சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில்

Status
Not open for further replies.
சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில்

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில்

vaithees_seer4-300x186.jpg



கும்பகோணத்திலிருந்து சீர்காழி செல்லும் சாலையில் அமைந்துள்ளது இத்தலம். இது ஒரு அங்காரக ஷேத்ரம். இத்தலத்திற்கு புள்ளிருக்கு வேலூர் என்பதும் பெயர். புள் என்பது சடாயுவையும், ரிக் வேதத்தையும் ஊர் என்பது சூரியனையும் குறிக்கிறது. அம்பிகை பூஜித்ததால் அம்பிகாபுரம் என்று வழங்கப்படுகிறது. ஜடாயுபுரி, வேதபுரி, கந்தபுரி, அங்காரபுரி போன்ற பெயர்களும் இத்திருத்தலத்திற்கு உண்டு. முருகப்பெருமான் தாரகனோடு போரிட்டபோது காயமுற்ற வீரர்களை குணப்படுத்த தன் தந்தையை நாடினார்.


பரமேஸ்வரனே மணிமந்திர ஒளஷதம் எல்லாமும் ஆகி பேரின்பம் தரக்கூடியவர் என்பதை உணர்த்தவே முருகப்பெருமான் தந்தையை அழைத்தார். மகனின் வேண்டுகோளுக்கு இணங்க பிறவிப் பிணிகளையும் தீர்க்கும் வைத்தியநாகனாக ஈசனும், தையல்நாயகி ஆக உமையம்மையும் வந்தமர்ந்த திருக்கோவில் இது. அப்படி வரும்போது தையல்நாயகியாகிய தைலாம்பிகை தைலங்கள் கொண்டு வந்து வைத்திய நாதனான ஈசனோடுசேர்ந்து 4448 வகை நோய்களை தீர்த்து வைத்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது.


இத்தலத்தில் பதினெட்டுத் தீர்த்தங்கள் உள்ளன. இதில் மகிமை வாய்ந்ததும், முதன்மை பெற்றதுமான தீர்த்தம் சித்தாம்ருத தீர்த்தம். இது காமதேனுவால் உருவாக்கப்பட்டது. தொழுநோயால் அவதிப்பட்ட அங்காரகன் (செவ்வாய்) இத்தலத்திற்கு வந்து ஈசனை பூஜித்து நோய் நீங்கப் பெற்றமையால் இது அங்காரக ஷேத்ரம் என்று போற்றப்படுகிறது. ஆகையால் இத்தலத்திற்கு வந்து வழிபடுவோரை அங்காரக தோஷங்கள் அண்டாது. இத்திருக்கோவிலின் அமைப்பே நிம்முடைய பிராணசக்தியை அதிகரித்து நோய் தீர்க்கும் தன்மை கொண்டதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.


vaithi_nagai2-300x186.jpg




ஸ்வாமி சன்னிதியில் கர்ப்பகிரஹத்திற்கு முன் அர்த்த மண்டபத்தில் பலவிதமான ஆராதாரச் சக்கரங்கள் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட சக்கரத்தில் அமர்ந்து தியானம் செய்யும்போது குறிப்பிட்ட பலன்களை அடையலாம் என்றும் கூறுகின்றனர். முன்புற வாயில் வழியாக உள்ளே நுழையும் போதே நிம் ப்ராணசக்தி அதிகரித்து நிமது உடல் நிலம் பெறத் தொடங்குகிறது.இங்கே உள்ள த்வஜஸ்தம்பங்கள் நம்மிடமுள்ள எதிர்மறையான ப்ராணசக்தியை விலக்கிவிடுகிறது.


இங்கே கொட்டப்படும் கல் உப்பு அத்தகைய சக்தியை முற்றிலுமாக நீக்கி வருகிறது. ஈசனின் கர்ப்பக்ரஹம் அமைந்திருக்கும் விதம் நிம் மனதையும், உடலையும் சீராக்கி, நில்ல ப்ராண சக்தியையும் மன அமைதியையும் தருகிறது. (ஆனால் இப்போது நாம் பின்புறம் வழியாகவே கோவிலினுள் செல்கிறோம்). லவர் கர்ப்பக்ரஹத்தில் இடது புறம் முத்துக்குமாரர் சன்னிதி அமைந்திருக்கிறது. முத்துக்குமாரர் தன் இரு மனைவியருடன் அருட்காட்சி தருகிறார்.


இங்கே ஜடாயுகுண்டம் அமைந்திருக்கிறது. ஜடாயு வேண்டிக் கொண்டபடி ஸ்ரீ ராமபிரான் ஜடாயுவின் உடலை இந்த இடத்திலே தகனம் செய்தாராம். இத்திருக்கோவில் சுற்றிலும் மேல்புறம் ஒரு சிறிய சாளரம் வழியாக சட்டை நாதரையும் வழிபடலாம். காமதேனு தன் மடிக்காம்பின் வழிபாலைக் கொண்டு லிங்கத்திருமேனியை அபிஷேகிக்க வழிந்தோடிய பாலே பாற்குளமாகத் திகழ்கிறது. இங்குள்ள புஷ்கரணியில் வெல்லம் வாங்கிக் கரைத்தால், நீரில் வெல்வம் கரைவது போல் நிமது நோய்களும் கரைந்து விடும் என்பது ஐதீகம்.




இத்தலத்தின் வ்ருக்ஷம் வேம்பு. இத்தலத்து அன்னை தையல்நாயகி கையில் எண்ணைக் கிண்ணம் கொண்டு நன்ற திருக்கோலத்தில் அனைவருக்கும் வினை தீர்த்து அருளுகிறாள். இங்கே அங்காரகனுக்கு தனி சன்னிதி அமைந்திருக்கிறது. சகல நோய்களையும் தீர்க்கும் திருச்சாந்து உருண்டை இங்கே வழங்கப்படுகிறது. செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தடைபடும்.


இத்தோஷம் நீங்க முருகப் பெருமானை வழிபடலாம். செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து அங்காரகனுக்குச் சிவப்பு ஆடை சாத்தி செவ்வலரி மலர்களால் அர்ச்சனை செய்து, துவரம் பருப்பு பொடிகலந்த அன்னத்தை நவேதித்து தானம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்று புராணங்கள் சொல்லுகின்றன. அங்காரகன், விநாயகர் அருளால் நிவக்கிரகங்களில் ஒருவராகப் பதவி அடைந்ததாகவும், புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தில் காமதேனு, துர்கை, பிரம்மா, சரஸ்வதி, பூமிதேவி, ஸ்ரீராமர், சூரியன், அங்காரகன் போன்றோரும் பராசரர், துர்வாசர் போன்ற மகரிஷிகளும், ஜடாயு, சம்பாஜி போன்ற பறவைகளும் வணங்கி வழிப்பட்ட திருத்தலம் இது.

???????????? ?????? |


Please also read from here
????? ????????? ????????????? ???????????? ?????? - ?????? ??????? Dinamani Blog
 
Status
Not open for further replies.
Back
Top