கைநாட்டு மனிதர்கள் ..!!!

Status
Not open for further replies.
கைநாட்டு மனிதர்கள் ..!!!

New Picture (1).webp
"ஏன்டா, ஆயிரந்தான் இருந்தாலும் பொம்பளப் புள்ளைய
கை நீட்டி அடிக்கிறியே, வெக்கமாயில்ல? "
என பெண்ணுரிமைக்கு முன்னுரிமை கொடுக்கும் .........
யார் இவர்கள்.....????

"இன்னம் ஒரு மழை இருந்தா நவத்தாவயலை
பொறக்கிபுடலாம், ஹ்ம்ம் .. கூத்தாடிக் கருப்பா
மழய கொண்டந்திருப்பா " என கடவுளிடம்
விண்ணப்பம் தொடுக்கும் ...........
யார் இவர்கள்.....????

" என்னது, பாராளுமன்றத்தையே ஒத்தி
வசுட்டாங்கேளா, ப்ச், அத இன்னி எப்ப திருப்ப "
என நையாண்டி கலந்து தற்கால
அரசியலை அலைக்கழிக்கும் ...............
யார் இவர்கள் ....????

பிள்ளைப் பேற்றுள்ள வீட்டில்,
கணவனை அழைத்து
"கெணத்து தண்ணிய ஒன்னும்
ஆத்து வெள்ளம் அடிச்சுக்கிட்டு போய்டாது,
வெரதம்னு வெளி வேலைய பாரு" என்று
நாசூக்காக மருத்துவபதேசம் செய்யும் .....
யார் இவர்கள்......??????

பத்திரிக்கை சச்சரவில், கூட பிறந்தவனை புகுந்தவீட்டில்
தொலைத்துவிட்டு, பாக்கு வைக்க கண்ணைக் கசக்கும்
தமக்கையிடம் "யாத்தா, பேப்பர்ல போட்டாதான் தெரியுமா ?, நீ பாட்டுக்க எதையும் நெனைக்காம போ தாயீ, நான் வந்தர்றேன்" என
உறவுகளின் பந்தத்தை கொணரும் ..........
யார் இவர்கள்....??????

காப்புக் கட்டி கண்ணியமாய் திருவிழா நடத்தி
அதில் " சாமிய பாக்கவாப்பா இந்த கூத்து,விருந்தெல்லாம்??
அட அதுல்லப்பா, பிரிஞ்சு கெடக்குற எல்லாரும் இந்த கோயில்
வாசல்ல ஒன்னு கூடத்தான்டாம்பி " என ஒற்றுமைக்கு
பாலங்களாயிருக்கும் ...........
யார் இவர்கள் ......?????

"நல்லதுக்கு நாங்கள் இல்லைனாலும் ,
துக்கச் சம்பவத்துக்கு நாங்கள் இருக்கிறோம் என
தவறிய வீட்டில், தவறாமல் கைகொடுக்க
இருக்கும் பங்காளிமார்கள் கூட்டம் ........
யார் இவர்கள் ..... ????


சொல்லுகிறேன்....


New Picture.webp


இவர்கள் ....
மெத்தப் படித்த அதிகார வர்க்கங்களால்
"கைநாட்டுக்காரன்"
"பத்தாம் பசலி"
"பட்டிக்காட்டான்"
"ஏதுமறியாதவன்"
என முத்திரை குத்தப்பட்டவர்கள்.....


வாழ்வியல் முறைகளை, அதன் நுணுக்கங்களை
அறியாமையின்
ஊடலாக சொல்லிக் கொடுக்கும் இவர்கள்...
நாட்டை வாழவைக்கும் கிராமங்களில் ....

வெள்ளை வேட்டி, இடுப்பில் அரைஞான் கயிறு,
கொசுவம் வைத்த சேலை ,
மருதாணி விரல்கள் , பூவில் இழையும் கூந்தல் என
தொலைக்கப் பட்டுக்கொண்டிருக்கும் தமிழனின்
மரபு அடையாளங்களை கட்டிக்காக்கும்
இவர்கள்... என் மனிதர்கள் .....!!!!

அவற்றை ...

அனைத்தையும்
அருகிலிருந்து
கண்டவன்,

அவர்களோடு வாழ்ந்து
உணர்ந்துகொண்டிருப்பவன்
என்ற முறையிலும்.....

இங்கே உங்களுக்கு முன்னால்
பதிவு செய்கையில்
மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் .....
மன்னித்துவிடுங்கள் என்னை, யாதேனும்
தவறாய்ச் சொல்லியிருந்தால் .....

நன்றிகளுடன்
அசோக்
 
தமிழனின் அடையாளங்களை தேடும் முயற்சியில்......!!!

Are you still searching for those-which you seem to have already found!

I wish you will launch a new thread with the same heading and put all your poems in one thread.

It will be read by more people, more often and for a longer time.

They won't have to go looking or searching for the other poems which will automatically keep moving backwards all the time!

Please think about it.
 
இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.....

நீங்கள் சொன்ன மாதிரியே தனி நூலில் பதிக்க தொடங்கிவிட்டேன்.... !!!

இப்போ சொல்லுங்கள் நான் யார் பிள்ளை என்று ????
:whoo: :whistle:

:)

அசோக் குமார்

:bathbaby:
 
Status
Not open for further replies.
Back
Top