• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தமிழர்களின் தழை உடை-1

Status
Not open for further replies.
தமிழர்களின் தழை உடை-1

tamils-skirt-of-reeds.jpg

Picture shows the reed skirt worn by women of Hawaii (USA)

(English version of this article is also posted in the blogs: London swami)

தமிழர்களின் தழை உடை (Reed Skirt) பற்றி சங்க இலக்கிய நூல்களில் நிறைய குறிப்புகள் உள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப் பெண்கள் எப்படி உடை அணிந்தார்கள் என்று கண்டுபிடிக்க பல சிற்பங்களையும் ஓவியங்களையும் கூர்ந்து கவனித்தேன். ஆனால் தழை உடை பற்றி கிடைக்கவில்லை. இப்பொழுது பசிபிக் தீவுகளில் தழை உடை அணியும் படம் கிடைத்தவுடன் மீண்டும் இது பற்றி ஆய்வைத் துவங்கினேன்.

தழை உடையை எல்லாப் பெண்களும் அணியவில்லை. கானகப் பகுதிகளில் வாழ்ந்தவர்களும் விலை மாதர்களும் அணிந்தனர். உடனே இந்த உடை பற்றி தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள். யாகம் செய்யும் பிராமணர்களும் தர்ப்பைப் புல்லால் செய்யப்பட்ட தழை உடைகளையே அணிந்தார்கள்(*reference is given at the end). இப்போதும் ஹவாய் முதலிய பசிபிக் மஹா சமுத்திரத் தீவுகளில் தழை உடை அணிகிறார்கள். இது பாவாடை போல இருக்கும்.

தழை உடை பற்றிய குறிப்புகள்: குறுந்தொகைப் பாடல் 125,159,214,294; குறிஞ்சிப்பாட்டு வரி 102; ஐங்குறு நூறு 72. இது தவிர, அக நானூறு, கலித்தொகையிலும் பல பாடல்களில் தழை அணி வருகிறது.

36 வகை ஆடைகள் (36 Types of Clothes)

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தமிழர்களின் 36 வகை உடைகளின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். அவையாவன: கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண் துகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபடம், சித்திரக் கம்மி, குருதி, கரியல், பேடகம், புரியட்டம், காசு, வேதங்கம், புங்கர் காழகம், சில்லிகை, துரியம், பங்கம், நல்லியம், வண்டை, கவற்றுமடி, நூல் யாப்பு, தேவாங்கு, திருக்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், கிறைஞ்சி, செம்பொத்தி, பனிப்பொத்தி. இவைகளில் சில கடாரம், காழகம் (மலேசியா, பர்மா), கூர்ஜரம் (குஜராத்) ஆகிய இடங்களில் இருந்து இறக்குமதியானது பெயரில் இருந்தே தெரிகிறது. அதே போல நமது துணிகள் எகிப்திய நாட்டின் இறந்தோர் உடலைச் (மம்மி) சுற்றவும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

எகிப்திய நெய்தல் தெய்வத்தின் பெயர் நெய்த்(Neith). இதுவே தமிழ்ச் சொல்!

தமிழர்களின் நெசவுத்திறன்

464px-mohenjo-daro_priesterkc3b6nig.jpeg

Picture shows the embroidered shawl of Indus priest king

வேத காலத்தில் எழுந்த பிராமணங்கள் என்னும் நூல்களிலும் சங்க இலக்கியத்திலும் பூ வேலைப்பாடு (Embridered) அமைந்த ஆடைகளைச் செய்ததாக எழுதிவைத்துள்ளனர். இந்த ஆடையை சிந்து சமவெளி புரோகிதரின் (Priest/ King) உடலிலும் காணமுடிகிறது. இதைப் புறநானூறு “ நீலக் கச்சை பூவார் ஆடை” (புறம். 274, உலோச்சனார்) என்று புகழ்கிறது.
ஆண்கள் மேல் துண்டும், கீழே வேஷ்டியும் மட்டும் அணிந்தனர். “உண்பது நாழி, உடுப்பவை இரண்டே” (புறம்.189) என்ற நக்கீரர் வாக்கியத்தால் இதை அறியலாம். மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சியும் இதை உறுதிப்படுத்துகிறது:

