• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

டூரிங் டாக்கீஸ் ( Ten Cinema)

Status
Not open for further replies.
டூரிங் டாக்கீஸ் ( Ten Cinema)

டூரிங் டாக்கீஸ் (Tent Cinema)

201507201025112121_Touring-Talkies_SECVPF.gif


(During summer holidays, i used to sell Cinema tickets from Ticket counter in my School days to earn Pocket money!!

Not much only 2 Annas per show)


சினிமா கண்டுபிடிக்கப்பட்ட பின்பு நம் நாட்டில் முதலில் திரையிடப்பட்ட படம் ‘ஏசுவின் வாழ்க்கை’. அதைத் தொடர்ந்து சில மவுனப்படங்கள் வெளிவந்தன. இவ்வாறு வெளிவந்த படங்களை திரையிட, அன்றைக்கு தியேட்டர்கள் எதுவும் இல்லை.

எனவே ஊர் ஊராக சென்று டேரா போட்டு மவுனப்படத்தை மக்களுக்கு காட்டி வந்தனர். அந்த ஊரின் மக்கள் தொகைக்கு ஏற்ப பல நாட்கள் கூட ‘டென்ட்’ போட்டு சினிமாவை ஓட்டி வந்தனர். இதற்காக ஊரின் ஒதுக்குப்புறமாக இருக்கும் பொட்டல் நிலத்தை குறைந்த வாடகைக்கு எடுத்து, அதில் சினிமா காட்டப்பட்டதை தான் ‘டெண்ட்’ கொட்டகை என்று அழைத்தனர். இந்த தியேட்டர்கள் மாதக்கணக்கில் கூட ஒரே ஊரில் இருக்கும். அதன் பின்பு வேறு ஊருக்கு சென்று, அங்கு சினிமா காட்டுவார்கள்.

டென்ட் கொட்டகைகளை விட டூரிங் டாக்கீசுக்கு சற்று குறைவான ஆயுள் தான். பெரும்பாலும் பெரிய கட்டிட சுவர்களிலேயே படங்கள் திரையிடப்படும். ஒரு வாரம், 2 வாரம் என்று படங்கள் ஓடும். அதன்பின்பு வேறு ஊருக்கு சென்று விடுவார்கள். இப்படி ஊர் ஊராக சென்று டூர் அடிப்பதால் தான் இவற்றுக்கு, ‘டூரிங் டாக்கீஸ்’ என்று பெயர் வந்தது.

காலப்போக்கில் படங்களின் எண்ணிக்கை அதிகமானது. டென்ட் கொட்டகைகளாலும், டூரிங் டாக்கீஸ்களாலும் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. ஊர் ஊராக பயணம் செய்வதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. இதன் காரணமாக முக்கியமான ஊர்களில் நிரந்தர தியேட்டர்கள் அமைக்கப்பட்டன.

சிறிய ஊர்களில் ‘செமி பர்மனென்ட்’ என்ற தற்காலிக தியேட்டர்கள் உருவாயின. இந்த தியேட்டர்களுக்கு 3 முதல் 5 வருடம் மட்டுமே லைசென்சு வழங்கப்படும். அதன் பின்பு புதுப்பிக்க வேண்டும்.

நிரந்தர தியேட்டர்களில் இந்த தொல்லைகள் இல்லை, அதனால் நாடக கொட்டகைகள், அரிசி மில்கள், திருமண மண்டபங்கள் போன்றவை எல்லாம் தியேட்டர்களாக புது அவதாரம் எடுத்தன. நெல்லை அரிசியாக்கி சம்பாதிப்பதை விட, நிழல் அதிசயத்தில் நிறைய சம்பாதித்தனர். அரவை மிஷின் களின் அரவை சத்தத்தை, மவுனப் படங்களின் அமைதி ஆக்கிரமித்தது. முதல் நிரந்தர தியேட்டர் 1902-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் அமைக்கப்பட்டது. அதன்பெயர் ‘டேலி எலக்ட்ரிக் தியேட்டர்’.

தற்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உலகின் மிகப் பழமையான தியேட்டர், டென்மார்க்கில் உள்ள ‘கோர்சர் பயோசிரப்’ தியேட்டர், இது 1908-லிருந்து தொடர்ந்து படங்களை திரையிட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் முதல் நிரந்தர திரையரங்கம் கோவை நகரில் அமைக்கப்பட்டது. அதை சாமிக்கண்ணு என்பவர் ‘வெரைட்டி ஹால்’ என்ற பெயரில் அமைத்தார். அதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல நகரங்களில் நிரந்தர திரையரங்கங்கள் அமைக்கப்பட்டன. ஆசியாவிலேயே மிகப்பெரிய திரையரங்கம் (தங்கம்), மதுரையில் தான் இருந்தது என்று பெருமைப்பட்டு கொள்ளலாம்.

http://www.dailythanthi.com/News/World/2015/07/20102523/Touring-Talkies.vpf
 
Last edited:
Tent cinemas -temporary structures where films were shown - were there in delhi also in late fifties and early sixties .

