• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சிவபெருமான் 1008 போற்றி

praveen

Life is a dream
Staff member
நக்கீரர்

ஓம் ஒருதலை மகனாய் உயர்ந்தோய் போற்றி
ஓம் மறுதலை நோய்கள் அறுப்போய் போற்றி
ஓம் கொடுவினை தீர்க்கும் கோவே போற்றி
ஓம் முடியடி தெரியா முதலே போற்றி
ஓம் கூற்றுவன் பிணியாக் கொற்றவா போற்றி
ஓம் ஏற்றன இயற்றும் எந்தாய் போற்றி
ஓம் இன்னதென் றறிகிலா இறையே போற்றி
ஓம் மன்னும் நிலையுடை மறையே போற்றி
ஓம் தென்னன் உவந்த மன்னனே போற்றி
ஓம் இன்னல் அழிப்பாய் போற்றி போற்றி

காரைக்கால் அம்மையார் - மூத்த திருப்பதிகம்

ஓம் அறிவாய் போற்றி அறிவிப்பாய் போற்றி
ஓம் அறிவை அறியும் பொருளே போற்றி
ஓம் ஒப்பினை யில்லா உருவே போற்றி
ஓம் எப்பொழுதும் எம்மனம் இருப்போய் போற்றி
ஓம் மறவா மக்களை மதியாய் போற்றி
ஓம் பிறவாமை காக்கும் பெரும போற்றி
ஓம் நகைப்பில் உலகம் துகைப்பாய் போற்றி
ஓம் அகப்பேய் அகந்தை அழிப்பாய் போற்றி
ஓம் ஆதியா நின்ற அருளே போற்றி
ஓம் வேதியா உண்மைப் பொருளே போற்றி
ஓம் தென்குடந்தை மேவும் தேவா போற்றி
ஓம் பெண்மடந்தைத் தோளா போற்றி போற்றி
ஓம் ஐயாறு நின்ற ஐயா போற்றி
ஓம் கையறு தும்பம் களைவோய் போற்றி
ஓம் திருத்துருத்தி கொண்ட தென்னவா போற்றி
ஓம் சிரித்துப் பகை வெல்லும் சிவனே போற்றி
ஓம் திருக்கோடி காவுடைத் திருவே போற்றி
ஓம் அருட்பா உரைப்பார்க்கு அன்பா போற்றி
ஓம் பழிதுடைத்து ஆளும் பரனே போற்றி
ஓம் குழிதண்டலையாய் போற்றி போற்றி
ஓம் மயிலையம்பதி மணியே போற்றி
ஓம் செயலை முற்றச் செய்குவாய் போற்றி
ஓம் குளத்தூர் அமர்ந்த கோவே போற்றி
ஓம் உளத்துள் சிறக்கும் உறவே போற்றி
ஓம் பூம்புகார்ச் சாய்க்காடு புகுந்தாய் போற்றி
ஓம் தேம்புவார் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சிராமலை மேவிய சிவனே போற்றி
ஓம் இராமல் எங்கும் இருப்போய் போற்றி
ஓம் ஒற்றியூர் <உடைய கொற்றவா போற்றி
ஓம் வெற்றியே நல்கும் வீரா போற்றி