“ திண்டேர் பிரம்பிற் புரளும் தானை
கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்தடி” (மதுரை. வரிகள் 435-436)

மேல் சட்டையை சிலர் அணிந்தனர். வீரர்கள், பொற்கொல்லர் ஆகியோர் அணிந்ததை பாடல்கள் காட்டுகின்றன. மேல் சட்டைக்கு ‘கஞ்சுகம்’ என்று பெயர்.
மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்ட அந்நிய நாட்டவர்கள் (யவனர்கள்) சட்டை அணிந்ததையும் முல்லைப் பாட்டு கூறுகிறது:

“ உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம்புகு மிலேச்சர்” (வரி 66-67)

தமிழர்கள் நெய்த ஆடை மிகமிக மெல்லியதாக இருந்ததைப் புலவர்கள் பல இடங்களில் பாடி இருக்கின்றனர்: “இழையறிவாரா, வொண் பூங்கலிங்கம்” (புறம். 383) என்றும் பாம்பின் தோல் போல மெல்லிய ஆடைகளை மன்னன் நல்கினான்: “நோக்கு நுழைகல்லா நுண்மைய பூகனிந்து அரவு உரி அன்ன அறுவை துவர” (பொருநர். 82-83) என்றும் பாடுகின்றனர். மஸ்லின், நைலான் போன்ற சிறந்த ஆடைகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தன!!

( அறுவை, கலிங்கம்=துணி, அரவு உரி= பாம்புத் தோல் )
தொடரும்…………. (பகுதி இரண்டில் பெண்களின் ஆடைகள், தமிழர்களின் Brassiere பிரா—கண்டுபிடிப்பு, கூரைப்புடவை, கல்யாணப் புடவை முதலியவற்றைக் காண்போம்).

For more of the same, contact: [email protected]

*REED DRESS reference in the Vedic Literature is given below:

From “India of the age of the Brahmanas” by Jogiraj Basu:
“ When a cloth is woven it is embroidered at the border before the actual texture is woven; it is embroidered in the middle and again it is embroidered at the end” (Aitareya Brahmana 2-11-10)
Special garments were prescribed for the priests performing sacrifice. Skirts made up of Kusa grass were used in certain sacrifices. From the Satapata Brahmana we learn that the sacrificial garment consisted of a garment of pure wool not dyed, an under garment made of silk called “taarpya”, an outer garment like adhi vaasa and a head dress or turban (Usniisa). Kings and queens wore such head dress. Indra’s wife Indrani had a most variegated (multi coloured and embroidered) head band, says Satapata Brahmana14-2-1-8

Sages, mendicants and Brahmacharis used to put on garment made of hides of black(deer) antelope (krisnaajina).

Female ascetic Sabari in the Ramayana was called Krishnaajinaambharadharaa i.e. one who puts on the garment made of black deer skin.
******
 
தமிழர்களின் தழை உடை-1

வணக்கம்

தழை உடையை பற்றி பேசும்போது "நார்மடி" புடவை கவனத்துக்கு வருகிறது. சென்ற தலைமுறை வரை வயதான பிராம்மண பெண்மணியர் "நார்மடி" புடவை உடுத்துவது வழக்கமாக இருந்தது . "நார்மடி" கத்தாழை நாரிலிருந்து நெய்து வந்ததாக தெரிகிறது . எனது தந்தை வழி மற்றும் தாய் வழி பாட்டியார் இருவரும் "நார்மடி" புடைவை உடுத்தி வந்தனர் . மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகத்திலும் பூஜை மற்றும் புரோஹிதம் செய்யும் பிராம்மணர்கள் "நார்மடி" வேஷ்டி உடுத்துவதையும் கண்டிருக்கிறேன் .

