குசேலர் தினம்

Status
Not open for further replies.

praveen

Life is a dream
Staff member
மார்கழி மாத முதல் புதன் கிழமையன்று குருவாயுரப்பனுக்கு அவல் படைத்து இந்த குசேல சரித்திரத்தை படித்தால் செல்வம் பெருகும்...


குசேல நாமா பவது ஸதீர்யதாம் கத:
ஸ ஸாந்திபநி மந்திரே த்விஜ:
த்வதேக ராகேண தநாதி நி: ஸ்பருஹோ
திநாநி நிந்யே ப்ரஸமி க்ருஹாஸ்தமீ


சாந்தீபனிமுனிவரின் ஆசிரமத்தில் நீங்கள் குரு குலவாசமிருந்தபோது குசேலர் என்ற அந்தணரும் மிகுந்த பண்போடு இல்லறத்தைக் காத்துக்கொண்டே, பொருளின் மீது ஆசையில்லாமல் உமது அருளின் மீது மட்டும் நாட்டமுடையவராக இருந்தாரல்லவா?


(நம்பூதிரியின் இந்த வினாவுக்கு குருவாயூரப்பன்
தலையாட்டி ஒப்பு தலைத் தெரிவித்தார்.
.....................................


ஸ ரத்ன ஸாலாஸு வஸந்நபி ஸ்வயம்
ஸமுன்ன மத்க்திபரோ அம்ருதம் யயௌ
த்வமேவாபூரித பக்த வாஞ்சிதோ
மருத்புராதீஸ ஹரஸ்வ மே கதாந்


ஹே குருவாயூரப்பா, உமது அருளை வியந்து கொண்டே குசேலர் ரத்னமயமான மாளிகையில் வசிக்கத் தொடங்கினாலும், உன்னை என்றும் மறந்தாரில்லை. அவர் செல்வத்தில் பற்றில்லாமல்
பக்தியின் பயனாக முக்தியடைந்தார்.


இவ்வாறு பக்தர்களின் கஷ்டத்தைப் போக்குவதில் வல்லவரான
நீர், எனது துன்பத்தையும் போக்கி அருள வேண்டும்.


இந்த குசேல சரித்திரத்தை படித்தால் செல்வம் பெருகும்...


சர்வ சௌபாக்கியங்களும் கிட்டும். உத்யோக லாபம், வியாபார லாபம், அனைத்து செயல்களிலும் வெற்றி என்று எல்லா நன்மைகளும் வந்து சேரும்.


இந்த குசேல சரித்திரத்தை நாராயண பட்டத்திரி குருவாயூரப்பனிடம் ஒவ்வொரு ஸ்லோகமாகக் கூறி, ‘‘அப்படியா?’’ எனக் கேட்க,
அதற்கு குருவாயூரப்பன் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும்
‘‘ஆமாம், அப்படித்தான் நடந்தது’’ என்று சொல்வதுபோல தலையாட்டினார் என்பது வரலாறு.


இந்த ஸ்லோகங்களை உளமாற சொல்லி வந்தால் பொருள் வளர்ச்சி,
மன வளர்ச்சி எல்லாம் கூடும்.


ஆண்டவனே ஆம் என்று சொன்ன நாராயணீயத்தின் ஒப்பற்ற
அற்புத சுலோகங்களை மனம் ஒன்றி
படிக்கவே கொடுத்துவைத்திருக்கவேண்டும்..


குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலில் மார்கழி மாதம்
முதல் புதன் கிழமையை "குசேலர் தின'மாக கொண்டாடுகிறார்கள்.


கிருஷ்ணன், குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாளாதலால் அன்று பக்தர்கள், இலையில் அவல், அச்சு வெல்லக்கட்டி ஆகியவற்றை கொண்டு வந்து குருவாயூரப்பனை வணங்குவது வழக்கம்.


அன்று ஆலயத்தில் பக்தர்கள் படிக்கணக்கில் அவல் தானம் செய்கின்றனர்.


குசேலர், கிருஷ்ணனை தரிசிக்க ஆவலுடன் , அவல் கொண்டு சென்ற நாள் , மார்கழி மாதம் முதல் புதன் கிழமை. அதனால் , இன்றும் குருவாயூரி்ல் , மார்கழி முதல் புதன் கிழமையை , குசேலர் தினமாக கொண்டாடுகின்றனர் ..


அன்றைய தினம் , ஸ்ரீ குருவயூரப்பனக்கு அவலும் ,
அவல் பாயசமும் நைவேத்யம் செய்யப்படுகிறது .


பக்தர்களும் , ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு அவல் கொண்டு வந்து காணிக்கையாக தருவர்.


இதனால் , தங்களுக்கு , ஸ்ரீ கிருஷ்ணன் அருள் புரிந்து , அவரவர் வீட்டுக்கு சுபிக்ஷம் வந்து சேரும் என்பது நம்பிக்கை !
 
Status
Not open for further replies.
Back
Top