சிறுதானிய கார குழிப்பணியாரம்

Status
Not open for further replies.
சிறுதானிய கார குழிப்பணியாரம்

12794511_994715030619123_1206309023461037075_n.jpg


சிறுதானிய கார குழிப்பணியாரம்....
தேவையானவை: இட்லி அரிசி - 1/4 கிலோ, சாமை - 150 கிராம், குதிரைவாலி - 100 கிராம், உளுந்து - 200 கிராம், கடலைப் பருப்பு - 50 கிராம், பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் (நறுக்கியது) - தலா 1, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காய்த் தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இட்லி அரிசி, சாமை, குதிரைவாலி அரிசி, உளுந்து ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, ஊறவைத்து இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். கடலைப் பருப்பை வறுத்து, மாவில் கொட்டி, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கொத்தமல்லி, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ள வேண்டும். குழிப்பணியாரம் செய்யும் தட்டில் மாவை ஊற்றி, வார்த்து எடுக்க வேண்டும்.
பலன்கள்: குதிரைவாலி, சாமை, இட்லி அரிசி ஆகியவை ஒன்று சேர்வதால் இந்தப் பணியாரத்தைச் சாப்பிடும்போது, உடல் மந்தத்தன்மை அடையாது.உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். முழுக்க ஆவியிலும் வேகாமல், எண்ணெயிலும் பொரிக்கப்படாமால் செய்யப்படுவதால், சத்துக்கள் சிதையாமல் உடலுக்குக் கிடைக்கும். குழந்தைகளுக்கு இந்தப் பணியாரம் மிகவும் பிடிக்கும். தேவைப்பட்டால், காரச்சட்னி சேர்த்துச் சாப்பிடலாம்.

Dr.Vikatan
 
Status
Not open for further replies.
Back
Top