சூர்ய நமஸ்கார மந்திரங்கள்

praveen

Life is a dream
Staff member
ஓம் மித்ராய நம:
ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம:
ஓம் பானவே நம:
ஓம் ககாய நம:
ஓம் பூஷ்ணே நம:
ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
ஓம் மரீசய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்க்காய நம:
ஓம் பாஸ்கராய நம:

சூரிய நமஸ்காரம்
முடிந்ததம் சூரியனையும் மற்ற நவகிரகங்களையும் நமஸ்கரிக்கும் மந்திரம்

நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச
குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ.

சூரிய (பூஜை) நமஸ்காரம் என்பது மற்ற தெய்வங்களை பூஜை அறையில் வழிபடுவது போல சூரியனையும் வழிபடுவதையேக் குறிக்கும். இது யார் வேண்டுமானாலும் எளிய முறையில் செய்யலாம். அதிகாலையில், அதாவது ஆறு மணிக்குள் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து சமயச் சின்னங்களை (விபூதி, குங்குமம், திருமண் போன்றவை) அணிந்து கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனை தரிசனம் செய்வது சூரிய நமஸ்காரத்தின் முதல்படி.

பாஸ்கராய வித்மஹே
மஹத் யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத்

என்பது சூரிய காயத்ரி.

இதனை மூன்று முறை ஜெபித்து விட்டு அடியிற்கண்ட எளிய மந்திரத்தைச் சொல்லி சூரியனை நமஸ்காரம் செய்யலாம்.

ஓம் தினகராய பாஸ்கராய
ஜ்யோதிஸ்வ ரூபாய
சூர்ய நாராயணாய தேவாய
நமோ நமஹ
இது சூரிய நமஸ்காரத்திற்கு எளிய மந்திரம்.
 
Back
Top