ஜவ்வரிசி வடை (சபுதானா வடா)

Status
Not open for further replies.
ஜவ்வரிசி வடை (சபுதானா வடா)

ஜவ்வரிசி வடை (சபுதானா வடா)



11407179_1131563710203925_3186008091784411388_n.jpg



அரை கப் ஜவ்வரிசியை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவி, பின் அதை கிச்சன் டவலில் போட்டு நீரை ஒற்றி எடுக்கவும்.

2 பெரிய உருளைக் கிழங்குகளை நன்றாக வேக வைத்து, மசித்து, அத்துடன், ஊற வைத்த ஜவ்வரிசி, மெலிதாக அறிந்த ஒரு வெங்காயம், பொடியாக நறுக்கிய 5 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய, கொத்தமல்லி, புதினா 1/2 கப், சோம்பு - 1 டீஸ்பூன், கொதிக்க வைத்த எண்ணெய் , 1 டேபிள்ஸ்பூன், 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு இவற்றுடன், 1/4 கப் கடலை மாவு சேர்த்து நீர் தெளிக்காமால் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை ஒரு பெரிய எலுமிச்சம்பழம் அளவு உருண்டைகளாக உருட்டி, கையினால் லேசாக தட்டையாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்,


சுவையான ஜவ்வரிசி வடை தயார், இது ஒரு மகாராஷ்ட்ரிய உணவு வகை.



THANKS TO S.v. Ramani
 
Status
Not open for further replies.
Back
Top