We had one in bhikajicamaplace stands now.

They were licensed for short duration of few months every year.

I have seen many hindi films there in my college days as I used to live nearby.

The rates were low which students could afford.

Only ordinary chairs were provided with no AC .

no advance booking.

a few minutes before the show ,collect a ticket and occupy any chair of choice or vacant.

still I think I enjoyed them more than I do in modern multiplexes
 
டூரிங்க் டாக்கீசில் சினிமா பார்ப்பது தனி அனுபவம் தான்.

சிறு வயதில் எங்கள் ஊரிலிருந்து 2 மைல் தூரத்திலிருந்த டூரிங்க் டாக்கீசுக்கு ஒரு ஞாயிறன்று சினிமா பார்க்க போவதென்றால் சனிக்கிழமை முதலே வீடு அல்லோலகல்லோலமாக அமர்க்களப்படும். வண்டிக்காரனிடம் சொல்லி மாட்டு வில்வண்டியை ரெடி பண்ணி, 6 மணிக்கு சினிமா என்றால் 4 மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பிவிடுவோம். பக்கத்தாம், எதிராம் என்று ஒவ்வொறு வீட்டிலிருந்தும் ஒன்றிரண்டு பேர் (எதிராத்து மீனுக்குட்டி, கீழாத்து சாமு மாமா, கோமுச்சித்தி, மேலாத்து நசுக்குட்டி மோஹன் etc. etc.,) சேர்ந்துகொள்ள சில நாட்கள் வண்டிக்குபின்னால் நடந்து செல்பவர்கள் எண்ணிக்கை வண்டியில் செல்பவர்களைவிட அதிகமாகி விடுவதுண்டு.

டிக்கட் வாங்கி உள்ளே சென்றால் நியூஸ் ரீல், டிரைலர் எல்லாம் முடிந்து அரை மணி நேரம் சென்று படம் தொடங்கும். ஒவ்வொரு ரீலும்முடிந்தவுடன் லைட் எரியும். காபி, டீ, பிஸ்கட், வடை எல்லாம் கூவிக்கூவி விற்கப்படும். இப்படி ஐந்தாறு இடைவேளைகளுடன் சினிமா பார்ப்பது நடக்கும். நல்ல சண்டைக்காட்சிகளில் விசில் சப்தம் காதைப்பிளக்கும். தரை டிக்கட்டு வாங்கித்தான் படம் பார்த்திருக்கிறேன். தரை என்றால் மணல் தரை. சில நாட்களில் எனக்கு முன்னால் உட்கார்ந்திருப்பவர் கொஞ்சம் கிங் சைஸாயிருந்தால் படம் சரியாக பார்க்க முடியாமல் மறைப்பார். அப்போதெல்லாம் சற்று நகர்ந்து மணலைக்கூட்டி ஒரு சிறிய மணல் குன்றை உருவாக்கி அதன் மீது உட்கார்ந்து படம் பார்த்ததுண்டு. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனியிடம் தான். நடுவில் ஒரு குட்டைச்சுவர் பிரிக்கும். இந்தச்சுவருக்கு வேறொறு உபயோகமும் உண்டு. எப்போதாவது மிக அபூர்வமாக ஒரு ஆங்கிலப்படமோ ஹிந்திப்படமோ வந்தால் இந்தச்சுவர் மீது உட்கார்ந்துகொண்டு ஒருவர் வசனங்களை அப்போதைக்கப்போது மொழிபெயர்த்து உணர்ச்சி பூர்வமாக உரத்தகுரலில் கத்திக்கத்தி கூறுவார். மக்கள் ரசிப்பார்கள். நானும் ஆங்கிலம் ஹிந்தி எல்லாம் தெரியாத அந்த வயதில் ரசித்திருக்கிறேன்.

சினிமா முடிந்து வீட்டுக்கு வந்த பின் இரண்டுநாட்களுக்கு அதைப்பற்றியே பேச்சாக இருக்கும். பள்ளியில் இரண்டு நாட்களுக்கு நான் தான் ஹீரோ. கதை கேட்க என்பின்னால் ஒரு கூட்டம் அலைந்தவாறு இருக்கும். நானும் மசாலா எல்லாம் சேர்த்து ரீல் விட்டு ஷைன் பண்ணியதுண்டு.