திருஞானசம்பந்தர் - 1,2,3, ஆம் திருமுறைகள்

ஓம் காடிடங் கொண்ட கடவுளே போற்றி
ஓம் நாடகம் நடத்தும் நாயகா போற்றி
ஓம் பாடகம் ஒலிப்ப ஆடுவாய் போற்றி
ஓம் கூடலம் பதியுறை கோவே போற்றி
ஓம் ஞாலமே நடத்தும் நாயகா போற்றி
ஓம் ஆலவாய் அமர்ந்த அண்ணலே போற்றி
ஓம் பூவில் மணமாய்ப் பிறப்பாய் போற்றி
ஓம் காவின் தென்றலே ஆவாய் போற்றி
ஓம் நாவிற் சொல்லாய் மலர்வாய் போற்றி
ஓம் நல்லவர் இதயம் ஆவாய் போற்றி
ஓம் மணியொலி சங்கொலி அணிவாய் போற்றி
ஓம் நணுகுதல் அரிய நிலையே போற்றி
ஓம் பணிசெய உவக்கும் பதியே போற்றி
ஓம் அணிகிளர் கூடல் அமர்ந்தோய் போற்றி
ஓம் அண்டவர் காணா அரனே போற்றி
ஓம் கண்டவர் நெஞ்சம் கவர்வாய் போற்றி
ஓம் பண்டும் இன்றும் நின்றாய் போற்றி
ஓம் தொண்டவர் உள்ளம் ஆண்டவா போற்றி
ஓம் செய்யனே போற்றி ஐயனே போற்றி
ஓம் சித்தனே போற்றி அத்தனே போற்றி
ஓம் சொக்கனே போற்றி சிட்டனே போற்றி
ஓம் அண்ணாலே போற்றி அங்கணா போற்றி
ஓம் ஆலவாய் அப்பா போற்றி போற்றி
ஓம் அட்ட மூர்த்தியே போற்றி போற்றி
ஓம் மதுரனே போற்றி மணாளனே போற்றி
ஓம் சதுரனே போற்றி சாமியே போற்றி
ஓம் பாதி மாது பரமா போற்றி
ஓம் கோல நீறணி கோமான் போற்றி
ஓம் கோதிலார் மனத்தே மேவுவாய் போற்றி
ஓம் அங்கயர் கண்ணியோ டமர்ந்தாய் போற்றி
ஓம் அற்றவர்க்கு அற்ற அரனே போற்றி
ஓம் பாண்டி மாதேவிக்கு அருளினோய் போற்றி
ஓம் குலச்சிறை ஏத்துங்குன்றே போற்றி
ஓம் தோடுடைச் செவியாய் போற்றி போற்றி
ஓம் தூவெண் மதியைச் சூடினோய் போற்றி
ஓம் காடுடைப் பொடியைப் பூசினோய் போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி போற்றி
ஓம் என்றும் இருந்தாய் போற்றி போற்றி
ஓம் உள்ளம் கவர்ந்த வள்ளலே போற்றி
ஓம் பெற்றம் ஊர்ந்த கொற்றவா போற்றி
ஓம் ஒருமை பெண்மை உடையாய் போற்றி
ஓம் அருமையான ஐயா போற்றி
ஓம் பெருமைக்குரிய இறைவா போற்றி
ஓம் சிறுமை நோக்கிச் சினந்தாய் போற்றி
ஓம் மறையாய் ஒலிக்கும் மணியே போற்றி
ஓம் இறையாய் எங்கும் இருப்பாய் போற்றி
ஓம் ஊழியின் முடிவிலும் உள்ளாய் போற்றி
ஓம் ஆழிகள் அனைத்தும் அணிந்தாய் போற்றி
ஓம் அருநெறி அருளும் அண்ணல் போற்றி
ஓம் பெருநெறி மேவும் அருளே போற்றி
ஓம் ஒத்த உணர்வினை உவந்தாய் போற்றி
ஓம் குறியாம் இசையில் குளிர்ந்தாய் போற்றி
ஓம் நெறியாய்க் கலந்த நினைவே போற்றி
ஓம் பண்ணில் நிலவும் பாடலே போற்றி
ஓம் உண்ணி லாவிய உணர்வே போற்றி
ஓம் மண்ணில் நிலவும் மன்னா போற்றி
ஓம் கண்ணார் அமுதே போற்றி போற்றி
ஓம் யாரினும் இனியன் ஆனோய் போற்றி
ஓம் பேரிலும் பெரியன் நீயே போற்றி
ஓம் பொய்யில்லாத மனத்தாய் போற்றி
ஓம் மெய்யில் நின்ற ஐயா போற்றி
ஓம் செய்ய மேனியின் அழகா போற்றி
ஓம் பைய வினைகள் பறிப்பாய் போற்றி
ஓம் விழவின் ஒலியை விரும்புவாய் போற்றி
ஓம் முழவின் முழக்கில் முகிழ்ப்பாய் போற்றி
ஓம் கள்ள மனத்தைக் கடந்தாய் போற்றி
ஓம் உள்ளம் ஆர்ந்த உருவே போற்றி
ஓம் தவத்தில் காட்டும் முகத்தாய் போற்றி
ஓம் அவத்தை அகற்றும் அண்ணல் போற்றி
ஓம் உவப்பில் மலரும் உளமே போற்றி
ஓம் உணர்தற்கு அரியாய் போற்றி போற்றி
ஓம் அன்பிற்கு இணங்கும் ஐயனே போற்றி
ஓம் துன்பந்துடைக்கும் தூயனே போற்றி
ஓம் செய்ய நெறியில் செலுத்துவாய் போற்றி
ஓம் உய்யும் வண்ணம் உணர்த்துவாய் போற்றி
ஓம் ஒ

