• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கோ பூஜை செய்வது எப்படி?

praveen

Life is a dream
Staff member
எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலனை பசுவுக்கு செய்யும் ஆராதனையால் அடையலாம் என்கிறன வேத புராணங்கள்.*

கோடி கோடி யாகங்கள் செய்த பலனும், கோடானு கோடி வருடங்கள் தவம் செய்த புண்ணியமும் ஒரே ஒரு முறை பசுவை வழிப்பட்டாலே கிடைத்து விடும்.

மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியரும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் அஷட் வசுக்களும், நவகிரங்களும், தச நாகங்களும், அஷ்டதிக்கு பாலர்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் மேலானவளும், ஈரேழு பதினான்கு உலகங்களையும் உயிர்களையும் படைத்து காத்து ரட்சிப்பவளானா தேவி மனோன்மணியான பராசக்தியின் அம்சமே கோமாதா என்கிறது கோமாதா மகாத்மியம்.
கோமாதா பூனையை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

கோ பூனையை செய்வதால் பணக்கஷ்டம் தீரும். மணப்பேரும் மழலை, வரமும் கிடைக்கும். பசுவை பூஜிக்கும் இடத்தில் தீய சக்திகள் அண்டாது. முன்னோர் ஆசி சேரும்.

முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். மனக்குறையும் உடல் பிணிகளும் விலகும். வழக்குகளில் வெற்றி கிட்டும்.சுருக்கமாக சொன்னால் கோமாதாவை வணங்குவதால் கிடைக்காத நற்பலன் எதுவுமே இல்லை.

பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை சுமனை என்னும் ஐந்து பசுக்களின் வம்சமாகவே இன்று உலகில் உள்ள எல்லா பசுக்களும் உள்ளன என்பது புராண வரலாறு.

பசுக்களில் பேதம் எதுவும் இல்லாமல் எல்லாமே வழிபடத்தக்கவை தான்.
ஒருவராகவோ பலர் சேந்தோ இந்த பூஜையை செய்யலாம்.

கோயிலில் அல்லது வீட்டில் நடத்தலாம். பொதுவானதோர் புனித இடத்தில் பலர் கூடி செய்யலாம்.

எப்படி செய்தாலும் பலன் நிச்சயம். கன்றுடன் கூடிய பசு பலன் கூடுதலாக கிடைக்கும்.

வெள்ளிக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி நாட்களில் பசுவுக்கு பூஜைசெய்யலாம்.

தொடர்ந்து ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொரு வாரம் அல்லது மாதம் செய்வது நற்பலனை அதிகரித்து குடும்பத்தில் சுபிட்சம் நிலவச் செய்யும்.

சுபமான நேரத்தில் பூஜையை தொடங்க, பசுவை அழைத்து வர வேண்டிய நேரம் போன்றவற்றை முதல் நாளே திட்டமிட்டு கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் பசுவை பூஜை நடத்தும் இடத்துக்கு அழைத்து வர செய்யுங்கள்.

பசு பழக்கப்படும் முன் அதனை மிரட்டும் விதமாக நடந்து கொள்ளாமல் முதலில் ஒன்றிரண்டு பழங்கள் போன்றவற்றை தந்தும் மெதுவாக தடவிகொடுத்தும் அன்புசெலுத்துங்கள். பசுவுடன் கன்றும் வந்திருந்தால் பசுவின் பார்வை படும் இடத்திலேயே கன்று இருக்கட்டும்.

அதற்கும் பழம் ஏதாவது தந்து பதட்டப்படாமல் இருக்க செய்யுங்கள்.
பிள்ளையாரை வேண்டிய பின்னர் பசுவின்மீதுசிறிது பன்னீர் தெளித்து மஞ்சள் தடவி, குங்கும பொட்டு அதன் நெற்றியிலும், பின்புறமும் வையுங்கள்.

(இயன்றவரை நல்ல தரமான மஞ்சள் குங்குமத்தையே பயன்படுத்துங்கள். தரமற்றதால் பசுவுக்கு எதாவது சிரமம் வந்தால் அது உங்கள் பூஜையின்பலனை குறைத்து விடலாம்.

