• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

செவ்வாய் (அங்காரகன்)

Status
Not open for further replies.
செவ்வாய் (அங்காரகன்)

செவ்வாய் (அங்காரகன்)

4c8dde42-bdcf-44c4-a8ff-74a83ffb9ba6_S_secvpf.gif



சப்தரிஷிகளில் ஒருவரான பரத்வாச முனிவர் நர்மதை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவமிருந்தார். ஒருநாள் அவர் நதியில் நீராடச் சென்ற சமயம் அழகிய தேவமாது ஒருத்தி தன் தோழிகளுடன் நதியில் நீராடிக் கொண்டிருந்தாள். அவளுடைய அழகினைக் கண்ட பரத்வாசர் மோகம் கொண்டார். அவர் தம் நிலையையும் மறந்து தேவமாதைக் கட்டி அணைத்தார்.


அவருடைய மோகம் தணிந்ததும் தேவமாதை விட்டுச் சென்றார். தேவமாது ஓர் ஆண் குழந்தையை ஈன்றாள். அக்குழந்தையை நதிக்கரையிலே விட்டு தேவலோகம் சென்றாள். பெற்றோரால் கைவிடப்பட்ட அக்குழந்தைதான் அங்காரகன் அவனை பூமாதேவி தன் குழந்தைபோல் வளர்த்து வந்தாள். குழந்தை பெரியவனானதும் தன்னுடைய தந்தையைக் குறித்துக் கேட்டான்.

பூமாதேவி குழந்தையிடம் விவரத்தைச் சொன்னதுடன் அவனை பரத்வாச முனிவரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தாள். செவ்வாய் கிரகத்திற்கு தனி ஆலயம் இல்லை. பழனி தண்டாயுதபாணி செவ்வாய் கிரக தேவதையாகக் கருதப்படுகிறார். அங்காரகன் பிறப்புக்கு இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது.

சிவபெருமான் உமாதேவியைப் பிரிந்து தனித்துக் கல்லால மரத்தின் கீழ் யோகம் புரிந்தபோது அவரது நெற்றிக் கண்ணிலிருந்து நீர்த்துளி ஒன்று பூமியில் விழுந்தது. அந்த நீர்த்துளியிலிருந்து பிறந்தவர் அங்காரகர். அதனால் அவர் பூமியின் மகன் (குஜன்) என்று அழைக்கப்படுகிறார் என்கிறார்கள்.

வீரபத்திரர் தக்கனின் யாகத்தை அழித்த பிறகு தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிக் கோபம் தணிந்து அங்காரவடிவம் பெற்றார் என்றும் கூறுகின்றனர். அங்காரகர் பாரத்வாச கோத்திரத்தை சேர்ந்தவர். சிவப்பு நிறமானவர். மாலினி, சுசீலினி என்ற இரண்டு மனைவிகளை உடையவர்.

முக்குணங்களிலே ராஜச குணத்தவர். ரத்த சம்பந்தமுடைய சகோதரகாரகர், பூமி காரகர், பெருந்தன்மை கண்டிப்பு, வைராக்கியம், பகைவரை எதிர்க்கும் ஆற்றல் முதலியவற்றைக் கொடுப்பவர், தற்பெருமைக்காரர். பழனி சுப்பிரமணியரை வழிபடுவதாலும், பவள மாலை, பவள மோதிரம் அணிவதாலும், சிவப்பு நிற ஆடை உடுப்பதாலும், சிவப்புநிறக் காளையைத் தானம் செய்வதாலும் துவரைத் தானியத்தைத் தானம் கொடுப்பதாலும், கார்த்திகை விரதம், செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதாலும் அங்காரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.

செவ்வாய் பகவான் நெருப்பு, தம்பி, தங்கைகள், உடல் வலிமை, எலும்பின் நடுவில் உள்ள தாது, ரத்தம், வஞ்சம், வைராக்கியம், பொய் பேசுதல், மற்றவர் மனம் புண்படும் வகையில் பேசுதல் போன்றவற்றிற்கு அதிபதியாக விளங்குகிறார். அவர் உடலில் காயங்கள், கடுமையான புண்களை ஏற்படுத்துவார். உற்சாகத்தைக் கொடுத்து வீர சாகசங்களைச் செய்ய வைப்பார்.

உறவினர்களைப் பகைவர்களாக்குவார். மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரமொன்றில் பிறந்தவருக்கு செவ்வாய் தசை ஆரம்பமாக வரும். பன்னிரு லக்னத்தாரில் கடகம், சிம்மம், தனுசு, மகரம், மீனம் ஆகிய லக்னத்தாருக்கு செவ்வாய் ஆதிபத்ய அடிப்படையில் யோகமளிக்க வல்லவன்.

அதனால் இந்த லக்னத்தாருக்கு செவ்வாய் பலம் பெற்றிருந்தால் அவனால் ஏற்படும் யோகப் பலன்கள் நடக்கும். அவ்வாறின்றி பலம் குன்றி இருக்க நேர்ந்தால் யோகப் பலன்கள் நடக்காது. ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், கும்பம், விருச்சிகம் ஆகிய லக்னத்தாருக்கு ஆதிபத்ய அடிப்படையில் கொடியவனாகிறான்.