ற்றை வெள்ளேறு உடையாய் போற்றி
ஓம் புற்றின் அரவம் புனைந்தாய் போற்றி
ஓம் பற்றினார் பற்றினைப் பறிப்பாய் போற்றி
ஓம் நற்றவக் கொழுந்தே போற்றி போற்றி
ஓம் புந்தியொன்றினோர்ப் பொருளே போற்றி
ஓம் சிந்தியா தவர்க்கும் சொந்தமே போற்றி
ஓம் தெரியத் தேனாய் இனிப்பாய் போற்றி
ஓம் அரியன வெல்லாம் அருள்வாய் போற்றி
ஓம் உரியன வெல்லாம் உவந்தாய் போற்றி
ஓம் நுதற்கண் கனலாய் போற்றி போற்றி
ஓம் உருக்கண் மணியாய் போற்றி போற்றி
ஓம் மறைக்கண் ணொளியாய் போற்றி போற்றி
ஓம் உரைக்கண் கடந்தாய் போற்றி போற்றி
ஓம் நஞ்சும் அருந்தும் நெஞ்சினோய் போற்றி
ஓம் அஞ்சினார் உருக அணைப்பாய் போற்றி
ஓம் நெஞ்சத் தாமரை நிலைப்பாய் போற்றி
ஓம் வஞ்சர்க்கும் அருளும் வள்ளால் போற்றி
ஓம் கலைகள் அனைத்தும் கடந்தாய் போற்றி
ஓம் நிலையாய் நின்ற தலைவா போற்றி
ஓம் பொய்ம்மொழிப் பொருளைப் பொடிப்பாய் போற்றி
ஓம் செம்மொழி அருளும் சிவனே போற்றி
ஓம் பொங்கும் ஞானம் புரிவாய் போற்றி
ஓம் எம்மிறை யானே ஏந்தலே போற்றி
ஓம் இலங்கெரி யெடுத்தே ஆடுவாய் போற்றி
ஓம் புலன்விளை வினைகள் போக்குவாய் போற்றி
ஓம் கோயிற் குடிகொளும் கொற்றவா போற்றி
ஓம் நாவின் துதிகொளும் நாயகா போற்றி
ஓம் அல்லல் அறுக்கும் நல்லாய் போற்றி
ஓம் எல்லாப் பொருளும் இயக்குவாய் போற்றி
ஓம் சொல்லில் தெறிக்கும் சுவையே போற்றி
ஓம் நல்லவர் உள்ளம் நயப்பாய் போற்றி
ஓம் நுண்ணறி வாளர் கண்ணே போற்றி
ஓம் எண்ணரும் ஞானத் தின்பமே போற்றி
ஓம் அருவினை அனைத்தும் அறுப்பாய் போற்றி
ஓம் பெருவினை இயற்றும் பெரும போற்றி
ஓம் கற்றவர் உள்ளம் உற்றாய் போற்றி
ஓம் செற்றவர் சினத்தை எற்றுவாய் போற்றி
ஓம் மற்றெவர் மனத்தும் மகிழ்வாய் போற்றி
ஓம் நற்றவ நாதா போற்றி போற்றி
ஓம் சொந்தமும் துணையும் ஆனோய் போற்றி
ஓம் செந்தமிழுள்ளும் சிறந்தாய் போற்றி
ஓம் மலைமகள் மணாளா போற்றி போற்றி
ஓம் கலைபயில் அழகா போற்றி போற்றி
ஓம் நிலைபெயர் வறியாத் தலைவா போற்றி
ஓம் நினைவார்க்குரிய துணைவா போற்றி
ஓம் புண்ணியர் போற்றும் பொருளே போற்றி
ஓம் போற்றுவார் பாடல் புனைவாய் போற்றி
ஓம் பண்ணியல் மாலை நண்ணுவாய் போற்றி
ஓம் பாடுவார் நாவில் ஆடுவாய் போற்றி
ஓம் முத்தியர் உவக்கும் உத்தம போற்றி
ஓம் பத்திமைப் பாடல் நத்துவாய் போற்றி
ஓம் எத்திசை யுள்ளும் இருப்பாய் போற்றி
ஓம் அத்தனே இசையிற் பித்தனே போற்றி
ஓம் வந்தனைந்து ஏத்துவார் வரமே போற்றி
ஓம் சொந்தமென்று உரைப்பார் சுகமே போற்றி
ஓம் குற்ற மறுத்தார் குணமே போற்றி
ஓம் சொற்கவி அனைத்தும் சூழ்ந்தாய் போற்றி
ஓம் வெற்றியின் விளைவே போற்றி போற்றி
ஓம் கண்டவர் சிந்தை கவர்ந்தாய் போற்றி
ஓம் கருதி வந்தோர்க்கு உறுதியே போற்றி
ஓம் கரங்கூப்ப நேரும் காட்சியாய் போற்றி
ஓம் வரமீந்து உதவும் வள்ளல் போற்றி
ஓம் சைவம் அருளிய தெய்வமே போற்றி
ஓம் வையகம் காக்கும் ஐயனே போற்றி
ஓம் வித்தாய் அன்பு விதைப்பாய் போற்றி
ஓம் தத்துவ ஞானத் தமிழே போற்றி
ஓம் பொன்னியல் கொன்றை பூண்பாய் போற்றி
ஓம் இன்னிசை மாலை ஏந்துவாய் போற்றி
ஓம் காற்றாய்த் திரியும் அரனே போற்றி
ஓம் கனலாய் எரியும் சிவனே போற்றி
ஓம் கடலாய்ப் பரக்கும் முதலே போற்றி
ஓம் உடலாய் உயிராய் உள்ளாய் போற்றி
ஓம் மலையாய் நிலைப்பாய் போற்றி போற்றி
ஓம் மண்ணாய் வளர்வாய் போற்றி போற்றி
ஓம் வெளியாய் இருப்பாய் போற்றி போற்றி
ஓம் வேண்டுதல் வெறுப்பு வேண்டாய் போற்றி
ஓம் ஒளியாய் நிறைவாய் போற்றி போற்றி
ஓம் உருகுவார் உள்ளத்து இறங்குவாய் போற்றி
ஓம் பொருந்தும் மானம் காப்பாய் போற்றி
ஓம் புண்ணியப் பயனே போற்றி போற்றி

பரஞ்சோதி முனிவர் - திருவிளையாடற் புராணம்

ஓம் பூவின் நாயகா போற்றி போற்றி
ஓம் பூமகள் நாயகா போற்றி போற்றி
ஓம் தாவில் நாயகா போற்றி போற்றி
ஓம் தேவி நாயகன் போற்றி போற்றி
ஓம் பராபர முதலே போற்றி போற்றி
ஓம் பத்தியில் விளைவாய் போற்றிபோற்றி
ஓம் சராசரமாகி நின்றாய் போற்றி
ஓம் வெள்ளி அம்பல ஆடலாய் போற்றி
ஓம் கயல்விழி பாகம் கொண்டாய் போற்றி
ஓம் பெரியோய் போற்றி புனிதா போற்றி
ஓம் அரியாய் போற்றி எளியாய் போற்றி
ஓம் பழையோய் போற்றி புதியோய் போற்றி
ஓம் இருளாய் ஒளியாய் நின்றாய் போற்றி
ஓம் அருளா போற்றி அழகா போற்றி
ஓம் அரசால் மதுரை அமர்ந்தாய் போற்றி
ஓம் கூடற் கோயில் கொண்டாய் போற்றி
ஓம் ஆடல் அரங்காய் அமர்ந்தாய் போற்றி
ஓம் சத்தியும் சிவமும் ஆனோய் போற்றி
ஓம் முத்தியான முதலே போற்றி

