• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

குழந்தைக்கு மதுவை கொடுத்து ரசித்த இளைஞ&

Status
Not open for further replies.
குழந்தைக்கு மதுவை கொடுத்து ரசித்த இளைஞ&

குழந்தைக்கு மதுவை கொடுத்து ரசித்த இளைஞர்கள்: தமிழகத்தில் நடந்த கொடுமை!


சென்னை: நான்கு வயது குழந்தைக்கு மதுவை குடிக்க வைத்திருக்கின்றனர் இளைஞர்கள். குழந்தை மது குடிப்பதை இளைஞர்கள் ரசிக்கும் வீடியோ காட்சி வெளியாகி இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

child%20tasmac%202.jpg
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் மதுக்கடைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நடந்த ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் ஜெயலலிதா, மதுக்கடையை அரசே நடத்துவதாக அறிவித்தார். தனியாரிடம் மதுக்கடை இருந்தபோது இளைஞர்கள் மத்தியில் பயம் இருந்தது. காரணம், காவல்துறையினர் பிடித்து சென்று விடுவார்கள் என்பதுதான்.


child%20tasmac%202a.jpg
தற்போது அரசே நடத்துவதால் சாலை மற்றும் கிடைக்கும் இடங்களில் எல்லாம் குடிமன்னர்கள் குடித்துவிட்டு அலங்கோலமான நிலையில்தான் கிடக்கிறார்கள். இவர்களை காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை. பள்ளிகள், கோயில்கள் இருக்கும் இடங்களிலும் கூட தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறது.

இப்படி ஒரு கொடுமை ஒரு பக்கம் இருக்கும் நிலையில், சிறு குழந்தைக்கு மதுவை கொடுத்து இளைஞர்கள் ரசிக்கும் கொடுமை தமிழகத்தில் தற்போது அரங்கேறியுள்ளது. குழந்தை மதுகுடிக்கும் வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


child%20tasmac%202aa.jpg
ஒரு காட்டுப்பகுதியில் 4 வயதுடைய குழந்தையை சுற்றி 5 பேருக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுற்றியுள்ளனர். நடுவில் இருக்கும் குழந்தைக்கு ஒரு பிளாஸ்டிக் டம்ளரில் மதுவை கொடுத்து குடிக்க வைக்கின்றனர் இளைஞர்கள். குழந்தையின் அருகில் TN25AJ 8209 என்ற பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கொடுமையான சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம், மேல்சோழங்குப்பத்தில் நடந்துள்ளது.


child%20tasmac%202aaa.jpg
இந்த வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சம்பவம் நடந்த கிராமத்திற்கு போளூர் டிஎஸ்பி தலைமையில் காவல்துறையினர் விரைந்துள்ளனர்.

டாஸ்மாக்கை திறந்து வைத்து இளைஞர்களை வாழ்க்கையை சீரழிக்கும் தமிழக அரசு, தற்போது குழந்தைகளையும் குடிக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. இந்த கொடுமை தமிழகத்தில் அரங்கேற்றியுள்ளதுதான் வேதனையிலும் வேதனை.


http://www.vikatan.com/news/article...=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1
 
Status
Not open for further replies.
Back
Top