ப்ரஹ்மண்யன்,
பெங்களூரு
 
Dear Sri Brahmanyan

It is very interesting indeed. Kanchi Paramacharya says even ear ornament THODU comes from Thadangam (Palmyra leaf roll). It looks like our ancients wore only natural things. Now I wonder whether it is KOORAI pudavai or KORAI pudavai (Sari made of Korai grass). If anyone throws any fresh light on this, like your Narmadi, it will be a good food for our future researchers.
 
My grand mother when she purchased New narmadi pudavai first she dips in saniwater (cowdung mixed water) to make it pure. They feel narmadi is used for aacharam.
 
தமிழர்களின் தழை உடை-1

Dear Sri Brahmanyan

It is very interesting indeed. Kanchi Paramacharya says even ear ornament THODU comes from Thadangam (Palmyra leaf roll). It looks like our ancients wore only natural things. Now I wonder whether it is KOORAI pudavai or KORAI pudavai (Sari made of Korai grass). If anyone throws any fresh light on this, like your Narmadi, it will be a good food for our future researchers.
Dear Sri Swaminathan,

The name Koorai pudavai means that the saree is the product of "கூறைநாடு Village near Mayavaram noted for the manufacture of sarees; மாயவரத்திற்கு அருகில் சேலைகள்மிகுதியாக நெய்யப்படும் ஓர் ஊர்", just like Conjeevaram or Arni Sarees.

Brahmanyan,
Bangalore.
 
தமிழர்களின் தழை உடை-1

Dear Sri Brahmanyan

It is very interesting indeed. Kanchi Paramacharya says even ear ornament THODU comes from Thadangam (Palmyra leaf roll). It looks like our ancients wore only natural things.. ...../QUOTE]


அன்பர் ஸ்ரீ சுவாமிநாதன் அவர்கட்கு
உண்மையே, பழங்காலத்தில் பனைஓலை சுருளையே காதணியாக தரித்து இருந்தனர் அதற்கு ஓலை என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. ஓலை எனக்கூறப்படுவது பலை ஒலையை ஆகும்.இன்று கூட நமது இல்லங்களில் வரலட்சுமி நோன்பன்று அம்மனுக்கு காதோலை-கருகமணி அணிவிப்பது வழக்கம்.

சமீபத்தில் படித்த கட்டுரை ஒன்றில் "தாலி"(திருமாங்கல்யம்) பண்டைய காலங்களில் பனை ஓலையில் செய்து மஞ்சள் கயிற்றில் சேர்த்து கட்டினார்கள் என்று அறிய வந்தேன் . "தாலி" என்ற சொல் தாளபத்ரம் (பனை ஓலை ) என்ற வடமொழி சொல்லிலிருந்து மருவி இருக்கலாம் என ஊஹிக்கப்படுகிறது .

வணக்கம்
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு

.
 
Last edited:
தாலி பற்றிய உங்கள் விளக்கமும், கூறைநாடு பற்றிய உங்கள் விளக்கமும் மிகவும் அருமையானவை. ஆனால் அதை சிவப்பு நிறத்தில் மட்டும் ஏன் அணிகிறார்கள்? மேலும் ஆண்டாளும் வாரணமாயிரத்தில் கூரைப் புடவை பற்றிக் கூறுகிறாரே, அப்பொழுதிலிருந்தே இப்புடவை---1300 ஆண்டுகளாக--- கூறைநாட்டில் நெய்கிறார்களா? மேற்கொண்டு தகவல், யாரிடமாவது இருந்தால் தரவும்.
 
.

36 வகை ஆடைகள் (36 Types of Clothes)

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தமிழர்களின் 36 வகை உடைகளின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். அவையாவன: கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண் துகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபடம், சித்திரக் கம்மி, குருதி, கரியல், பேடகம், புரியட்டம், காசு, வேதங்கம், புங்கர் காழகம், சில்லிகை, துரியம், பங்கம், நல்லியம், வண்டை, கவற்றுமடி, நூல் யாப்பு, தேவாங்கு, திருக்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், கிறைஞ்சி, செம்பொத்தி, பனிப்பொத்தி. இவைகளில் சில கடாரம், காழகம் (மலேசியா, பர்மா), கூர்ஜரம் (குஜராத்) ஆகிய இடங்களில் இருந்து இறக்குமதியானது பெயரில் இருந்தே தெரிகிறது. அதே போல நமது துணிகள் எகிப்திய நாட்டின் இறந்தோர் உடலைச் (மம்மி) சுற்றவும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

எகிப்திய நெய்தல் தெய்வத்தின் பெயர் நெய்த்(Neith). இதுவே தமிழ்ச் சொல்!

