• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சத்ய நாராயணா பூஜை - மந்திரங்கள்

praveen

Life is a dream
Staff member
சத்ய நாராயண விரத மகிமை

காக்கும் கடவுளான விஷ்ணு பகவானுக்கு நடத்தப்படும் பூஜையே சத்யநாராயண பூஜையாகும்.

பெருமாள் எடுத்த பலவிதமான அவதாரங்களில் சத்யநாராயணர் அவதாரமும் ஒன்று.

இந்த சத்யநாராயணருக்கு நடத்தப்படும் பூஜை மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.

இப்பூஜை திருமணம், முக்கிய திருவிழாக்கள், வீடு, நிலம் வாங்கும் போது என எந்த ஒரு நல்லகாரியத்தின் போதும் நடத்தப்படுகிறது.

பக்தர்கள் சத்யநாராயண பூஜையை பவுர்ணமியன்று நடத்துகிறார்கள்.

எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மனதில் பிரார்த்தித்துக் கொண்டு இந்த பூஜையை செய்ய வேண்டும்.

முழுமுதற் கடவுளான விநாயக பெருமானை வணங்கி இந்த சத்யநாராயண பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து நவக்கிரக பூஜை, மற்ற சில பூஜைகøயும் செய்ய வேண்டும். பின் விஷ்ணுவின் பல்வேறு நாமங்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்படும்.

பூஜை முடிந்த பிறகு வகை வகையான உணவுகள் பிரசாதமாக நிவேதிக்கப்படும்.

இப்பூஜையின் போது சத்யநாராயணரின் வரலாற்றை விவரிக்கும் கதையை, பூஜை செய்பவர்கள் அல்லது வயதான பெரியவர்கள் யாராவது கூறவேண்டும்.

பவுர்ணமி மற்றும் மகர சங்கராந்தி (பொங்கல்) அன்று இப்பூஜையை நடத்த மிக உகந்த நாட்கள். பொதுவாக, சத்யநாராயண பூஜை கோயில்களிலோ அல்லது வீட்டிலிலே நடத்துவார்கள்.

கோயிலில் நடத்தும் போது பக்தர்கள் கோயில் குருக்களின் உதவியோடு இப்பூஜையை நடத்துகிறார்கள்.

சத்ய நாராயண விரத ஸங்கல்பம்

ஸுபதிதௌ ஸுபாப்யாம், ஸுபே ஸோபனே முஹுர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே, கலியுகே ப்ரதமபாதே ஜம்புத்வீபே பரதவர்ஷே பரதக்கண்டே, அஸ்மின் வர்த்தமானே, வ்யவ ஹாரிக சாந்திரமானேன. ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (....) நாம ஸம்வத்ஸரே, (....) அயனே, (....) மாஸே (.....) ப÷க்ஷ (....) வாஸர யுகதாயாம், சுபநக்ஷத்ர சுபயோக, சுபகரண ஏவங்குண விசேஷண விஸிஷ்டாயாம், ஸுபதிதௌ, அஸ்மாகம் ஸஹ குடும்பானாம், ÷க்ஷமஸ் தைர்ய விஜய ஆயுராரோக்ய ஜஸ்வர்யாபி வ்ருத்யர்த்தம் தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம், புத்ர பௌத்ராபி வ்ருத்யர்த்தம், ஸத்ய நாராயண தேவதா முத்திஸ்ய ஸத்ய நாராயண தேவதா ப்ரீத்யர்த்தம், ஸத்ய நாராயண பூஜாங்க த்வேன யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி ÷ஷாடஸ உபசார பூஜாம் கரிஷ்யே.

விக்னேஸ்வர பூஜை

ஸுக்லாம் பரதரம் விஷ்ணும்
ஸஸிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்நோப ஸாந்தயே.

மந்திரம்

கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவினா முபமஸ்ர வஸ்தவம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆன ஸ்ருண்வ னநூதிபி ஸ்ஸீதஸாதனம்.

