சென்னையிலிருந்து டெல்லிக்கு 'அம்மா எக்ஸ&

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
சென்னையிலிருந்து டெல்லிக்கு 'அம்மா எக்ஸ&



சென்னையிலிருந்து டெல்லிக்கு
'அம்மா எக்ஸ்பிரஸ்': அதிமுக கோரிக்கை!


புதுடெல்லி:
சென்னையிலிருந்து டெல்லிக்கு 'அம்மா எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் புதிய ரயில் இயக்கவேண்டும் என ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவையில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசும்போது, “மும்பைக்கு அடுத்தபடியாக சென்னைக்கு புல்லட் ரயில் இயக்க வேண்டும்.

தமிழக முதல்வரின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, சென்னை எம்.ஆர்.டி.எஸ். பறக்கும் ரயில் போக்குவரத்தை, மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

சென்னை திரிசூலம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். ஸ்ரீராமானுஜர் அவதரித்த தலமான ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தாம்பரத்துக்கு ரயில் பாதை அமைக்கவேண்டும். மேலும் இப்பாதையை பெங்களூர் பாதையுடன் இணைக்க வேண்டும். சென்னையிலிருந்து டெல்லிக்கு 'அம்மா எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் புதிய ரயில் இயக்க வேண்டும்” என்றார்.



Read more: ???????????????? ?????????? '????? ??????????': ?????? ????????! ?
 
Status
Not open for further replies.
Back
Top