• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

செய்யும் தொழிலே தெய்வம்: கதை மூலம் பகவத்&#2965

Status
Not open for further replies.
செய்யும் தொழிலே தெய்வம்: கதை மூலம் பகவத்&#2965

Thanjavur_Big_Temple.webp

செய்யும் தொழிலே தெய்வம்: கதை மூலம் பகவத்கீதை

தஞ்சாவூரில் மகத்தான கோவிலை நிர்மானித்தான் ராஜராஜ சோழன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. கோவில் கட்டும் வேலை நடை பெற்றபோது அதனை மேற்பார்வையிடச் சென்றான். ஒரு ஆள் மிகவும் கஷ்டப்பட்டு கற்களை உடைத்து அவைகளை சரியான அளவுக்கு வெட்டிக் கொண்டிருந்தார். மன்னன் அவன் அருகில் சென்று ஐயா, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டான்.


மன்னர், மன்னவா, வணக்கம், நான் கல் உடைத்துக் கொண்டிருக்கிறேன் என்றான் பணிவாக.
மன்னன் சிறிது தூரம் நடந்தான். மற்றொருவன் அதே பணியைச் செய்துகொண்டிருந்தான். ஐயா என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டான். அவன் சொன்னான்,
மன்னர், மன்னவா, வணக்கம், நான் கல் உடைத்துச் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன் என்றான் பணிவாக.


மன்னன் மேலும் சிறிது தூரம் நடந்தான். மற்றொருவன் அதே பணியைச் செய்துகொண்டிருந்தான். ஐயா என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் ? என்று கேட்டான். அவன் பதில் சொன்னான்,

மன்னர், மன்னவா, வணக்கம், நான் கல் உடைத்து அவைகளைக் கொண்டு மாபெரும் சிவன் கோவிலைக் கட்டிவருகிறேன் என்றான் பணிவாக.
மூவரும் செய்யும் தொழில் ஒன்றுதான், மூவருக்கும் சம்பளம் ஒன்றுதான். ஆனால் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக அந்தத் தொழிலை அணுகினார்கள். எல்லோருக்கும் குடும்பமும் பணமும் முக்கியமே. ஆயினும் ஒருவன் வெறும் கல் உடைப்பதையே நினைத்தான். மற்றொருவன் குடும்பத்தைக் காப்பதையே பெரிதாக நினைத்தான், மூன்றாமவனோ இதைப் புனிதப் பணியாக, சிவனுக்குச் செய்யும் பெரும் கைங்கர்யமாகப் பார்த்தான். இதுவே சரியான பார்வை.


எந்தப் பணியையும் தன்னலம் இன்றி, பிறர் நலத்துக்காகச் செய்யவேண்டும். தன் குடும்பத்தின் ஜீவியம் அதில் அடங்கி இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதையே ஆக்கபூர்வமான, இன்பம் கொடுக்கும் தெய்வீகப் பணியாகச் செய்ய வேண்டும். செய்யும் வேலையின் பலனில் பற்று வைக்காமல் ஒரு கடமையாகச் செய்துவரவேண்டும். இது கீதையின் மையக் கருத்துக்களில் ஒன்று.


ராஜராஜன் பற்றி இன்னொரு கதையும் வழக்கில் உள்ளது. அவன் ஒரு முறை மேற்பர்வை இடும் போது தலைமைச் சிற்பி இருக்கும் இடத்துக்குச் சென்றான். மன்னர் வந்ததைக் கூடக் கவனிக்காமல் சிற்பியானவன் கண்ணும் கருத்துமாகச் சிற்பங்களைச் செதுக்குவதிலேயே கவனமாக இருந்தான்.

அவனைப் போன்ற பெரிய சிற்பிகளுக்கு எடுபிடி வேலை செய்ய சின்ன வேலைக்காரர்கள்/அடைப்பக்காரர்கள் அருகில் நிற்பார்கள். அவர்கள் தேவைப் படும்போதெல்லாம் வெற்றிலை,பாக்கு மடித்துக் கொடுப்பார்கள். வெற்றிலையைக் குதப்பித் துப்புவதற்கு ஒரு கலசத்தையும் ஏந்தி நிற்பார்கள். ஒரு முறை மன்னர் ராஜ ராஜன் போய் அருகில் நின்றபோது , அடைப்பைக்காரனென்று நினைத்து


ஏ வெற்றிலை மடித்துக் கொடு என்று உத்தரவிட்டான் சிற்பி.
உடனே ராஜராஜன் வெற்றிலை மடித்துக்கொடுத்தான்.

சிறிது நேரம் கழித்து வாயில் குதப்பிய எச்சில் வெற்றிலையைப் புளிச்சென்று துப்பினான். அதையும் கலசத்தில் ஏந்தினான மன்னன். எதேச்சையாக சிற்பி நிமிர்ந்து பார்த்தபோது மன்னரிடம் இப்படி எடுபிடி வேலைகள் செய்யச் சொன்னதை எண்ணி பயந்து நடுங்கினான். ஆனால் ராஜ ராஜனோ சிற்பியின் ஈடுபாட்டையும் ஒருமுக கவனத்தையும் பாராட்டிச் சென்றான். சிற்பிக்குப் பன் மடங்கு உற்சாகம் அதிகரித்தது.


செய்யும் தொழிலையே தெய்வமாகக் கருதினான் சிற்பி. அவனுக்கு வேலையில் இருந்த கவனமும் ஈடுபாடும் அவன் அதை தெய்வீகப் பணியாகக் கருதியதைக் காட்டுகிறது. நாமும் பலனில் பற்று வைக்காமல் நமது கடமையைச் செய்தோமானால் நம் பணி சிறக்கும், நாடும் செழிக்கும்.
Picture is taken from another site.Thanks.
 
Status
Not open for further replies.
Back
Top