• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

கார்த்திகை மாத பூஜை

Status
Not open for further replies.

kgopalan

Active member
கார்த்திகை மாத பூஜை

ஆ கா மா வை

17-11-2013. அன்று ஆ கா மா வை .ஆடி, கார்த்திகை, மாசி, வைகாசி இந்த மாதங்களின் முதல் எழுத்துக்களே இவைகள். இந்த நான்கு மாதங்களிலும் பெளர்ணமி அன்று அருணோதய காலத்தில் அதாவது விடியற்காலை சுமார் 4-30 மணி முதல் 6 மணிக்குள் ஸ்நானம் செய்ய வேண்டும்.

ஸத்யவ்ரத ஸ்ம்ருதி: “”பலம், ரூபம், யசோ தர்மம், ஞானமாயு;ஸுகம் த்ருதிம் ஆரோக்யம், பரமாப்நோதி ஸம்யக் ஸ்நானேந மானவ:””

இன்று முறையாக தலை முழுவதும் நனையுமாறு ஸ்நானம் செய்வதால் (அதிகாலையில் ) பலம், அழகு, புகழ், தர்மம், ஞானம், சுகம், தைர்யம், ஆரோக்யம் ஆகியவற்றை அடைகிறான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஶ்ரீ ருத்ர மஹா மந்திரத்தை பாராயனம் செய்த பலனையடைய:

செளனக மஹ ரிஷியால் இயற்ற பட்ட ரிக் விதான வேத மந்திரதிலுள்ளது.

“தமுஷ்டு ஹி ஜபேந் மந்திரம் த்ரிவாரம் ச திநே திநே ஶ்ரீ ருத்ரஸ்ய து யத் புண்யம் தத் புண்யம் விந்ததே ஜபாத்” (156).

தமுஷ்டு ஹி யஸ்விஷு: ( அஷ்டகம் 04, அத்யாயம் 2; வர்கம் 19.). என்று துவங்கும் இரண்டு வாக்கியமுள்ள மந்திரத்தை ஒவ்வொரு நாளும் இரண்டு முறை வீதம் தினமும் தொடர்ந்து ஜபம் செய்து வந்தால் ஶ்ரீ ருத்ர மஹா மந்திர த்தை ஜபம் செய்தால் எண்ண புண்ணியமோ அந்த புண்ணியம் கிடைக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வீட்டில் திருக்கார்த்திகை அன்று மாலையில் தீபங்களை ஏற்றும்போது

‘கீடா: பதங்கா: மசகாஸ்ச வ்ருக்ஷா: ஜலே ஸ்தலே யே விசரந்தி ஜீவா: த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்மபாகின: பவந்தி நித்யம் ச்வபசா: ஹி விப்ரா:””

தண்ணிரிலும் தரையிலும் வாழும் புழு, பூச்சிகள். பறவைகள், கொசுக்கள், மரங்கள், அந்தணர், நாய் தின்னும் புலையர் முதலான அனைவரும் இந்த புண்ணிய நாளில் இந்த தீபத்தை காண நேர்ந்தால்

அவர்களுக்கு மறு பிறவியில்லை. இவ்வாறே எனது மனதிலுள்ள அழுக்குகளும் எரிக்கப்பட்டு அக்ஞான இருள் நீங்க வேண்டும் என்பதாக இது அமைந்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
25-11-2014— காலபைரவாஷ்டமி.:

பரமேஸ்வரரின் ஐந்து குமாரர்களான கணபதி, முருகன், பைரவர், வீர பத்ரர், சாஸ்தா ஆகிய ஐவரில் இவர் ஒருவர்., அந்தகாஸுரணை ஸம்ஹரிக்க 64 பைரவராகி எல்லா அசுர்ர்களையும் அழித்தார். 64 யோகினிகளை மணந்தார்.

சிவபிரானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய ---காசியில் சிவ கணங்களுக்கு தலைவரான, ப்ருஹ்மாவின் சிரஸ்ஸை கொய்த இவர் கால பைரவர்., மார்த்தாண்ட பைரவர், க்ஷேத்ர பாலகர், சத்ரு ஸம்ஹார பைரவர், வடுக பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் என்று பல பெயர்களில் பூஜிக்கபடுகிறார்.

சிவாலயங்களில் வட கிழக்கு மூலையில் நிர்வாணமாக நாய் வாஹனத்துடன் காக்ஷி தருவார் பைரவ மூர்த்தி.

ஸ்ம்ருதி கெளஸ்துபம் பக்கம் 429.”” காலாஷ்டமீதி விக்ஞேயா கார்திகஸ்ய
ஸிதாஷ்டமீ தஸ்யா முபோஷணம் கார்யம் ததா ஜாகரணம் நிசி க்ருத்வாச விவிதாம் பூஜாம் மஹாஸம்பாரவிஸ்தரை: நரோ மார்கஸிதாஷ்டம்யாம் வார்ஷிகம் விக்ன முத்ஸ்ருஜேத்.””

கார்திக மாதம் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமிக்கு காலாஷ்டமி அல்லது கால பைரவாஷ்டமி என ப்பெயர். இன்று முழுவதும் சாப்பிடாமல் உபவாஸமிருந்து விரிவான முறையில் மாலையில் பைரவரை பூஜிக்க வேண்டும். இரவில் இவர் சரித்ரம் ஸ்தோத்ரம் சொல்லி கண் விழித்ருக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் மனிதனுக்கு ஒரு வருஷம் வரை எந்த தடங்கலும்
இருக்காது. மனதில் ஏற்படும் பயம், கடன் தொல்லை நீங்கும். தடைபட்டிருக்கும் திருமணம், வீடுக்கட்டுதல், வேலை வாய்ப்பு, வ்யாபாரம் போன்ற அனைத்தும் நடைபெறும். பைரவர் படத்திலோ அல்லது சிவனின் படத்திலோ பூஜை செய்யவும்.

நைவேத்யம்: தேன், அவல் பாயசம், தயிர் சாதம்,, செவ்வாழை முதலியன .

பூஜை முடிவில் கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி அர்க்கியம் விட வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் அர்க்யம் மட்டுமாவது விடலாமே.

பைரவார்க்யம் க்ருஹாணேச பீமரூபா (அ)வ்ய்யாநக அநேநார்க்ய ப்ரதாநேன துஷ்டோபவ சிவப்ரிய பைரவாய நம: இத மர்க்யம்.

சஹஸ்ராக்ஷி சிரோ பாஹோ ஸஹஸ்ர சரணாஜர க்ருஹாணார்க்யம் பைரவேதம் ஸ புஷ்பம் பரமேஸ்வர பைரவாய நம: இதமர்க்யம்.

புஷ்பாஞ்சலீம் க்ருஹாணேச வரதோ பவ பைரவ புநரர்க்யம் க்ருஹாணேதம் ஸ புஷ்பம் யாதநாபஹ. பைரவாய நம: இதமர்க்யம்..




.
 
Status
Not open for further replies.
Back
Top