மாணிக்கவாசகர் - திருவாசகம்

ஓம் ஆடக மதுரை அரசே போற்றி
ஓம் கூடல் இலங்கு குருமணி போற்றி
ஓம் தென்றிலை மன்றினுள் ஆடி போற்றி
ஓம் இன்றெனக்கு ஆரமுது ஆனோய் போற்றி
ஓம் மூவா நான்மறை முதல்வா போற்றி
ஓம் சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
ஓம் மின்னார் உருவ விகிர்தா போற்றி
ஓம் கன்னார் உரித்த கனியே போற்றி
ஓம் ஆவா வென்றெனக்கு அருளாய் போற்றி
ஓம் படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி

ஓம் இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஓம் ஈச போற்றி இறைவா போற்றி
ஓம் தேசப் பளிங்கின் திரளே போற்றி
ஓம் அரைசே போற்றி அமுதே போற்றி
ஓம் விரைசேர் சரண வித்தகா போற்றி
ஓம் வேதி போற்றி விமலா போற்றி
ஓம் ஆதி போற்றி

அறிவே போற்றி
ஓம் கதியே போற்றி கனியே போற்றி
ஓம் நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
ஓம் உடையாய் போற்றி உணர்வே போற்றி

ஓம் கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஓம் ஐயா போற்றி அணுவே போற்றி
ஓம் சைவா போற்றி தலைவா போற்றி
ஓம் குறியே போற்றி குணமே போற்றி
ஓம் நெறியே போற்றி நினைவே போற்றி
ஓம் வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஓம் ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
ஓம் மூவேழ் சுற்றம் முரணுரு போற்றி
ஓம் ஆழாமே அருளும் அரசே போற்றி
ஓம் தோழா போற்றி துணைவா போற்றி

ஓம் வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
ஓம் முத்தா போற்றி முதல்வா போற்றி
ஓம் அத்தா போற்றி அரனே போற்றி
ஓம் உரையுணர் விறந்த ஒருவ போற்றி
ஓம் விரிகடல் உலகின் விளைவே போற்றி
ஓம் அருமையில் எளிய அழகே போற்றி
ஓம் கருமுகி லாகிய கண்ணே போற்றி
ஓம் மன்னிய திருவருண் மலையே போற்றி
ஓம் என்னையும் ஒருவனாக்கி யிருங்கழற் போற்றி
ஓம் சென்னியில் வைத்த சேவக போற்றி

ஓம் தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
ஓம் அழிவிலா ஆனந்த வாரி போற்றி
ஓம் அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
ஓம் முழுவதும் இறந்த முதல்வா போற்றி
ஓம் மானேர் நோக்கி மணாளா போற்றி
ஓம் வானகத் தமரர் தாயே போற்றி
ஓம் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
ஓம் நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
ஓம் தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
ஓம் வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

ஓம் வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
ஓம் அளிபவர் உள்ளத் தமுதே போற்றி
ஓம் கனவிலுந் தேவர்க்கு அரியாய் போற்றி
ஓம் நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
ஓம் இடைமரு துறையும் எந்தாய் போற்றி
ஓம் சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஓம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
ஓம் சீரார் திருவை யாறா போற்றி
ஓம் அண்ணா மலையெம் அண்ணல் போற்றி
ஓம் கண்ணார் அமுதக் கடலே போற்றி

ஓம் ஏகம்பத்து உறையும் எந்தாய் போற்றி
ஓம் பாகம் பெண்ணுரு ஆனோய் போற்றி
ஓம் பராய்த்துறை மேவிய பரனே போற்றி
ஓம் சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஓம் பற்றை அறுக்கும் கொற்றவா போற்றி
ஓம் குற்றாலத் தெங்கூத்தா போற்றி
ஓம் கோகழி மேவிய கோவே போற்றி
ஓம் ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
ஓம் பாங்கார் பழனத் தழகா போற்றி
ஓம் கடம்பூர் மேவிய விடங்கா போற்றி

ஓம் அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
ஓம் தத்துவ ஞானத் தெளிவே போற்றி
ஓம் அத்திக் கருளிய அரசே போற்றி
ஓம் தென்னாடு உடைய சிவனே போற்றி
ஓம் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
ஓம் மானக் கயிலை மலையாய் போற்றி
ஓம் அருளிடத் தோன்றும் அம்மான் போற்றி
ஓம் இருள்கெட அருளும் இறைவா போற்றி
ஓம் அஞ்சேல் என்றிங்கு அருள்வோய் போற்றி

