• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

தன்னம்பிக்கை நாராயணன்!

Status
Not open for further replies.
தன்னம்பிக்கை நாராயணன்!

தன்னம்பிக்கை நாராயணன்!

vellorechari_1.jpg



வேலூர் கோட்டைக்குள் செல்லும் அனைவரும் வியந்து பார்க்கும் மனிதர் நாராயணன். காரணம் கோட்டைக்குள் அவரின் இரண்டு கண்களும் தெரியாத நிலையிலும், நம்பிக்கை இழக்காமல் சுய முயற்சியின் மூலம் நாற்காலி இருக்கைகளின் ஒயர்களை பின்னும் வேலையை செய்து வருகிறார்.

வேலூர் கோட்டைக்குள் செல்லும் அனைவரும் வியந்து பார்க்கும் மனிதர் நாராயணன். காரணம் கோட்டைக்குள் அவரின் இரண்டு கண்களும் தெரியாத நிலையிலும், நம்பிக்கை இழக்காமல் சுய முயற்சியின் மூலம் நாற்காலி இருக்கைகளின் ஒயர்களை பின்னும் வேலையை செய்து வருகிறார்.

நாராயணனிடம் பேசினால், "தருமாபுரம் என்ற சின்ன கிராமத்தில் வறுமையான குடும்பத்தில் ஐந்து பேருடன் பிறந்தவன் நான். சின்ன வயதில் ஏற்பட்ட வயிற்று போக்கின் காரணத்தால் என் கண் பார்வையை இழந்து விட்டேன். மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாத நிலைதான் என் குடும்பத்தில் இருந்தது. நான் தோட்ட வேலை, கொளுத்து வேலை போன்று என்னால் முடிந்த கூலி வேலைகளை செய்து வந்தேன். கொஞ்ச நாள் கழித்து திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் நாற்காலிகளின் ஒயர் பின்னுவதற்கு பயிற்சி எடுத்தேன்.

அதன் பிறகு 1986 முதல் இந்த வேலைதான் செய்து வருகிறேன். அப்போது 15 ரூபாய்தான் இந்த வேலைக்கு கிடைக்கும் இப்போ கொஞ்ச கொஞ்சமா உயர்ந்து ஒரு சேருக்கு ஒயர் பின்னுனா 250 தராங்க என்றார். வீட்டிலிருந்து கோட்டைக்கு தனியாகவே பேருந்தில் வந்து செல்கிறார்.

வேலூர் கோட்டைக்குள் மற்றும் வேலூரில் உள்ள அரசு அலுவலகங்களில் சேர் பின்னுவது என்று சொன்னால் அனைவரும் நாராயணனைதான் அணுகுகிறார்கள். அவ்வளவு வேலை சுத்தமாம். "என் உயிர் இருக்கும் வரை உழைத்துதான் சாப்பிடனும்" என்று நம்பிக்கை மிளிர சொல்கிறார்.
இதுவரை 10 பேருக்கு மேல் இந்த வேலையை எந்த ஒரு ஊதியமும் இல்லாமல் சொல்லிக்கொடுத்துள்ள
இவர் மாற்று திறனாளி அல்ல, உலகை மாற்றும் திறனாளி என்றுதான் சொல்ல வேண்டும்.

சு.ராஜா ( வேலூர்)

???????????? ????????!

 
Status
Not open for further replies.
Back
Top