• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

காரடையான் நோன்பு

Status
Not open for further replies.
காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு

14.3.2014 அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.

"உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன்; என்ற வார்த்தையே நிவேதனமாக கொண்ட விரதம் .


இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி விரதம், சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள்.


சாவித்திரி காட்டில் இருந்து இந்த நோன்பை மேற்கொண்டபோது அங்கு அவளுக்குக் கிடைத்த காராமணி, கார் அரிசி ஆகியவற்றைக் கொண்டு காரடை செய்து நிவேதனம் செய்தாள்.


அதனால் இந்த நோன்பு நோற்கும் பெண்கள் நிவேதனத்தில் காரடை வைத்து,ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேண்டும்' என வேண்டி நோன்புக் கயிறு கட்டிக் கொள்வார்கள்.


இந்த நோன்புக் கயிறு மிகவும் புனிதம் வாய்ந்தது.


மாசியின் முடிவில் பங்குனியின் துவக்கத் தில் கடைப்பிடிக்கப்படும் இந்த நோன்பு புராண காலத் தொடர்புடையது.


மாங்கல்ய பாக்கியம் தரும் மகத்தான வழிபாடு காரடையான் நோன்பு.


தன் கணவன் நலமுடனிருக்க சுமங்கலிகளால் கடைப்பிடிக்கப்படும் நோன்பு இது.


கன்னியர்களுக்கு நல்ல இல்வாழ்க்கை அமைய வேண்டி மூத்த சுமங்கலிகள் அவர்களுக்கு நோன்புக் கயிறு கட்டிவிடுவர்.

10015076_640252316043744_463226892_n.jpg


Source: Hari Krishnamurthy
 
doubt

Dear sir,
Due to a birth of kid( boy) in the family... punyajanam is happening only after14th. We would not be able to do the nombu on 14th. What can we do? is there any alternative?

Thanks and regards,
Madhumita
 
Status
Not open for further replies.
Back
Top