மகா கணாதிபதயே நம:

த்யாயாமி - ஆவாஹயாமி

ஆஸனம் ஸமர்ப்பயாமி
அர்க்யம் ஸமர்ப்பயாமி
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
ஸ்நானம் ஸமர்ப்பயாமி
வஸத்ரம் ஸமர்ப்பயாமி
யக்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி
கந்தம் ஸமர்ப்பயாமி
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
புஷ்பாணி ஸமர்ப்பயாமி

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணிகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷõய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
ஓம் கணாதிபதயே நம:

தூப தீப நைவேத்யாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
கணபதி முத்வாஸயாமி

நவக்கிரஹ பூஜை

சூர்யாய நம : (ஆவாஹயாமி, ஆஸனம் - ஸமர்ப்பயாமி அர்க்யம் - ஸமர்ப்பயாமி, வஸ்த்ரம் - யக்ஞோபவீதம் கந்தம் அக்ஷதான் புஷ்பாணி - ஸமர்ப்பயாமி, தூப தீப நைவேத்யாமி) ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி.

(.....) இதே பிரகாரம் ஒவ்வொரு கிரஹத்திற்கும் மேற்சொல்லிய விதி பிரகாரம் சொல்லிக் கொண்டு தூப தீப நைவேத்தியம் கொடுக்க வேண்டும்.

சந்த்ராய நம: (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

அங்காரகாய நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

புதாய நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

ப்ருஹஸ்பதயே நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

ஸுக்ராய நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

சனைஸ்சராய நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

ராஹுவே நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

கேதுவே நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

இதற்கும் மேற்கண்டவாறு சொல்லவும்.

ப்ரஹ்மணே நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

விஷ்ணவே நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

ஸிவாய நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

லக்ஷ்ம்யை நம : (....) ஆவாஹனாதி
ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

கலச பூஜை

ததங்க கலஸ பூஜாஞ்ச கரிஷ்யே

நம: கலஸம் கந்தம் மூத்திஸ்ய ஸ்ரீ ஸத்ய நாராயண தேவதா ஸமர்ப்பயாமி, புஷ்பம்-ஸமர்ப்பயாமி, அக்ஷதான் - ஸமர்ப்பயாமி, தூபம்-ஆக்ராபயாமி, தீபம் - தாஸ்யாமி, நைவேத்யம்-ஸமர்ப்பயாமி, கர்ப்பூர நீராஞ்சனம்-ஸமர்ப்பயாமி.

ஸ்லோகம்

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு.

ஏவம் கலஸபூஜாம் க்ருத்வா
மயா கரிஷ்ய மாண
ஸ்ரீ ஸத்ய நாராயண விரத பூர்வாங்க
ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜாம் கரிஷ்யே.

சத்ய நாராயண பூஜாவிதி

(ஒவ்வொரு ஸங்கராந்தி பவுர்ணமியில் ஏகாதசிதிதி ஸாயங்காலம் ஸ்நானம் செய்து உபவாசமிருந்து பூஜா ஸ்தானத்தைச் சுத்தி செய்து கோமயம் தெளித்து சித்திரக் கோலமிட்டு விக்னேஸ்வரர் கௌரி வருண தேவதைகளைப் பிரதிஷ்டை செய்வித்து சங்கல்பம் புரிந்து தமது கோத்ர விருத்திக்காகவும், சாந்தி பூர்வமாக சகல மனோரத சித்தி பெற வேண்டி தமது சக்திக்கு ஏற்றவாறு பூஜா திரவ்யாதி நைவேத்தியங்கள் வைத்து ஸ்ரீ விக்நேஸ்வரர் முதலாக ஸுர்யாதி நவக்கிரஹ தேவதா பூஜை செய்து பிறகு ஸத்ய நாராயண பூஜையை ஆரம்பித்துச் செய்ய வேண்டியது.)

சத்ய நாராயண பூஜை

சுலோகம்


த்யாயேத் ஸத்யம் குணாதீதம் குணத்ரய ஸமந்விதம்
லோகநாதம் த்ரிலோகேஸம் கௌஸ்துவாபரணம் ஹரிம்.

