கிருஷ்ணனின் அவதாரங்கள்

கிருஷ்ணனின் அவதாரங்கள்

பகவான் கிருஷ்ணன் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக, அதர்மத்தை அழிப்பதற்காக,
பக்தர்களுக்காக யுகங்கள் தோறும் அவதரிக்கின்றான் !


ஒரு யுகத்தில் மீனாக வந்தான் !
ஒரு சமயத்தில் ஆமையாக வந்தான் !
ஒரு காலத்தில் வராஹமாக வந்தான் !
ஒரு சந்தர்ப்பத்தில் நரசிம்மனாக வந்தான் !
ஒரு நேரத்தில் வாமனனாக வந்தான் !


ஒரு அவசியத்தில் பரசுராமனாக வந்தான் !
ஒரு வேகத்தில் ராமனாக வந்தான் !
ஒரு தேவையில் ஹயக்ரீவனாக வந்தான் !
ஒரு ரஹஸ்யத்தில் மோஹினியாக வந்தான் !
ஒரு தவிப்பில் சனத்குமாரர்களாக வந்தான் !


ஒரு ஆசையில் வேதவ்யாசராக வந்தான் !
ஒரு கணக்கில் கபிலராக வந்தான் !
ஒரு கோபத்தில் நர-நாராயணனாக வந்தான் !
ஒரு க்ருபையில் ஸ்ரீ ஹரியாக வந்தான் !
ஒரு யோசனையில் சுகப்ரும்மமாக வந்தான் !


ஒரு அவசரத்தில் தன்வந்த்ரியாக வந்தான் !
ஒரு காரணத்தில் விஷ்ணுவாக வந்தான் !
ஒரு காதலில் கிருஷ்ணனாக வந்தான் !


இதுபோல் பல கோடி அவதாரங்கள் பகவான்கிருஷ்ணன் எடுத்துவிட்டான் !


இன்னும் பல கோடி அவதாரங்கள் பகவான் கிருஷ்ணன் எடுத்திருக்கிறான் !


கலியுகத்திலும் பல கோடி
அவதாரங்கள் உண்டு !


மனிதரூபமில்லாமல் பலமுறை
கலியுகத்தில்,இந்த பூமியில்
வந்திருக்கிறான் !


நாராயண தீர்த்தரின்
வயிற்று வலியை தீர்க்க
வெள்ளைப் பன்றியாக வந்தான் !


ஏகநாதரிடம் பாலைவனத்தில்
கங்கா ஜலம் வாங்கிக் குடிக்க
கழுதையாக வந்தான் !


ஹாத்தீ ராம் பாவாஜீயை நிரூபணம்
செய்ய சிறைச்சாலையில்
யானையாக வந்தான் !


நாமதேவரிடம் ரொட்டியையும்,
சர்க்கரை கலந்த நெய்யையும் சாப்பிட
நாயாக வந்தான் !


கனகதாசரின் பக்தியை நிரூபிக்க,
பக்தர்கள் கூட்டத்தின் நடுவே
பாம்பாக வந்தான் !


கர்மடாதேவியின் கற்பை
மிலேச்சனிடமிருந்துக் காப்பாற்ற
சிங்கமாக வந்தான் !


வாதிராஜரின் பக்தியில் மயங்கி,
வயலில் விளையாடும்
குதிரையாக வந்தான் !


துகாராமை ஆலிங்கனம் செய்து,
அவருடைய பக்தியைப் பார்க்க
கருநாகமாக வந்தான் !


பக்த வேஷமிட்ட கயவனிடமிருந்து
சுரசுரீயைக் காப்பாற்ற
புலியாக வந்தான் !


பூந்தானத்தின் கபடமற்ற பக்தியை
மற்றவர்களுக்குப் புரிய வைக்க
எருதாக வந்தான் !


இன்னும் எத்தனையோ சந்தர்ப்பங்களில்
எத்தனையோ அவதாரங்கள்
எடுத்திருக்கிறான் !


ஒவ்வொரு நாளும்,
ஓவ்வொரு இடத்தில்,
ஒவ்வொரு வேஷத்தில்
கிருஷ்ணன் அவதரித்துக் கொண்டு
தான் இருக்கிறான் !


பல சந்தர்ப்பங்களில் நீ தான்
தவற விட்டு விட்டாய் !


இனியாவது பக்தியோடு
உலகத்தில் சுற்றித் திரிந்து கொண்டிரு !


ஒரு நாள் உன் கிருஷ்ணன்
உனக்காக எடுக்கின்ற அவதாரத்தைப்
பார்த்தே தீருவாய் . . .


அதற்காக கற்பனையில் அலையாதே . . .


நாம ஜபத்தோடு,
கிருஷ்ண விரஹத்தோடு,
திடமான பக்தியோடு,
வினயத்தோடு,
உலகில் வாழ்ந்து கொண்டிரு . . .


ஒரு நாள் நீயும் பார்ப்பாய் .


ராதேகிருஷ்ணா !!
 
Back
Top