ஜகம் புகழும் ஜலநாராயணர்

Status
Not open for further replies.
ஜகம் புகழும் ஜலநாராயணர்

ஜகம் புகழும் ஜலநாராயணர்

1.jpg




திருவள்ளூரிலிருந்து சுமார் 2 கி.மி தூரத்தில் காக்களூர் பூங்கா நகரில் உள்ள சிவ-விஷ்ணு ஆலயம் வெறும் வழிபாட்டுத்தலமாக மட்டுமின்றி பல அபூர்வ சிறப்புத் தகவல்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கு பக்தர்கள் வழிபாட்டிற்கென 46 சந்நதிகள் அமைந்துள்ளது. சமீபத்தில் ஆன்மீக நெறியாளர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு பஞ்சலோக விக்ரகம் முருகன் சந்நதியை நோக்கியவாறு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


அனைத்து தரப்பு சமுதாயத்தினரையும் ஈர்க்கும் இவ்வாலயத்தில் 2012ம் ஆண்டு பிரதிஷ்டையாகியுள்ள ஸ்ரீ ஜலநாராயணப் பெருமாள் சந்நதியை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். நேபாளத்தில் அமைந்துள்ளது போலவே இச்சந்நதி இவ்வாலயத்தில் அமைய ஆலய அறங்காவலர் குழுத்தலைவர் எம்.பசுபதி ராதா தம்பதியருக்கு 16 ஆண்டுகள் முன்பு காத்மண்டு சென்ற போது எண்ணம் உதித்தது. எண்ணம் செயலாக உருவெடுத்து இன்று ஆலயமாகப் பரிமாணித்துள்ளது.


ஜலத்திலிருந்து நீர்வற்றி பூமி தோன்றியது என்று புவியியல் வரலாறு சொல்லுகிறது. அந்த ஜலத்திற்கு 'நாரா' என்ற பெயரும் உண்டு. ச்ருஷ்டியின் ஆரம்பத்தில் இறைவன் முதன் முதலில் தோன்றியதால் 'நாராயணன்' என்று அழைக்கப்படலானார். அதன் பிறகுதான் ஜீவராசிகள் தோன்றியது.


ஜலநாராயணர் என்ற திருநாமமும் அழைக்கப்படலாயிற்று. மேலும் ஒரு சிறப்புச் செய்தி, கல்வெட்டுத் தகவல்களின் படி ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி 'ஜலசயனத்து கிடந்து அருளின பரமசுவாமி' என்றே குறிப்பிடப்படுகிறார். அதேபோல் திவ்ய தேசங்களான மகாபலிபுரம், சிறுபுலியூர் பெருமாள்களும் 'ஜலசயனப் பெருமாள்" என்று குறிப்பிடப்படுவதைக் காணலாம்.

திருவள்ளூர் பூங்கா நகரில் ஸ்ரீ சிவா-விஷ்ணு ஆலயத்தில் வாஸ்து சாஸ்திரப்படி ஈசான்ய மூலையில் சுற்றிலும் நீர் சூழ ஸ்ரீ ஜலநாராயணர் பிரதிஷ்டையாகியுள்ளது. சுமார் 10 டன் எடை கொண்ட ஜலநாராயணர் சிலை மகாபலிபுரம் ஜனா சிற்பக் கலைக் கூடத்தில் உருவானது.

பதினோரு தலை ஆதிசேஷன் நாகத்தின் மேல் நர்த்தன ரூபத்தில் சங்கு சக்கரம், கடாயுதம், அட்சய பாத்திரத்துடன் கூடிய நான்கு கரத்துடன் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து புன்னகை ததும்பும் வதனத்துடன் அருளுகின்ற ஜலநாராயணப் பெருமாளின் திவ்யத் திருகோலத்தை இன்றைக்கெல்லாம் பாத்துக்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு ஏகாதசியன்றும் வாசனாதி திரவியங்களைக் கொண்டு திருமஞ்சனம் செய்விக்கப்படுகின்றது. இத்துடன் பக்தர்களுடைய குறைகளை நீக்க பரிகார பூஜையும் நடைபெறுகிறது.


ஜனவரி 1ம் தேதி வியாழனன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இச்சந்நதியில் அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, மகாதீபாராதனையும் நடைபெற்றது. நேற்று மாலை ஸ்ரீ ஜலசயனப் பெருமாளுக்கு கலச பூஜையும், 108 வலம்புரி சங்காபிஷேகமும் நடைபெற்றது. ஆங்கிலப் புத்தாண்டான இன்று ஆகாயத்தைப் பார்த்து அருளும் ஸ்ரீ ஜலநாராயணப் பெருமானை தரிசனம் செய்ய அனைவரும் வருகை தாருங்கள்.


கூடுதல் தகவல்களுக்கு 044/27664057, 9443119861 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- எஸ்.வெங்கட்ராமன்


???? ??????? ?????????? - Dinamani - Tamil Daily News
 
Sir, So many temples are in India. There are many temples in Tamil Nadu also. If any one who is interested in bringing out such details of temples in each district with its importance and significance, then it will be useful to all of us. The efforts in bringing the information of the Jagam Pugazhum Jala Narayanar by Sri S.Venkataran to every one through this web site is appreciated.
 
Sir

Thanks for reading my Temple Threads; Earlier Chennai District Temples was posted by me, please go through it.

Any suggestion is welcome.
 
Status
Not open for further replies.
Back
Top