ஓம் நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
ஓம் நித்தா போற்றி நிமலா போற்றி
ஓம் பத்தா போற்றி பவனே போற்றி
ஓம் பெரியாய் போற்றி பிரானே போற்றி
ஓம் அரியாய் போற்றி அமலா போற்றி
ஓம் மறையோர் கோல நெறியே போற்றி
ஓம் முறையே அருளும் முதல்வா போற்றி
ஓம் உறவே போற்றி உயிரே போற்றி
ஓம் சிறவே போற்றி சிவமே போற்றி
ஓம் மஞ்சா போற்றி மணாளா போற்றி

ஓம் பஞ்சேர் அடியாள் பங்கா போற்றி
ஓம் மலங்கெட அருளும் மன்னே போற்றி
ஓம் இலங்கு சுடரெம் ஈசா போற்றி
ஓம் சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி
ஓம் குவைப்பதி மலிந்த கோவே போற்றி
ஓம் மலைநாடுடைய மன்னே போற்றி
ஓம் கலையார் அரிகே சரியாய் போற்றி
ஓம் திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி
ஓம் பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
ஓம் அருவமும் உருவமும் ஆனோய் போற்றி

ஓம் மருவிய கருணை மலையே போற்றி
ஓம் துரியமும் இறந்த சுடரே போற்றி
ஓம் தெரிவரிதாகிய தெளிவே போற்றி
ஓம் தோளா முத்தச் சுடரே போற்றி
ஓம் ஆளான வர்கட்கு அன்பா போற்றி
ஓம் ஆரா அமுதா அருளே போற்றி
ஓம் பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி
ஓம் தாளி யறுகின் தாராய் போற்றி
ஓம் நீளொளி ஆகிய நிருத்தா போற்றி
ஓம் சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி

ஓம் சிந்தனைக் கரிய சிவமே போற்றி
ஓம் மந்திர மாமலை மேயோய் போற்றி
ஓம் எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
ஓம் புலிமுலை புல்வாய்க்கு அருளினை போற்றி
ஓம் அலைகடன் மீமிசை நடந்தோய் போற்றி
ஓம் குருவி தனக்கும் அருளினை போற்றி
ஓம் இரும்புலன் புலர இசைந்தனை போற்றி
ஓம் படியுறப் பயின்ற பரனே போற்றி
ஓம் அடியொடு நடுவீறு ஆனோய் போற்றி
ஓம் நரகுறு துன்பம் அறுத்தனை போற்றி

ஓம் பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஓம் ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
ஓம் செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
ஓம் கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
ஓம் தொழுவார் மையல் துனிப்பாய் போற்றி
ஓம் பிழைப்பன பொறுக்கும் பெரியோய் போற்றி
ஓம் குழைத்தசொன் மாலை கொள்வோய் போற்றி
ஓம் புரம்பல வெரித்த புராண போற்றி
ஓம் பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
ஓம் புயங்கப் பெருமான் போற்றி போற்றி
ஓம் புராண காரண போற்றி போற்றி

அப்பர் 4, 5, 6 - ஆம் திருமுறைகள்

ஓம் எல்லாஞ் சிவனென நின்றாய் போற்றி
ஓம் எரிசுடர் ஆன இறைவா போற்றி
ஓம் கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
ஓம் கொல்லுங் கூற்றினை <உதைத்தாய் போற்றி
ஓம் பாடலின் ஆடலின் பண்பா போற்றி
ஓம் பல்லூழி அனைத்தும் படைத்தாய் போற்றி
ஓம் ஒட்டகத்து ஊணா உகந்தா

ய் போற்றி
ஓம் உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி
ஓம் காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் கார்மேகம் அன்ன மிடற்றாய் போற்றி

ஓம் முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
ஓம் முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
ஓம் எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
ஓம் ஏழ்நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி
ஓம் சில்லைச் சிரைத்தலை ஊணா போற்றி
ஓம் சென்றடைந்தார் தீவினை தீர்ப்பாய் போற்றி
ஓம் தில்லைச் சிற்றம்பலம் மேயாய் போற்றி
ஓம் திருவீரட்டானச் செல்வா போற்றி
ஓம் சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி
ஓம் தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி

ஓம் கூம்பித் தொழுவார் குறிப்பே போற்றி
ஓம் குறிக்கோள் ஆகும் குழகா போற்றி
ஓம் பாம்பும் மதியும் அணிந்தாய் போற்றி
ஓம் பகையறப் புனலும் சுமந்தாய் போற்றி
ஓம் நீறேறு நீல மிடற்றாய் போற்றி
ஓம் நிழல்திகழ் மழுவாள் வைத்தாய் போற்றி
ஓம் ஆறேறு சென்னி உடையாய் போற்றி
ஓம் அடியார்க்கு ஆரமுதம் ஆனோய் போற்றி
ஓம் பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி
ஓம் பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி

ஓம் வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
ஓம் வேழத் துரிவையும் போர்த்தாய் போற்றி
ஓம் நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி
ஓம் நாகம் அசைத்த நம்பா போற்றி
ஓம் மண்துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் மால்கடலும் மால்விசும்பும் ஆனோய் போற்றி
ஓம் விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
ஓம் வேண்டுவ யாவும் தருவாய் போற்றி
ஓம் பண் துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
ஓம் பார்முழுதும் ஆய பரமா போற்றி