******

அன்பர் ஸ்ரீ சுவாமிநாதன் அவர்கட்கு,

வணக்கம்,
தங்கள் தமிழர்கள் அளிக்கும் உடை பற்றிய விவரங்கள் மிகவும் அருமையானவை . "தேவாங்கு"
என்ற சொல் கோவையில் நூல் புடைவை நெசவில் ஈடுபட்டுள்ள வகுப்பினர்களை "தேவாங்க
செட்டியார்" என அழைக்கப்படுவதை குறிப்பிட விரும்புகிறேன் . இவர்கள் தெலுங்கு அல்லது
கன்னடம் பேசுபவர்கள் ஆவர். தவிர பட்டு நெசவில் ஈடு பட்டிருப்பவர்கள் பட்டுநூல்காரர்
என்ற வகுப்பினர்கள் யாவரும் சௌராஷ்டிரா ஆவர்.மதுரை, காஞ்சி, ஆரணி ,திருபுவனம், மற்றும் பட்டு நெசவு உள்ள நகரங்களில் வசித்து வருகின்றனர்,விஜயநகர ஆட்சிகாலத்திலும் மற்றும் "நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சௌராட்டிரப் பகுதியிலிருந்து சௌராட்டிரர்கள் தமிழகத்தில் குடியேறினர். இவர்களைப் பட்டுநூல்காரர் எனத் தமிழர் குறிப்பிட்டனர். இவர்கள், மங்கம்மாள் காலத்தில், பிராமணரைப்போலத் தமக்கும் பூணூல் போட்டுக் கொள்ளும் உரிமை வேண்டிப் பெற்றனர் என்பர்." இவர்கள் பற்றிய விவரங்கள் அறிய முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன். அதிகம் கிடைக்கவில்லை .
நலம்கொரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு.
 
இதை நார்பட்டு என்றும் சொல்வதுண்டு.

வணக்கம்

தழை உடையை பற்றி பேசும்போது "நார்மடி" புடவை கவனத்துக்கு வருகிறது. சென்ற தலைமுறை வரை வயதான பிராம்மண பெண்மணியர் "நார்மடி" புடவை உடுத்துவது வழக்கமாக இருந்தது . "நார்மடி" கத்தாழை நாரிலிருந்து நெய்து வந்ததாக தெரிகிறது . எனது தந்தை வழி மற்றும் தாய் வழி பாட்டியார் இருவரும் "நார்மடி" புடைவை உடுத்தி வந்தனர் . மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகத்திலும் பூஜை மற்றும் புரோஹிதம் செய்யும் பிராம்மணர்கள் "நார்மடி" வேஷ்டி உடுத்துவதையும் கண்டிருக்கிறேன் .

ப்ரஹ்மண்யன்,
பெங்களூரு
 
Dear Sri Brahmanyan

I am from Madurai and many of my friends are Sourshtras/Pattu Nul Kararkal.
If you want general information about them just google 'Sourashtra community' and you will see a lot.
When I worked for the BBC World Service in London I had a request from a research scholar in Tamilnadu for a booklet about Sourashtra community which is available only in the British Library,London. Just a ten page booklet published from Madurai in 1930s or 1940s. I went all the way to British Library and photocopied it and posted to him. It is strange that all the Sourashtras threw it into dustbin, but the British Library has saved it for the posterity!
 
Dear Sri Swaminathan,

Glad to know that you are from Madurai. I am a student of Madura College and did my intermediate there in 1948-50.
I had a few friends from Sourashtra Community, one of them from the famous NMR family. It is a pity we do not evince interest in our History. We have to rely on outside sources for knowing our past.

Regards,
Brahmanyan,
Bangalore.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top