• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

கோயிலுக்கு வெளியிலிருந்து வரும் நைவேத்&#

Status
Not open for further replies.
கோயிலுக்கு வெளியிலிருந்து வரும் நைவேத்&#

கோயிலுக்கு வெளியிலிருந்து வரும் நைவேத்தியங்களை ஸ்வாமிக்கு சமர்பிக்கலாமா?


கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் உணவு, அந்தக் கோயில் எந்த ஊரில் உள்ளதோ அந்த ஊரில் பூக்கும் மலர்கள் ஆகியவற்றையே ஸ்வாமிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்கிறார் அர்ச்சகர் ஒருவர். தற்போது பெரும்பாலான பக்தர்கள் வெளியூர் கோயில்களுக்குச் செல்லும்போது, தங்கள் ஊரில் இருந்தே மாலைகள், உதிரிப்பூக்கள் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இது சரியா?


- வி. அர்ஜுன், மதுரை​
மடப்பள்ளி நிவேதனமும், அந்த ஊர் புஷ்பங்களும் பூஜை தடையின்றி நிகழ ஒத்துழைக்கும். மடப்பள்ளி இல்லாத கோயில்களும் இருக்கும். போதுமான அளவு புஷ்பங்கள் கிடைக்காத கிராமங்களும் இருக்கும். காவல் தெய்வங்கள், அரச மரத்தடிப் பிள்ளையார்களும் உண்டு. அங்கெல்லாம் மடப்பள்ளி இல்லாமலும் இருக்கும்.



காளஹஸ்தியில் வழிபட்ட வேடனுக்கு, நைவேத்தியம் வெளியில் இருந்து வரவேண்டியிருந்தது. கேரளத்தில் நாக வழிபாட்டில் பெயர் பெற்ற காவுகள் (கூரையில்லா சிறு கோயில்கள்), வெளியே இருந்து வரும் நிவேதனத்தையும் புஷ்பங்களையும் எதிர்பார்க்கும். மலைக்கோயில்கள் சிலவற்றில் மடப்பள்ளிக்கும், புஷ்ப தோட்டத்துக்கும் இடம் இல்லாத நிலையில், நிவேதனமும் புஷ்பமும் வெளியே இருந்து வருவதை வரவேற்பது உண்டு.



ஆகம முறைப்படி சட்டதிட்டத்துடன் ஆரம்பத்திலேயே மடப்பள்ளியும், உத்யானவனமும், குளமும், தீப ஸ்தம்பமும், கொடி மரமும் ஏற்படுத்தப்பட்ட கோயில்களில் மட்டுமே அர்ச்சகர் சொன்னபடி செய்ய இயலும்.
சபரிகிரீசனுக்கு ஆபரணமும், ஸ்ரீநிவாசனுக்கு ஆண்டாள் அணிந்த மாலையும் வெளியில் இருந்து வருபவையே! உத்ஸவ காலங்களில் வாத்ய கோஷமும், புஷ்ப அலங்காரங்களுக்கு ஆரங்களும் வெளியே இருந்து வந்துசேரும். அதேபோன்று, வெளியே இருந்து வரும் பழம்- தேங்காய்களையும், மாலைகளையும், உதிரிப் பூக்களையும் பக்தர்களிடம் இருந்து பெற்று அர்ப்பணம் செய்வது உண்டு.


பாரிஜாதம், செண்பகம், தாமரைப் பூ, நீலோத்பலம் போன்றவை வெளியே இருந்து வர வேண்டியிருக்கும். அம்மனுக்கு அளிக்கும் தாழம்பூ வெளியே இருந்து வரவேண்டியிருக்கும். சூட்டோடு ஆவி பறக்கும் நிவேதனம், அப்போது விரிந்த மலர்கள் ஆகியன எங்கு கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறதோ, அங்குதான் அர்ச்சகரின் கூற்று அரங்கேறும். சில கோயில்களில், வெகு தொலைவில் இருந்து
அபிஷேக தீர்த்தம் கொண்டு வரப்படுவது உண்டு.

பல காத தூரத்திலிருந்து அர்ச்சனை- அலங்கார புஷ்பங்கள் எடுத்து வருவது உண்டு. ராமேஸ்வரத்தில் இருந்து மண் எடுத்துச் சென்று காசியில் சேர்ப்பதும், அங்கிருந்து கங்கை நீரை எடுத்து வந்து ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்வதும் உண்டு. காராம்பசுவின் பால், கொம்புத் தேன் ஆகியவற்றையும் வெளியிலிருந்து வரச் செய்து ஏற்றுக்கொள்வது உண்டு.


குசேலன், தனது வீட்டிலிருந்து கொண்டு வந்த அவலை கண்ணனுக்கு அளித்தான். சபரி, தான் சேமித்த பழங்களை ஸ்ரீராமனுக்கு அளித்தாள். மனக்கோயிலில் இறைவனை இருத்தி வழிபடும் பூஜையும் உண்டு (தேஹோதேவாலய: ப்ரோக்தோ...). மானஸ பூஜைக்கு பெருமை சேர்த்தவர் ஆதிசங்கரர் (அந்தர் முகஸமாராத்யா...). அங்கெல்லாம் ஆகாசத்தை (இடைவெளி) புஷ்பமாகவும், ஜீவாத்மாவை அமுதாகவும் படைப்பது உண்டு.


மனம் விரும்பியபடி வழிபடும் சுதந் திரத்தை அளித்திருக்கிறது ஸனாதனம். கந்தம், ஜலம், தூபம், தீபம், நைவேத்தி யம், புஷ்பம் ஆகியனவாக... பஞ்ச பூதங் களையும் ஐந்து விரல்களால் சுட்டிக்காட்டி பஞ்சோபசாரம் செய்து, காமதேனு முத்திரையில் ஜீவாத்மாவை நிவேதனம் அளித்து பூஜையை முடிப்பவர்களும் உண்டு.


எங்கிருந்து வந்தாலும் அவை யெல்லாம் அவனது படைப்பு; அவன் ஏற்பான். நமது பங்கு பக்தி ஒன்று தான். 'நீ தந்த செல்வத்தை உனக்கே அளிக்கிறேன்’ என்று பக்தன் கூறுவான் (த்வதீயம் வஸ்து பூதேச துப்யம் ஏவஸமர்ப்பயே). பணிவிடைப் பொருள் களின் ஆராய்ச்சியில் மூழ்கி நேரத்தை வீணடிக்காமல், ஈசனிடம் ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டால், இது மடப்பள்ளி நிவேதனமா, வெளி நிவேதனமா... இது உள்ளூர் புஷ்பமா, வெளியூர் புஷ்பமா என்கிற சிந்தனை எழாது. பக்தி மனத்தை விட்டு அகலும்போது பொருளைப் பற்றிய ஆராய்ச்சியில் மனம் மாட்டிக்கொண்டு தவிக்கும்.
p85.jpg


?????????? ?????????????? ????? ?????????????? ?????????? ?????????????? - ????? ?????? - 2012-12-25
 
Status
Not open for further replies.
Back
Top