• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சோமவார பிரதோஷம்

சோமவார பிரதோசம் சிறப்பு வாய்ந்தது. சோமன் என்றால் சிவன், சோமவாரம் திங்கட்கிழமை, சிவனுக்கு உகந்த திங்கட் கிழமை பிரதோஷம்

தராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன்.

அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலகண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.

சிவ ஆலயத்திற்கு சென்றாலே நந்தியின் காதில் கஷ்டங்களை கூறி வணங்குவது பலரது வழக்கம் பிரதோஷ நாளில் நந்தியிடம் அதிக வேண்டுகோள் வைப்பார்கள்.

பிரதோஷ வழிபாடு சிவனுக்கு உகந்தது. மாலை நேரத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும்.

நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும்.

தியானம் செய்ய சிறந்த நேரம்
****
சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.

பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம்.

பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடு கின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராண ங்களில் கூறப்பட்டுள்ளது.

பாவம் விலகி புண்ணியம் சேரும்

பிரதோஷம் நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.

இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக் கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனை கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

நந்தியிடம் சொன்னால் நிறைவேறும்

சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இரு ப்பதுதான் நந்தி. சிவனை பார்க்க செல்ப வர்கள் அதன் காவலனான நந்தியிடம் தங்கள் குறைகளையும் வேண்டுதல்களையும் சொன்னால் நந்திபெருமான் சிவனிட ம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை.

அந்த வேண்டுதல் நிறைவேறவும் செய்யும். நந்தியின் காதில் சொல்லும் நடைமு றை என்பது எல்லா கோவில்களிலும் இரு க்கிறது. பெரிய கோவிலில் உள்ள சிறிய நந்தியிடம் சொன்னால் மகா நந்திக்கும் கேட்கும். வேண்டுதல் சீக்கிரமே நிறைவே றும் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு

அபிஷேக பொருட்கள்

பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் என்ன பொருள் வாங்கிக்கொ டுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் - பல வளமும் உண்டாகும்,
தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் - விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்,
நெய் - முக்தி பேறு கிட்டும்.
இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் - சுகவாழ்வு,
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும். பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.

சனி தோஷம் போக்கும் பிரதோஷ விரதம்

பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோ ஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

நாள் முழுக்க நீர் ஆகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க வேண்டும்.

மாலை சிவன் கோவிலிற்கு சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி ஒருபிடி வன்னி இலை ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தி யின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணி த்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனை யும் தொழுதால் சனி பகவானால் உண்டா கும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்பு டையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.

ஈசனை வலம் வரும் முறை

பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்ச ணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈச னை வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமா னை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர்.

சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழு ம் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிற து. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ள ப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.

சிவ தரிசனம்

பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலய த்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம்.

முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும்,

இரண்டாம் சுற்றில் செய்யப் படும் திருமுறை பாராயணத்தையும்,

மூன் றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையு ம் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதக ங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகி றது.

பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருக ப்பெருமானோடும் இணைந்த சோமாஸ் கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும்.

இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம்.

சிவதரிசன ம் முடித்தபிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம்.

நந்தி வழிபாடு

பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும்.

பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவே தனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது.

நந்தியம்பெருமானு க்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்யலாம்.

அதே நேரத்தில் அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் , கொண்டக்கடலை ஆகியவற்றை நிவேத னமாக தரலாம்.

சிவ பெருமான் அபிஷேக பிரியன் என்பத னால் இன்று தூய பசும்பால் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யலா ம். எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர் க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக் தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கும் முன்னேற்றம் கிடைக்கும்.

ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய..
 

Latest ads

Back
Top