ஓம் வெஞ்சினவெள் ஏறூர்தி உடையாய் போற்றி
ஓம் விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
ஓம் துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
ஓம் தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
ஓம் நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
ஓம் நான்மறை ஆறங்கம் ஆனோய் போற்றி
ஓம் முக்கணா போற்றி முதல்வா போற்றி
ஓம் முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
ஓம் தக்கணா போற்றி தருமா போற்றி
ஓம் தத்துவனே போற்றி தாதாய் போற்றி

ஓம் கற்றவர் உண்ணுங் கனியே போற்றி
ஓம் கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
ஓம் அற்றவர்க்கு ஆரதமும் ஆனோய் போற்றி
ஓம் அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
ஓம் மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
ஓம் வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
ஓம் வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி
ஓம் மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
ஓம் கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
ஓம் புலித்தோல் ஆடைக் குழகா போற்றி

ஓம் அங்கணனே அமரர்தம் இறைவா போற்றி
ஓம் ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
ஓம் மலையான் மடந்தை மணாளா போற்றி
ஓம் மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
ஓம் நிலையாக நன்னெஞ்சில் நின்றாய் போற்றி
ஓம் நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி
ஓம் இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி
ஓம் ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனோய் போற்றி
ஓம் பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
ஓம் பூதப் படையுடையாய் போற்றி போற்றி

ஓம் மன்னியசீர் மறைநான்கும் ஆனோய் போற்றி
ஓம் மறியேந்து கையானே போற்றி போற்றி
ஓம் உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
ஓம் உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
ஓம் நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
ஓம் நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
ஓம் வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
ஓம் வெண்மதியங் கண்ணி விரும்பினை போற்றி
ஓம் துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி
ஓம் தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி

ஓம் சங்கரனே தத்துவனே போற்றி போற்றி
ஓம் சதாசிவனே நன்மையனே போற்றி போற்றி
ஓம் பொங்கரவா அழகியனே போற்றி போற்றி
ஓம் புண்ணியனே தெள்ளியனே போற்றி போற்றி
ஓம் அயன்மாலும் காணாத அரனே போற்றி
ஓம் அனலுருவா அன்புருவா போற்றி போற்றி
ஓம் வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
ஓம் வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
ஓம் கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
ஓம் குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி

ஓம் உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
ஓம் உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
ஓம் வள்ளலே போற்றி மணாளா போற்றி
ஓம் வானவர்கோன் தோள்துனித்த மைந்தா போற்றி
ஓம் மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
ஓம் பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
ஓம் புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
ஓம் தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
ஓம் திருமாலுக் காழி அளித்தாய் போற்றி
ஓம் சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி

ஓம் சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
ஓம் பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி
ஓம் பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி
ஓம் கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
ஓம் காதலிப்பார் தங்கட்கு எளியாய் போற்றி
ஓம் அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
ஓம் திருமூலட் டானனே போற்றி போற்றி
ஓம் வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
ஓம் மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஓம் ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி

ஓம் ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஓம் காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் பிச்சாடல் பேயொடு உகந்தாய் போற்றி
ஓம் பிறவி யறுத்திடும் பிரானே போற்றி
ஓம் வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
ஓம் மருவியே சிந்தை புகுந்த

ாய் போற்றி
ஓம் பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி
ஓம் போகாதென் நெஞ்சம் ஆள்வாய் போற்றி
ஓம் உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி

ஓம் உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
ஓம் திருவாகி நின்ற திறமே போற்றி
ஓம் தேசம் பரவப் படுவாய் போற்றி
ஓம் வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
ஓம் வந்தென்றன் சிந்தை உவந்தாய் போற்றி
ஓம் ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓம் ஊராகி நின்ற உலகே போற்றி
ஓம் ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
ஓம் பேராகி எங்கும் பரந்தாய் போற்றி
ஓம் பெயராதென் சிந்தை அமர்ந்தாய் போற்றி

ஓம் நீராவி யான நிழலே போற்றி
ஓம் நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
ஓம் பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
ஓம் பற்றியுலகினை விடாதாய் போற்றி
ஓம் பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
ஓம் பாவிப்பார் பாசம் அறுப்பாய் போற்றி
ஓம் எண்ணும் எழுத்தும் ஆனோய் போற்றி
ஓம் விண்ணும் மண்ணும் ஆனோய் போற்றி
ஓம் மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
ஓம் இமையாது உயிராது இருந்தாய் போற்றி

ஓம் உமையாளை அகத்து அணைத்தாய் போற்றி
ஓம் ஊழி ஏழான ஒருவா போற்றி
ஓம் அமையாவரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி
ஓம் ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
ஓம் மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
ஓம் முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
ஓம் நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
ஓம் நீள அகலம் உடையாய் போற்றி
ஓம் அடியும் முடியும் இல்லாய் போற்றி
ஓம் அங்கொன்று அறியாமை நின்றாய் போற்றி

ஓம் கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
ஓம் கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
ஓம் உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி
ஓம் ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
ஓம் பண்ணார் இசையாய் நின்றாய் போற்றி
ஓம் பண்டே எம்மை ஆண்டாய் போற்றி
ஓம் பொறையுடைய பூமிநீர் ஆனோய் போற்றி
ஓம் பூதப் படையாள் புனிதா போற்றி
ஓம் நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி
ஓம் நீங்காதென் உள்ளத் திருந்தாய் போற்றி

