• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

சங்கராந்தி அல்லது பொங்கல் பண்டிகை

Status
Not open for further replies.
சங்கராந்தி அல்லது பொங்கல் பண்டிகை

நம் தமிழ் நாட்டில் மாத்திரம் தை மாத பிறப்பு தினத்தை பொங்கல்' பண்டிகை என்று சொல்கிறோம். ஆனால் மற்ற மாநிலங்களில் இந்த பண்டிகையை சங்கராந்தி பண்டிகை என்று தான் சொல்கிறார்கள். அது என்ன 'பொங்கல்' 'மாட்டு பொங்கல்' என்றல்லாம் சொல்கிறோம்.தினம் தான் பொங்கல் செய்கிறோம். தமிழ் நாட்டில் மாத்திரம் ஏன் 'பொங்கல் பண்டிகை என்று சொல்கிறோம்? காரணம் ஏதாவது உண்டா? மற்ற மாநிலங்களில் இந்த பண்டிகையை எந்த பெயரில் அழைக்கிறார்கள்
 
எக்காலமாக இருந்தாலும், பொங்கல் என்பது விவசாயத்துடன் சம்பந்தப்பட்டதாக இருந்துள்ளது என்பது மறுக்க முடியாத

உண்மை. இது இன்று நேற்றல்ல. இந்திரவிழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. மணிமேகலையின்

ஆரம்பமான விழாவறை காதையில் "இந்திர விழா' என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது தெரிய வருகிறது.

காவிரிபூம்பட்டினத்தில் இந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இந்த விழா இப்போது தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல்,

காணும் பொங்கல் என்ற மூன்று நாட்களே நடக்கிறது. அந்தக் காலத்தில் 28 நாட்கள் நடந்துள்ளதற்கான சான்று இருக்கிறது.

அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவன் பூம்புகாருக்கு வந்ததாகவும் தகவல் உண்டு.

முதன்முதலாக இந்திரவிழா நடத்திய போது, அதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க முரசறைந்து பொது அறிவிப்பாக

அறிவித்தனர்.


இப்போது பொங்கலுக்கு ஊரையும், வீட்டையும் சுத்தம் செய்து அலங்காரம் செய்வது போல, அப்போதும் நடந்துள்ளது.

வீதிகளிலும், கோயில் வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன. பொன்னால் ஆன பாலிகைகளால் நகரம்

அலங்கரிக்கப்பட்டது. பாக்கு, வாழை மரத்தோரணங்கள் கட்டப்பட்டன. அன்றையச் செல்வச் செழிப்பிற்கேற்ப

தங்கத்தூண்களில் முத்துமாலைகள் தொங்க விடப்பட்டன. நகர வீதிகளிலுள்ள பழைய மணலை மாற்றி புதுமணல்

பரப்பினர். கொடிகள் கட்டப்பட்டன. காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதையெல்லாம் விட உயர்ந்த ஒரு தர்மம் இந்த விழாவை ஒட்டி பின்பற்றப்பட்டது. ஒருவருக்கு யாரேனும் பகைவர்கள்

இருந்தால், அவர்களை விட்டு விலகிச் சென்று விட வற்புறுத்தப்பட்டது. ஒரு நல்ல நாளில், தேவையற்ற சண்டைகள்

வேண்டாமே என்பதற்காக இவ்வாறு அரசு சார்பிலேயே அறிக்கை விடப்பட்டது. இவ்விழா நாளில் பகைமை, பசி, நோய்

நீங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது.



மழைக்குரிய தெய்வம் இந்திரன்.


அவனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து பயிர் பச்சை செழிக்கும் என மக்கள் நம்பினர். பிற்காலத்தில், சூரியனைப்

பற்றிய அறிவு மக்களுக்கு வந்தவுடன், சூரியனே சீதோஷ்ணத்தை நிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து, தங்கள் கண் முன்

காட்சி தரும் அந்த கடவுளுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர். தங்கள் விளைச்சலுக்கு காரணம் அவரே என நம்பினர்.

பூமியில் இருக்கும் நீரை ஆவியாக்கி மேலே கொண்டு சென்று, ஒன்றுக்கு பத்தாக மழை பெய்விப்பவர் என்ற ரீதியில் இந்த

நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் அறுவடை செய்த புதுநெல்லை தை முதல்நாளில் சமைத்ததால், இந்திர விழா

என்ற பெயர் பொங்கல் என மாறியது.

Source:
SATYAMEVA JAYATHE
 
quote1- original by psnarasimhan
quote2-original by raji Ram.

உங்களுடைய இடுகை பதில் பொங்கல் விழாவின் முக்கியத்தை பற்றி கூறிஉள்ளதே தவிர அந்த விழாவை ஏன் பொங்கல் என்று ஒரு பதார்தத்தின் பெயரை கொண்டுள்ளது என்பதை விளக்கவில்லை. ஏன் இ ந்திரவிழா என்ற சொல் நன்றாகத்தானே உள்ளது.அந்த பெயர் வேண்டாமென்றால் தைத் திங்கள் விழா அல்லது தைத்திருவிழா என்று கூறலாமே.. அதைத்தான் என் கேள்வி எழுப்பிஉள்ளது..அதற்க்குரிய பதிலைத்தான் எதிர் பார்க்கிரேன்.
 
பொங்குவது என்பதைப் 'பொங்கல்' என்று கூறுகின்றோம். பாலைப் பொங்க வைத்துப் 'பொங்கலோ, பொங்கல்' என்று கூவி

மகிழ்ந்து, சர்க்கரைப் பொங்கல் செய்து
படைப்பதால், பொங்கல் என்ற பெயர் வந்திருக்கும். புது அரிசியில் பொங்கல்

நிவேதனம் செய்வது
இறைவனுக்குச் செய்யும் ஒரு வகை நன்றித் திருவிழாவும் (Thanks giving!) ஆகும்.

இடுகையின் கடைசி வரி இதுவே!

தாங்கள் அறுவடை செய்த புது நெல்லை தை முதல் நாளில் சமைத்ததால், இந்திர விழா

என்ற பெயர் பொங்கல் என மாறியது.
 
Status
Not open for further replies.
Back
Top