் பதிவு செய்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 8 ஆயிரத்து 18 பேரிடம் பயோமெட்ரிக் முறையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 4 கோடியே 67 லட்சம் பேருக்கு ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் 25 லட்சத்து 94 ஆயிரம் பேரிடம் பயோமெட்ரிக் முறையில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 67.47 சதவீதம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவாக 89.23 சதவீதம் பேர் ஆதார் அட்டைக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 85.65 சதவீதம், அரியலூர் மாவட்டத்தில் 81.61 சதவீதம், திருச்சி மாவட்டத்தில் 81.61 சதவீதம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 81.54 சதவீதம் ஆதார் அட்டை பதிவு நடைபெற்றுள்ளது.
????????? ????????? ????? ????? ????? ????? 469 ?????????!