ஓம் மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
ஓம் வானோர் வணங்கப் படுவாய் போற்றி
ஓம் கறையுடைய கண்டம் உடையாய் போற்றி
ஓம் முன்பாகி நின்ற முதலே போற்றி
ஓம் மூவாத மேனி முக்கண்ணா போற்றி
ஓம் அன்பாகி நின்றார்க்கு அணியாய் போற்றி
ஓம் ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி
ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
ஓம் மன்னியென் சிந்தை இருந்தாய் போற்றி
ஓம் மேலை வினைகள் அறுப்பாய் போற்றி

ஓம் மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஓம் ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
ஓம் உடலின் வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
ஓம் படருஞ் சடைமேல் மதியாய் போற்றி
ஓம் பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
ஓம் சுடரில் திகழ்கின்ற சோதி போற்றி
ஓம் தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
ஓம் மைசேர்ந்த கண்டம் உடையாய் போற்றி
ஓம் மாலுக்கோர் ஆழி ஈந்தாய் போற்றி

ஓம் பொய்சேர்ந்த சிந்தை போகாய் போற்றி
ஓம் போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
ஓம் மெய்சேரப் பால்வெண்ணீ றாடீ போற்றி
ஓம் மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி
ஓம் அடியார்க்கு ஆரமுதாய் நின்றாய் போற்றி
ஓம் கூறேறா மங்கை மழுவா போற்றி
ஓம் கொள்ளுங் கிழமை ஏழானாய் போற்றி
ஓம் அண்டமேழ் அன்று கடந்தாய் போற்றி
ஓம் ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
ஓம் பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி

ஓம் பாரோர் விண்ணேத்தப் படுவாய் போற்றி
ஓம் தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி
ஓம் தொழில் நோக்கியாளுஞ் சுடரே போற்றி
ஓம் பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி
ஓம் பேராநோய் பேர விடுப்பாய் போற்றி
ஓம் உருகி நினைவார்க்கு உருகுவாய் போற்றி
ஓம் ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி
ஓம் அருகி மிளிரும் பொன்னே போற்றி
ஓம் ஆரும் இகழப் படாதாய் போற்றி
ஓம் பொய்யா நஞ்சுண்ட பொறையே போற்றி

ஓம் பொருளாக என்னையாட் கொண்டாய் போற்றி
ஓம் மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி
ஓம் பாட்டான நல்ல தொடையாய் போற்றி
ஓம் பரிசை யறியாமை நின்றாய் போற்றி
ஓம் சூட்டான திங்கள் முடியாய் போற்றி
ஓம் தூமாலை மத்தம் அணிந்தாய் போற்றி
ஓம் ஆட்டான அஞ்சும் அமர்ந்தாய் போற்றி
ஓம் அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
ஓம் சதுரா சதுரக் குழையாய் போற்றி

ஓம் சாம்பர் மெய்பசுந் தலைவா போற்றி
ஓம் எதிரா உலகம் அமைப்பாய் போற்றி
ஓம் என்றும் அருளே செய்வாய் போற்றி
ஓம் செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
ஓம் செல்லாச் செல்வம் உடையாய் போற்றி
ஓம் ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஓம் ஆகாய வண்ணம் உடையாய் போற்றி
ஓம் வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி
ஓம் வேளாத வேள்வி உடையாய் போற்றி
ஓம் ஆட்சி உலகை உடையாய் போற்றி

ஓம் அடியார்க்கு அமுதெலாம் ஈவாய் போற்றி
ஓம் சூழ்ச்சி சிறிதும் இல்லாய் போற்றி
ஓம் மாட்சி பெரிதும் உடையாய் போற்றி
ஓம் முன்னியா நின்ற முதல்வா போற்றி
ஓம் மூவா மேனி உடையாய் போற்றி
ஓம் மன்னிய மங்கை மணாளா போற்றி
ஓம் மந்திரம் தந்திரம் ஆனோய் போற்றி
ஓம் எண்மேலும் எண்ணம் உடையாய் போற்றி
ஓம் ஏறரிய ஏறுங் குணத்தாய் போற்றி
ஓம் பண்மேல் பாவித்து இருந்தாய் போற்றி

ஓம் பண்ணொடு வீணையாழ் பயின்றாய் போற்றி
ஓம் விண்மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி
ஓம் முழுநீறு புனை

ந்த மூர்த்தீ போற்றி
ஓம் சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
ஓம் அடியார் அடிமை அறிவாய் போற்றி
ஓம் ஏற்றிசை வான்மேல் இருந்தாய் போற்றி
ஓம் எண்ணாயிர நூறு பெயராய் போற்றி
ஓம் நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
ஓம் நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி
ஓம் சூலப் படையுடையாய் போற்றி போற்றி