சம்பூர்ண ராமாயணம், மஹி ராவணன், பாகப்பிரிவினை, வேட்டைக்காரன், நாடோடி மன்னன், மதுரை வீரன் எல்லாம் இப்படி ஒரு டூரிங்க் டாக்கீஸில் பார்த்து மகிழ்ந்த படங்கள் தான்.

அந்த நாட்கள் பொன்னான நாட்கள்.

நினைத்துப்பார்க்கவும், பகிர்ந்துகொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் உண்டாக்கித்தந்ததற்கு பி.ஜே. அவர்களுக்கு நன்றிகள்.
 
Last edited:
hi

டூரிங் தியேட்டரில் படம் பார்ப்பது தனி அனுபவம் தான்...என்னுடைய அப்பா ஒரு காலத்தில் part time டிக்கெட்

கொடுப்பவர்.......எங்களுக்கு எல்லாம் ஓசியில் படம் பார்க்கலாம்.....ரொம்ப தாரளமாக கீழே அமர்ந்து

படம் பார்ப்பது உண்டு.....சில நேரங்களில் அங்கேய படுத்து தூங்கினதும் உண்டு.......சிலர் அங்கேய பக்கத்திலே

ஒன்னுக்கு போவதும் உண்டு........அந்த smell தான் கொஞ்சம் கஷ்டம்.......அந்த மாதிரி free life திரும்பி வராது.....


சிவ ராத்திரி நாட்களில் 5 shows உண்டு.........சரஸ்வதி சபதம் ....கந்தன் கருணை போன்ற படங்கள் பார்த்தது

உண்டு.....அந்த இனிமயமான நாட்கள் திருபி வராது....
 
Last edited:
hi

டூரிங் தியேட்டரில் படம் பார்ப்பது தனி அனுபவம் தான்...என்னுடைய அப்பா ஒரு காலத்தில் part time டிக்கெட்
கொடுப்பவர்.......எங்களுக்கு எல்லாம் ஓசியில் படம் பார்க்கலாம்.....ரொம்ப தாரளமாக கீழே அமர்ந்து
படம் பார்ப்பது உண்டு.....சில நேரங்களில் அங்கேய படுத்து தூங்கினதும் உண்டு.......சிலர் அங்கேய பக்கத்திலே
ஒன்னுக்கு போவதும் உண்டு........அந்த smell தான் கொஞ்சம் கஷ்டம்.......அந்த மாதிரி free life திரும்பி வராது.....
சிவ ராத்திரி நாட்களில் 5 shows உண்டு.........சரஸ்வதி சபதம் ....கந்தன் கருணை போன்ற படங்கள் பார்த்தது
உண்டு.....அந்த இனிமயமான நாட்கள் திருபி வராது....

Nice to know that there is another soul which enjoyed the Touring Talkies experience.
 
I am also one of You having enjoyed thoroughly in such open Keethu Kottai.Drank Colour Soda , which never upset the stomach ?

I had relished Siva Kavi of M.K.T started from 5 PM, when still sunlight was flashing the Screen Only at 6Pm Film started & went up to more than 10 PM 2/3rds only Songs ?Unforgettable days

Can some of U if in Chennai can think of a meeting in a common place & have quiet Tiffin & relish those moments of life
Sincerely,

Rishikesan / A.Srinvasan/ Kodambakkam
 
Though I was a regular visitor to tent theatres, despite my native place had two concrete theatres, and tent theatres used to occupy every year once in a while, two incidents are still in my memory.

With my class mate, I went to see KB's Thamarai Nenjam and bought 37 paise ticket. Due to heavey downpour, the show cancelled and we were forced to return. We have not gone next day.

After writing the last exam of my SSLC, I went to see MGR's Mattukara Velan in Tamilselvi theatre - a tent theatre - on April 3, 1970 (Friday) with my friends, the exam was commenced on Mar 30, 1970 (Monday). Though it was very unusual to see a MGR film in tent theatre, it was a wonderful experience.
 
ஒரு ஜே-க்கு ஒரு ஜே என்றால்,

இரு ஜே-க்கு? ...... :) :)

ஒண்ணுமே புரியலே, இந்த இணையத்துலே, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ஒண்ணூமே புரியல.

ரெண்டு ஜே எங்கிருந்து வந்தது?

எனக்கு மரமண்டை. சட்டுனு ஒண்ணும் புரியாது. கொஞ்சம் விவரமா சொல்லுங்கம்மா.
 
ஒண்ணுமே புரியலே, இந்த இணையத்துலே, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ஒண்ணூமே புரியல.

