கேரளா ஸ்பெஷல் மிக்சட் வெஜ் சாம்பார்

Status
Not open for further replies.
கேரளா ஸ்பெஷல் மிக்சட் வெஜ் சாம்பார்

கேரளா ஸ்பெஷல் மிக்சட் வெஜ் சாம்பார்

கேரளா ஸ்பெஷல் மிக்சட் வெஜ் சாம்பார்


b2ap3_thumbnail_tamilnadu_sambar0010.jpg





தேவையானவை

வேகவைக்க

துவரம் பருப்பு – 125 கிராம்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
வெந்தயம் – கால் தேக்கரண்டி


சேனை
பூசனிக்காய்
பீன்ஸ்
கேரட்
கோவைகாய்
கத்திரிக்காய்
மாங்காய்
பெரிய வெள்ளரிக்காய்
முருங்கக்காய்
வாழைக்காய்
பாவைக்காய்---எல்லா காய்கறிகளும் சேர்த்து அரை கிலோ
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
தனியாத்தூள் – அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் சிறியது – 1
பச்சமிளகாய் – 2
தக்காளி – 2
குடம்புளி – 3
தாளிக்க
எண்ணை ( தேங்காய் எண்ணை (அ) சன்ப்ளவர் ஆயில் – 4 ஸ்பூன்
நெய் – இரண்டு ஸ்பூன்
காஞ்ச மிளகாய் – 3
கடுகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் – 3 சிட்டிக்கை (அ) சிறிய துண்டு
பூண்டு – 4 பல்
கருவேப்பில்லை
சாம்பார் பொடி – இரண்டு ஸ்பூன்ச


how to do it
முதலில் பருப்பை மஞ்சள் தூள் வெந்தயம் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.


குடம்புளியை கழுவி வெண்ணீரில் ஊறவைக்கவும்.



குக்கரில் எண்ணையை காயவைத்து ஒரு ஸ்பூன் எண்ணை மற்றும் சிறிது கடுகு கருவேப்பிலை , ஒரு பல் பூண்டு சேர்த்து தாளித்து வெங்காயம் பச்சமிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும்வதங்கியதும் எல்லா காய்கறிகளையும் சேர்த்து கிளறி மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் சேர்த்து நன்கு ஒரு சேர கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இரக்கவும்.


ஒரு வாயகன்ற சட்டியை காயவைத்துஅதில் எண்ணை + நெய் சேர்த்து சூடு வந்ததும் கடுகு, காஞ்சமிளகாய், கருவேப்பிலை, பூண்டு , பெருங்காயம், வெங்காயம் , சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறி தாளிக்கவும்.



அதில் வெந்த பருப்பை மசித்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு வெந்த காய்கறிகளை சேர்த்து ஊறவைத்த குடம்புளியையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இரக்கவும்.


சுவையான சாம்பார் ரெடி
ஜலீலா


????? ??????? ??????? ???? ????????



 
கேரளா ஸ்பெஷல் மிக்சட் வெஜ் சாம்பார்

அன்புள்ள ஸ்ரீ பத்மநாபன் அவர்களுக்கு.
வணக்கம்.
அற்புதமான சாம்பார் செய்முறையை அளித்ததற்கு மிக்க நன்றி. இப்போது நடைபெறும் கல்யாணங்களில்
இந்த சாம்பாரைத்தான் அளித்துவருகிறார்கள்.

நல்ங்கோரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு
 
அன்புள்ள ஸ்ரீ பத்மநாபன் அவர்களுக்கு.
வணக்கம்.
அற்புதமான சாம்பார் செய்முறையை அளித்ததற்கு மிக்க நன்றி. இப்போது நடைபெறும் கல்யாணங்களில்
இந்த சாம்பாரைத்தான் அளித்துவருகிறார்கள்.

நல்ங்கோரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு

Thanks for your Comments Sri ப்ரஹ்மண்யன் Sir.
 
Status
Not open for further replies.
Back
Top