தனியார் பால் விலை அதிகரிப்பு காபி, டீ வில&#301

Status
Not open for further replies.
தனியார் பால் விலை அதிகரிப்பு காபி, டீ வில&#301

தனியார் பால் விலை அதிகரிப்பு காபி, டீ விலை உயருகிறது

சென்னை: தனியார் பால் நிறுவனங்கள் ,பால் விலையை உயர்த்தியதால் கடைகளில் விற்கப்படும் டீ,காபி விலை உயருகிறது.


Tea%20shop%20200%281%29.jpg



தமிழ்நாட்டில் தினமும் 1 கோடியே 50 லட்சம் லிட்டர் பால் வாடிக்கையளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில்,24 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலமும்,தனியார் நிறுவனங்கள் மூலம் 1 கோடியே 26 லட்சம் லிட்டரும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று முதல் தனியார் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி உள்ளது. இதனால் அந்த நிறுவனங்கள் விற்பனை செய்யும் கொழுப்பு செறிவூட்டிய பால் லிட்டருக்கு ரூ.45, சமன்படுத்திய பால் ரூ. 44, நிலைப்படுத்திய பால் ரூ. 40, கொழுப்பு நீக்கிய பால் ரூ.36 என்ற விலைகளில் விற்கப்படுகிறது.

பெரும்பாலான டீக்கடைகள் மற்றும் ஓட்டல்கள் தனியார் நிறுவனங்களிடம் இருந்தே பால் வாங்குகின்றன. எனவே டீ கடைகள் மற்றும் ஹோட்டல் நிறுவனங்கள் டீ, காபி விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.

அதன்படி டீ விலை ரூ.7–ல் இருந்து ரூ.8 ஆகவும், காபி ரூ.8–ல் இருந்து ரூ.9 ஆகவும் உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக டீ கடை வியாபாரிகள் தெரிவித்தனர்.


??????? ???? ???? ?????????? ????, ?? ???? ?????????
 
Status
Not open for further replies.
Back
Top