ரெண்டு ஜே எங்கிருந்து வந்தது?

எனக்கு மரமண்டை. சட்டுனு ஒண்ணும் புரியாது. கொஞ்சம் விவரமா சொல்லுங்கம்மா.
இதெல்லாம் சும்ம்ம்மா!! உங்க நண்பியைத் தெரியாதா?

சரி, சரி; ஒரு க்ளூ: அவங்க 'bhO jumbO' ன்னு எழுதுவாங்க! :)
 
இதெல்லாம் சும்ம்ம்மா!! உங்க நண்பியைத் தெரியாதா?

சரி, சரி; ஒரு க்ளூ: அவங்க 'bhO jumbO' ன்னு எழுதுவாங்க! :)

ஐயோ! ஐயோ!! எத்தனைதான் இல்லாத மூளைய கசக்கினாலும் புரியமாட்டேங்குது. இன்னும் ஒரு க்ளூ கூட குடுங்களேன். ப்ளீஸ்.
 
ஐயோ! ஐயோ!! எத்தனைதான் இல்லாத மூளைய கசக்கினாலும் புரியமாட்டேங்குது. இன்னும் ஒரு க்ளூ கூட குடுங்களேன். ப்ளீஸ்.
:nono: ப்ளீஸ்!
 
:nono: ப்ளீஸ்!

ஆங்க். எதோ கொஞ்சம் புரியுதுங்க. ரெண்டு ஜே, நண்பி. நான் இல்லீங்க இந்த விளையாட்டுக்கு. நான் சிவனேன்னு என் வழிக்கு போயிட்டிருக்கிறேன். அந்த நண்பி அம்மா என்ன உண்டு இல்லன்னு பண்ணிடும். வேண்டாம்மா. ஆள வுடுங்க. எனக்கு இங்க இருக்கிற ஒரே உண்மை நண்பி ஒரு டாக்டரம்மாதானுங்க. அது போதுமுங்க.
 
ஒண்ணுமே புரியலே, இந்த இணையத்துலே, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ஒண்ணூமே புரியல.

ரெண்டு ஜே எங்கிருந்து வந்தது?

எனக்கு மரமண்டை. சட்டுனு ஒண்ணும் புரியாது. கொஞ்சம் விவரமா சொல்லுங்கம்மா.
hi

neenga english le ezuthi irunthaal indha vambe vanthirukkaathu....lol
 
ஆங்க். எதோ கொஞ்சம் புரியுதுங்க. ரெண்டு ஜே, நண்பி. நான் இல்லீங்க இந்த விளையாட்டுக்கு. நான் சிவனேன்னு என் வழிக்கு போயிட்டிருக்கிறேன். அந்த நண்பி அம்மா என்ன உண்டு இல்லன்னு பண்ணிடும். வேண்டாம்மா. ஆள வுடுங்க. எனக்கு இங்க இருக்கிற ஒரே உண்மை நண்பி ஒரு டாக்டரம்மாதானுங்க. அது போதுமுங்க.

Adhu! Adhu! ஜேஜேnu Pera kettaaley adhirudhilla!
 
:lol: Adhu! Adhu! ஜேஜேnu Pera kettaaley adhirudhilla!


அட ராமச்சந்திரா !!

என் இயற்பேரு ராமச்சந்திரனுங்க.

JJ has only reflected glory. LOL.

This post is in reply to RR madam only.
 
Last edited:
[/I][/COLOR]

அட ராமச்சந்திரா !!

என் இயற்பேரு ராமச்சந்திரனுங்க.

JJ has only reflected glory. LOL.

This post is in reply to RR madam only.

Typical of Ramachandra of Ramayana - hiding behind - Trying to shoot over RR's Shoulders!
 
Last edited:
typical of ramachandra of ramayana shooting - hiding behind - trying to shoot over rr's shoulders!

இத இதத்தான் நான் சொன்னேன். இன்னும் ஒரு இருபது போஸ்ட்டுக்காவது இது ஓடும். Lol.
 
அட ராமச்சந்திரா !!

என் இயற்பேரு ராமச்சந்திரனுங்க.

JJ has only reflected glory. LOL.

This post is in reply to RR madam only.
சிவ சிவா! நான் இந்த விளையாட்டுக்கே இல்லீங்க, ராமச்சந்திரன் சார்!

நான் எதையாவது எழுதப் போக, பெரியவர் ஏதாவது
ஒரு குண்டு குப்பைக்காரி

என்னை வையற மாதிரி போஸ்டர் போட்டு...... வேண்டவே வேண்டாம்! :nono:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top