ஓம் சுடர்த்திங்கட் கண்ணி உடையாய் போற்றி
ஓம் மாலைமகிழ்ந்து ஒருபால் வைத்தாய் போற்றி
ஓம் மேல்வினை தீர்க்கும் முனிவ போற்றி
ஓம் ஏலக் குழலி பாக போற்றி
ஓம் இடைமருது மேவிய ஈச போற்றி
ஓம் பத்துப் பல்லூழிப் பரந்தாய் போற்றி
ஓம் சீரால் வணங்கப் படுவாய் போற்றி
ஓம் திசையனைத்தும் பிறவும் ஆனோய் போற்றி
ஓம் வேதங்கள் வேள்வி பயந்தாய் போற்றி
ஓம் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனோய் போற்றி

ஓம் பூதங்கள் ஆய புராண போற்றி
ஓம் புகழப் பேரொளியாய் நின்றாய் போற்றி
ஓம் பத்தர்களுக்கு இன்பம் பயந்தாய் போற்றி
ஓம் மாகமடை மும்மதிலும் எய்தாய் போற்றி
ஓம் செய்வினைகள் நல்வினைகள் ஆனோய் போற்றி
ஓம் திசையனைத்தும் நிறைந்த செல்வ போற்றி
ஓம் கொய்மலரங் கொன்றைச் சடையாய் போற்றி
ஓம் கூத்தாட வல்ல குழக போற்றி
ஓம் தோலிற் பொலிந்த உடையாய் போற்றி
ஓம் சுடர்வாய் அரவுடைச் சோதி போற்றி

ஓம் கயிலாயம் இடமாக் கொண்டாய் போற்றி
ஓம் அந்திவாய் வண்ணத்து அழக போற்றி
ஓம் அணிநீல கண்டம் உடையாய் போற்றி
ஓம் முடித்தாமரை அணிந்த மூர்த்தி போற்றி
ஓம் மூவுலகும் தாமாகி நின்றாய் போற்றி
ஓம் கடித்தாமரை ஏய்ந்த கண்ணாய் போற்றி
ஓம் கல்லலகு பாணி பயின்றாய் போற்றி
ஓம் அடித்தாமரை மலர்மேல் வைத்தாய் போற்றி
ஓம் ஆக்கூரில் தோன்றிய அப்பனே போற்றி
ஓம் பதிற்று ஒருநாலும் இல்லாய் போற்றி

ஓம் உணரப் படாததொன் றில்லாய் போற்றி
ஓம் காதிற் குழையும் பெய்தாய் போற்றி
ஓம் கவலைப் பிறப்பும் காப்பாய் போற்றி
ஓம் நெய்யார் திரிசூலம் கையாய் போற்றி
ஓம் நீறேறு தோளெட்டு உடையாய் போற்றி
ஓம் மால்யானை மத்தகத்தைக் கீண்டாய் போற்றி
ஓம் மான்தோல் உடையா மகிழ்ந்தாய் போற்றி
ஓம் கோலானை அழலால் காய்ந்தாய் போற்றி
ஓம் குழவிப் பிறைசடைமேல் வைத்தாய் போற்றி
ஓம் ஊழித் தீயன்ன வொளியாய் போற்றி

ஓம் ஏறேறிச் செல்லும் இறைவ போற்றி
ஓம் தூண்டு சுடரனைய சோதி போற்றி
ஓம் தொல்லமரர் சூளா மணியே போற்றி
ஓம் காண்டற்கு அரியவொரு கடவுள் போற்றி
ஓம் கருதுவார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
ஓம் வேண்டுவார் வேண்டுவதே ஈவாய் போற்றி
ஓம் மெய்கிளரும் ஞான விளக்கே போற்றி
ஓம் மெய்யடியார் உள்ளத்து வித்தே போற்றி
ஓம் பைகிளரும் நாகம் அசைத்தாய் போற்றி
ஓம் பராபரா போற்றி பாசூரா போற்றி

ஓம் சிலந்திக்கருள் முன்னம் செய்தாய் போற்றி
ஓம் நிலந்துக்க நீர்வளிதீ ஆனோய் போற்றி
ஓம் கள்ளி முதுகாட்டில் ஆடி போற்றி
ஓம் ஏரி நிறைந்தனைய செல்வ போற்றி
ஓம் இன்னடியார்க் கின்பம் விளைப்பாய் போற்றி
ஓம் ஆரியன் போற்றி தமிழன் போற்றி
ஓம் அண்ணா மலையெம் அண்ணல் போற்றி
ஓம் ஆடல்மால் யானை <உரித்தாய் போற்றி
ஓம் அகத்தியன் பள்ளி அமர்ந்தாய் போற்றி
ஓம் கோடியாய் போற்றி குழக போற்றி

ஓம் குனிராரூர் கோயிலாக் கொண்டாய் போற்றி
ஓம் நாடிய நன்பொருள்கள் ஆனோய் போற்றி
ஓம் அம்மை பயக்கும் அமிர்தே போற்றி
ஓம் இம்மை பயக்கும் இறைவ போற்றி
ஓம் என்னெஞ்சே யுன்னில் இனியா போற்றி
ஓம் மெய்ம்மையே ஞான விளக்கே போற்றி
ஓம் மூலநோய் தீர்க்கும் முதல்வ போற்றி
ஓம் முத்தமிழும் நான்மறையும் ஆனோய் போற்றி
ஓம் ஆலின்கீழ் நால்வர்க்கு அறத்தாய் போற்றி
ஓம் ஆதியும் அந்தமும் ஆனோய் போற்றி

ஓம் பால விருத்தணும் ஆனோய் போற்றி
 

Latest ads

Back
Top