அதனால் இந்த லக்னத்தாருக்கு கெடு பலன்களையே அளிப்பான். அதிலும் இவன் பலத்துடன் வீற்றிருந்தால் இவனால் ஏற்படும் கெடுபலன்கள் அதிகமாக இருக்கும். அதுவே பலம் குன்றி இருக்க நேர்ந்தால் இவனால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும். மாறாக நற்பலன்களும் நடக்க வாய்ப்புண்டு. கிரகங்களில் செவ்வாய் அசுபன் ஆவான்.

அதனால் சுப ஸ்தானங்களில் நிற்பது நல்ல பலன்களுக்கு கேடாகும். அந்த பாவத்திற்குரிய பலன்களும் பாழ்பட்டு விடும். அதனால் அசுப கிரகமான செவ்வாய் தனக்குரிய சுபாவத்திற்கேற்ப மூன்று, ஆறு, ஒன்பது, பத்து, பதினொன்று ஆகிய பாவங்களில் நின்று தசை நடத்தினால் யோகமாக இருக்கும்.

செவ்வாய் யோகமளிக்க வல்லவனாக இருந்து தனக்கு கந்த ஸ்தானத்தில் வலு பெற்றிருந்தால் வீடு, நிலம் போன்றவற்றால் லாபம் உண்டாகும். சகோதரர்களின் ஒத்துழைப்பும் அவர்களினால் ஆதாயமும் கிடைக்கும். மனைவி மக்கள் உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும் அவர்களால் பலவகை நன்மைகளும் உண்டாகும்.

பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். விவசாயத்தில் மேன்மை உண்டாகும். செவ்வாய் கிரகம் நவக்கிரகங்களில் மூன்றாவது இடத்தைப் பெறுகின்றது. இது ஒரு வேகமான கிரகம். இந்த கிரகம் சூரியனைப் போல் ஓரளவு வெப்பத்தை அடக்கிக் கொண்டிருக்கிறது. செவ்வாயின் வேறு பெயர்கள் அங்காரகன், குஜன், பவுமன், பூமி புத்ரன் என்பனவாகும்.

செவ்வாய்க்கு தனி க்ஷேத்ரமுண்டு. அதுதான் தஞ்சை மாவட்டத்தில் சீர்காழிக்கு அடுத்தள்ள வைத்தீஸ்வரன் கோவில். ஊரின் பெயரே கோவிலில் வீற்றிருக்கும் ஈஸ்வரனின் பெயராகும், வைத்தீஸ்வரன் எனப்பெயர். இக்கோவிலுக்கு அருகில் புண்ணிய தீர்த்தம் ஒன்று உண்டு. இதில் ஸ்நானம் செய்து ஈஸ்வரனை வழிபட்டு வந்தால் சகல நோய்களும் நீங்கும்.

அதனால்தான் இந்த ஈஸ்வரனை வைத்தீஸ்வரன் என்கிறோம். செவ்வாய், கிரகங்களுக்கு தளபதியாக இருப்பதால் போர் செய்யும் கிரகமென்று எடுத்துக் கொள்ளலாம். பூமி புதல்வனாகையால் வீடு, நிலம் போன்ற சொத்துக்களுக்கும் உகந்தவனாகிறான். ருணம் என்று சொல்லப்படும் கடனுக்கும் செவ்வாய்தான் அதிபதி. சகோதரர்களுக்கும் அவன்தான் காரகம் வகிக்கிறான்.

விபத்து மற்றும் அடிதடியால் ஏற்படும் காயம், ரணம், கட்டி முதலியவற்றிற்கும் அவனே காரகம் வகிக்கிறான். செவ்வாய் சில சமயம் சிலருக்குத் திருமணத் தடையை உண்டாக்குகிறான். செவ்வாய் ஜாகத்தில் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. இதை விலக்கிக் கொள்ள பலர் சாந்திப் பரிகார முறைகளைக் கையாண்டு வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.

செவ்வாயின் தலங்கள்......

செவ்வாய் தமிழ்நாட்டுக்குடைய கிரகம். எனவே செவ்வாயால் திருமணம் தடைபட்டிருப்பவர்கள் வைத்தீஸ்வரன் கோவில், பழனி ஆகிய கோவில்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளைப் புரிந்து பிறகு திருமணம் செய்து கொள்ளலாம்.

ரோம் நகரத்தினர் செவ்வாயைப் போர்க் கடவுளாக வணங்குகிறார்கள். செவ்வாய்க்கு பல கோவில்களையும் ரோமாபுரியில் கட்டியிருக்கிறார்கள். செவ்வாயை தளபதியாக ஏற்றுக் கொண்டால் யுத்தத்தில் வெற்றி என நம்புகிறார்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கலாம். துவரை சேர்ந்த பலகாரம், பட்சணம், துவர்ப்பு, பச்சடி, துவையல் ஆகியவற்றுடன் வெண்ணெய் சேர்ந்த சாதம், பழம், பாக்கு, வெற்றிலை ஒரு தட்டில் வைக்கவும். செவ்வாய்க்கிரகத்தை மனதில் நினைத்து வானத்தை நோக்கி நைவேத்தியம், சூடம் சாம்பிராணி காட்டவும். நவக்கிரக் கட்டம் இருந்தால் அதை வைத்து பூஜிக்கலாம். செவ்வாயின் பூஜைக்கு சிவந்த மலர்களே உகந்தது.

???????? (?????????) || lord angaraka chevvai
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top