தியானம்

நீலவர்ணம் பீதவாஸம் ஸ்ரீவத்ஸ பதபூஷிதம்
கோவிந்தம் கோகுலாநந்தம்ப ப்ரஹ்மாத்யைரபி பூஷிதம் ஸமர்ப்பயாமி

அர்க்யம்

வ்யக்தாவ்யக்த ஸ்வரூபாய ஹ்ருஷீக பதயே நம:
மயாநிவேதிதோ பக்த்யா அர்க்யோயம் ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி

பாத்யம்

நாராயண நமஸ்தேஸ்து நாகார்ணவ தாரக
பாத்யம் க்ருஹாண தேவேஸமம ஸெளக்யம் விவர்த்தய ஸமர்ப்பயாமி

ஆசமனீயம்

மந்தாகிந்யாஸ்து யத்வாநி ஸர்வ பாபஹரம்ஸுபம்
ததிதம் கல்பிதம் தேவ ஸம்யகர சம்யதாம் விபோ ஸமர்ப்பயாமி

ஸ்நானம்

ஸ்நானம் பஞ்சாம்ருதைர்த்தேவ க்ருஹாண புரு÷ஷாத்தம
அனாதனாத ஸர்வக்ஞ கீர்வாண ப்ரணதிப்ரிய ஸமர்ப்பயாமி

வஸ்த்ரம்

வேதஸுக்த ஸமாயுக்தே யஜ்னஸாம ஸமன்விதே
ஸர்வவர்ண ப்ரதே தேவி வாஸஸீ ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி

யக்ஞோபவீதம்

ப்ரம்ம விஷ்ணு மஹேஸானாம் நிர்மிதம் ப்ரஹ்மஸுத்ரம்
யக்ஞோபவீத தானேன ப்ரியதாம் கமலாபதிம் ஸமர்ப்பயாமி

சந்தனம்

ஸ்ரீகண்டம் சந்தனம் திவ்யம் கந்தாட்யம் ஸுமனோஹரம்
விலேபனம் ஸுரஸ்ரேஷ்ட சந்தனம் ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி

புஷ்பாணி

மல்லிகாதி ஸுகந்தீனி மாலத்யாதீனி வைரப்போ
மயாஹ்ருதானி பூஜார்த்தம் புஷ்பாணி ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி

அங்கபூஜை

ஓம் நாராயணாய நம: பாதௌ பூஜயாமி
ஓம் ஸேஷஸாயிநே நம: குல்பௌ பூஜயாமி
ஓம் காலஸ்வரூபிணே நம: ஜங்கே பூஜயாமி
ஓம் விஸ்வரூபாய நம: ஜானுனீ பூஜயாமி
ஓம் ஜகந்நாதாய நம: குஹ்யம் பூஜயாமி
ஓம் கமலநாபாய நம: நாபிம் பூஜயாமி
ஓம் ஜகத்குக்ஷிணே நம: குக்ஷிம் பூஜயாமி
ஓம் லக்ஷ்மிவிலஸ்தவக்ஷஸே நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி
ஓம் சக்ராதிஹஸ்தாய நம: ஹஸ்தான் பூஜயாமி
ஓம் சதுர்பாஹவே நம: பாஹுன் பூஜயாமி
ஓம் ஸ்ரீகண்டாய நம: கண்டம் பூஜயாமி
ஓம் சந்த்ரமுகாய நம: முகம் பூஜயாமி
ஓம் ஸத்யவாசே நம: வக்த்ரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீஸாய நம: நாஸிகாம் பூஜயாமி
ஓம் ரவிந்துலோசனாய நம: நேத்ரே பூஜயாமி
ஓம் திக்ஸ்ரோத்ராய நம: ஸ்ரோத்ரே பூஜயாமி
ஓம் ஸர்வவ்யாபிணே நம: ஸிரோ பூஜயாமி
ஓம் ஸ்ரீஸத்யநாராயணஸ்வாமிநே நம: ஸர்வாங்கானி பூஜயாமி

தூப தீப உபசாரம்

வனஸ்பதி ரஸோத்பூதோ
கந்தாட்யோ கத்த உத்தம:
அக்ரே யஸ்ஸர்வ தேவானாம்
தூபோயம் ப்ரதிக்ருஹ்யதாம் ஆக்ராபயாமி

தீபம்

ஸாஜ்யம்சவர்த்தி ஸம்யுக்தம்
வஹ்னி னாயோஜிதம் மமா
தீபம் க்ரூஹாண தேவேச
த்ரைலோக்ய திமிராபஹம் தர்ஸயாமி

