ஜெபமாலையில் 108 மணிகள் இருப்பதற்கான காரணங&#302

Status
Not open for further replies.
ஜெபமாலையில் 108 மணிகள் இருப்பதற்கான காரணங&#302

இந்து மதத்தில் மந்திரங்களை ஜெபிக்க பயன்படுத்தும் ஜெபமாலையில் 108 மணிகள் இருக்கும். இப்படி ஜெபமாலையில் 108 மணிகள் இருப்பதற்கு பின்னால் சமயஞ்சார்ந்த மற்றும் அறிவியல் சார்ந்த காரணங்கள் உள்ளது. ருத்ராட்சை, துளசி, முத்துக்கள் அல்லது கற்களால் செய்யப்பட்டது தான் ஜெபமாலை. இதற்கு அற்புதமான சக்திகளும் உள்ளது. ஜெபமாலையுடன் கூறப்படும் மந்திரங்கள் இரண்டு மடங்கு அதிக பலனை மிக வேகமாக அளிக்கும். மந்திரங்கள் கூறுவது தான் கடவுளை வணங்குவதற்கான சிறந்த வழியாகும். பழங்காலத்தில் முனிவர்களும். ரிஷிகளும் இந்த முறையை தான் பின்பற்றி வந்தனர். ஜெபமாலை இல்லாமல் மந்திரம் உரைப்பது, எந்த பலனையும் அளிக்காது என நம்பப்படுகிறது. ருத்ராட்சையால் செய்யப்பட்ட ஜெபமாலைக்கு தான் பலன் அதிகம். அது சிவபெருமானை குறிக்கும் அடையாளமாகும். நுண்ணிய கிருமிகளை அழிக்கும் சக்தியை ருத்ராட்சை கொண்டுள்ளது. மேலும் வெளியில் இருந்து நேர்மறையான ஆற்றல் திறனை கொண்டு வரும்.

இந்து சாஸ்திரத்தில் "ஷடாஷ்டணி டிவரட்ரோ சஹாஸ்ரனயேகம் விஷாந்தி எடத் சங்க்யன்திட்னம் மந்த்ரம் ஜீவோ ஜபட்டி சர்வதா" இந்த ஸ்லோகத்தின் படி, ஒரு சாதாரண மனிதன் தினமும் மூச்சு விடும் எண்ணிக்கை, ஜெபமாலையில் உள்ள மணிகளுடன் தொடர்பில் உள்ளது. 24 மண நேரத்தில் ஒருவர் 21,500 முறை மூச்சு விடுகிறார். 24 மணிநேரத்தில் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள 12 மணிநேரங்கள் தேவைப்படுகிறது. இந்த 12 மணிநேரத்தில் ஒரவர் 10,800 முறை மூச்சு விடுகிறார். கடவுள்களை வணங்க இந்த 12 மணிநேரம் மிகவும் சிறந்த நேரமாக கருதப்படுகிறது. 12 மணி நேரத்தில் கடவுளின் பெயரை 10,800 முறை கடவுளின் பெயரை ஜெபிக்க முடியாததால், 10,800-ல் கடைசி இரண்டு பூஜ்யம் நீக்கப்பட்டு, 108 முறையை கடவுளை ஜெபிக்க முடிவு செய்யப்பட்டது.

மற்றொரு நம்பிக்கை மற்றொரு நம்பிக்கையின் படி, ஜெபமாலையில் உள்ள 108 மணிகள் சூரியனின் கலைகளோடு ஒப்பிடப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் தன் தோற்றத்தை 2,16,000 முறை மாற்றிடும் சூரியன். தன் நிலையை வருடத்திற்கு இரண்டு முறை மாற்றும். 6 மாதத்தில் சூரியனின் தோற்றம் 1,08,000 முறை மாற்றிடும். 1,08,000-ல் கடைசி மூன்று பூஜ்யங்கள் நீக்கப்பட்டு, ஜெபமாலை மூலம் மந்திரங்கள் ஜெபிக்க 108-ஆக ஆக்கப்பட்டுள்ளது.

ஜோதிட சாஸ்திரம் ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த அண்டமே 12 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 12 பாகங்களின் பெயர்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம். இந்த பாகங்களை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, வெள்ளி, சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் ஆள்கிறது. இந்த 12 ராசிகளை 9 கிரகங்களால் பெருக்கினால் 108 வரும். அதனால் ஜெபமாலையில் உள்ள மணிகள் இந்த அண்டத்தை குறிக்கிறது.

வேறொரு நம்பிக்கை மற்றொரு நம்பிக்கையின் படி, ஜெபமாலையில் உள்ள 108 மணிகளுக்கு பின்னால் ஜோதிட சாஸ்திர காரணம் உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, 27 நட்சத்திரக் கூட்டம் உள்ளது. ஒவ்வொரு நட்சத்திர கூட்டத்திற்கும் 2 கட்டங்கள் உள்ளது. இந்த 27 நட்சத்திர கூட்டங்கள் 108-டிற்குள் சரண்களை கொண்டுள்ளது. குறிப்பு ஒரு மந்திரத்தை எத்தனை முறை ஜெபிக்கிறோம் என்பதை ஜெபமாலையில் உள்ள மணிகள் குறிக்கும். ஜெபமாலையில் உள்ள முதன்மையான மணியை சுமேரு என அழைக்கிறோம். சுமேருவில் இருந்து தொடங்கும் மந்திர ஜெபித்தல் அந்த மணியிலேயே முடியும். மந்திரம் கூறி முடித்த பிறகு சுமேருவை எப்போதுமே நெற்றியில் வைக்க வேண்டும். அதற்கு காரணம், முழு வழிமுறையையும் இதுவே முழுமையாக்கும்.

Source: Sumathi sundar.:pray2:
 
Status
Not open for further replies.
Back
Top