பசுவின் கழுத்தில் மாலை அல்லது பூச்சரத்தினை அணிவியுங்கள்.
பசுவின் உடலில் புடவை அல்லது ரவிக்கை துணியினை சாத்துங்கள். (பலர் சேர்ந்து செயயும் போது பொதுவாக ஒரு புடவை அல்லது ரவிக்கை துணி அணிவித்தால் போதும்) முகத்துக்கு மிக நெருக்கமாக சென்று பசுவை மிரட்டாமல் சற்று தொலைவாக இருந்தபடி சாம்பிராணி, ஊதுபத்தி தூபம், தீபம் காட்டுங்கள். பசுவின்முன்புறம் போலவே பின்புறத்திற்கும் இவற்றை காட்டுவது அவசியம்.

காரணம் மகாலட்சுமி கோமாதாவின்பின்புறம் தான் வாசம் செய்கிறாள்.கோ பூஜை செய்யும் எல்லோரும் சேர்ந்து பசுவுக்கு உரிய துதிகளை சொல்லுங்கள்.

பசுவை வணங்க ஒரு துதி

ஓம் காமதேனுவே நமஹ
ஓம் சகல தேவதா ரூபிணியே நமஹ
ஓம் மகா சக்தி ஸ்வரூபியே நமஹ
ஓம் மகாலட்சுமி வாசின்யை நமஹ
ஓம் வ்ருஷப பத்னியே நமஹ
ஓம் சௌபாக்ய தாரிண்யை நமஹ
ஓம் சர்வ ரட்சிண்யை நமஹ
ஓம் ரோஹ நாசின்யை நமஹ
ஓம் ஜய வல்லபாயை நமஹ
ஓம் க்ஷீர தாரிண்யை நமஹ
ஓம் பபிலாயை நமஹ
ஓம் சுரப்யை நமஹ
ஓம் சுசீலாயை நமஹ
ஓம் மாகா ரூபின்யை நமஹ
ஓம் சகல சம்பத் தாரிண்யை நமஹ
ஓம் சர்வ மங்களாயை நமஹ

கோயில்களில் அந்தணர்களை வைத்து நடத்தும்போது கலசம் அமைத்து வேத மந்திரங்கள் ஓத கோ பூஜை செய்வார்கள்.

ஆகம விதிப்படி இன்றி இப்படி எளிய முறையில் நீங்களாகவே செய்வதும் உரிய பலன் தரும்.

பசுவை (கன்று இருந்தால் அதனை பசுவினருகே விட்டு அதனையும் சேர்த்து) மூன்று முறை வலம் வந்து நமஸ்காரம் செய்யுங்கள்.

அகத்திகீரை, சர்க்கரை பொங்கள், பழ வகைகள் போன்றவற்றை பசுவிற்கு கொடுங்கள்.

பின்னர் பூஜையின் நிறைவாக நெய்தீபம் ஏற்றி ஆரத்தி எடுத்து விட்டு மறுபடியும் பசுவை வணங்கி விட்டு வழியனுப்புங்கள்.

பசுவின் உரிமையாளருக்கு உங்களால் இயன்ற தட்சணை அளியுங்கள்.

அன்றைய தினம் உணவு எதுவும் உட்கொள்ளும் முன் சிறிது பஞ்சகவ்யம் எடுத்து கொள்ளுங்கள் (கோமயம், நெய், தயிர், பால் இவை ஐந்தும் சிறிது சிறிது சேர்த்து காலந்த கலவையே பஞ்ச கவ்யம்) முடிந்தால் இல்லம் முழுக்க கோமியத்தை தெளியுங்கள்.

சகல தெய்வங்களின் ஆசியும் பரி பூரணமாக கிடைக்கும். எல்லா திருக்கோயில்களுக்கும் சென்று வந்த புண்ணியம் கிட்டும். எல்லா கோரிக்கைகளும் ஈடேரி சகல ஐஸ்வர்யங்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ கோமாதா ஆசிர்வாதிப்பாள்.



1610688425601.png
 

Latest ads

Back
Top