ஸத்ய நாராயண ஸ்வாமினே நம:

நைவேத்யம்

க்ருதபக்வ ஹவிஷ்யான்னம் பாயஸஞ்சஸ ஸுர்க்கரம்
நாநாவிதஞ்ச நைவேத்யம் விஷ்ணோமே ப்ரதிக்ருஹ்யதாம் ஸ-மி

ஆசமனீயம்

ஸர்வபாபஹரம் திவ்யம் காங்கேயம்நிர்மலம்ஜலம்
ஆசமனம் மயாதத்தம் க்ருஹ்யதாம் புரு÷ஷாத்தமம் ஸ-மி

தாம்பூலம்

லவங்க கர்ப்பூரயுதம் தாம்பூலம் ஸுரபூஜிதம்
ப்ரீதயாக்ருஹா தேவேஸ மமஸெளக்யம் விவர்த்தய ஸ-மி

பலம்

இதம்பலம் மயாதேவ ஸ்தாபிதம் புரதஸ்தவ
தேவ மே ஸபலாநாபி பவேஜ்ஜனமணி ஜன்மணி ஸ-மி

நீராஜனம்

சதுர்வர்த்தி ஸமாயுக்தம் க்ருதேன ச ஸுபூஜிதம்
நீராஜனேன ஸந்துஷ்டோ பவதேஸன ஜகத்பதி ஸ-மி

ப்ரதக்ஷிண நமஸ்காரம்

யானிகானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானிதானி ப்ரணஸ்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே ஸ-மி

நிவேதனம்

தத: புஷ்பாஞ்ஜலி நமஸ்காரான் ச க்ருத்வாஸ்துவததி
யான்மயா பக்தியுக்தேன பத்ரபுஷ்ப புலம் ஜலம் ஸ-மி

பரிபூர்ணம்

தத்க்ருஹாணா நுகம்பயா மந்த்ரஹீனம் க்ரியாஹீனம்
பக்திஹீனம் ஜனார்த்தன யத்பூஜிதம் மயாதேவ ததஸ்துமே ஸ-மி

ஹரி நாமாஷ்டகம்

ஸ்ரீகேஸவாச்யுத முகுந்த ரதாங்கபாணே
கோவிந்த மாதவ ஜனார்த்தன தானவாரே
நாராயணா மரபதே த்ரிஜகந்நிவாஸ
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி

ஸ்ரீதேவதேவ மதுஸுதன ஸார்ங்கபாணே
தாமோதார்ணவ நிகேதனகைடபாரே
விஸ்வம் பராபரணபூஷித பூமிபால
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி

ஸ்ரீபத மலோசன கதாதர பத்மனாப
பத்மேச பத்மபத பாவன பத்மபாணே
பீதாம்பராம்பரருசே ருசிநாவதார
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி

ஸ்ரீகாந்த கௌஸ்துப தரராதி ஹராக்ஞபாணே
விஷ்ணோ த்ரிவிக்ரம மஹோதர தர்மசேதோ
வைகுண்டவாஸ வசுதாதிப வாசுதேவ
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி

ஸ்ரீநாராஸிம்ஹ நரகாந்தக காந்தமூர்தே லக்ஷ்மீதே
கருடவாஹன ஸேஷஸாயினே
கேஸிப்ரணாஸன சுகேச கிரீடமௌளே
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி

ஸ்ரீவத்ஸலாஞ்சந சுரர்ஷப சங்கபாணே
கல்பாந்தவாரிதி விஹாரஹரே முராரே
யக்ஞேசயக்ஞ மயயக்ஞ முகாதி தேவ
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி

ஸ்ரீராம ராவணரிபோ ரகுவம்ஸகேதேர்
ஸீதாபதே தஸரதாத்மஜ ராஜஸிம்ஹ
சுக்ரீவமித்ர ம்ருகவேதா ஸாபபாணே
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி

ஸ்ரீகிருஷ்ண வ்ருஷ்ணிவர யாதவ ராதிகேஸ
கோவர்த்தநோத்தரண கம்ஸவிநாஸசௌரே
கோபால வேணுகர பாண்டுசுதைக பந்தோ
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி.
 

Latest ads

Back
Top