குருவாயூர் சிறப்புகள்

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
குருவாயூர் சிறப்புகள்

[குருவாயூர் சிறப்புகள்

*குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை. பாதாள அஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை.

*இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன்.

*குழந்தைக்கு முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு. இந்த திருக்கோவிலில் இதை செய்தால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை.

*சித்திரை விஷு , விருச்சிக ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள்.

*இந்த திருக்கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட யானைகள் மிகவும் வீஷேஷம். அந்த வகையில் பத்மநாபன், கஜ ராஜன், கேசவன் என்று பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் சிறப்பு பெற்றவை ஆகும்.

* இந்த திருக்கோவில் நடை திறப்பின் பொழுது யானைகள் இடம் பெறுகின்றன. திருவிழா காலங்களில் யானைகள் தான் சுவாமியை சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்ட பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெரும் யானை தான் சுவாமியை சுமக்கும் பாக்கியம் பெறும்.

*இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும். முதல் நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும் அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும். இதனை நிர்மால்ய பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன்.

*நாராயண பட்டத்திரி சமஸ்கிருதத்தில் எழுதிய நூல் மற்றும் பூந்தானம் என்ற மஹான் எழுதிய ஞானப்பானை என்ற மலையாள நூல் இந்த ஸ்தல சிறப்பினை விளக்குகிறது.

*இந்த ஸ்தலத்தில் உள்ள துலாபாரம் சிறப்பு எண்ணில் அடங்கா. பக்தர்கள் கண்ணனை பிரார்த்தனை செய்து அது நிறைவு பெற்றவுடன் துலாபாரத்திக்ல் பழங்கள் , பொருள், காசுகள் என்று எடைக்கு எடை காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

*குரு பகவானும், வாயு பகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் தான் இந்த சிறப்பு பெற்ற குருவாயூர்.

* இந்த ஸ்தலம் குரு மற்றும் வாயு பகவனால் உருவாக்கபட்டதால், கண்ணன் இவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கண்ணன் இந்த ஊருக்கு தனது பெயரை சூட்டி கொள்ளாமல், குரு+ வாயு பகவானை சேர்த்து குருவாயூர் என பெயர் பெற்றது.

*கிருஷ்ணாட்டம் இங்கு மிகவும் சிறப்பு பெற்றவை. இரவு ஸ்வாமி சன்னதி நடை அடைத்த பிறகு தொடங்கி, காலையில் நடை திறப்பிற்கு முன்பும் ஆடி முடிக்கும் ஆட்டமே கிருஷ்ணாட்டம் .மயில் பீலியை கொண்டு கிரீடம் செய்து ஆடுவார்கள் . இது கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஆட்டம் ஆகும்.

*இந்த புகழ் பெற்ற திருஸ்தலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ண

Source: Face book: Ssr swarna
 
hi

i visited guruvayur temple recently..here weddings are very famous..there is brahmin accomodation run by kerala brahmin

association with free food throughout year.....dress code is very strict.....ONKY TOPLESS MAMAS ALLOWED INSIDE....ladies

with saree/mundu allowed...
 
Status
Not open for further replies.
Back
Top