காகத்திற்கு_அன்னமிடுவது எதற்கு?

praveen

Life is a dream
Staff member
காகத்திற்கு_அன்னமிடுவது எதற்கு?

வால்மீகி ராமாயணத்தில் ஒரு சில பிராணிகளின் மகத்துவம் கூறப்பட்டுள்ளது. பூர்வ காலத்தில் மருத் என்கிற அரசன் தேவகுரு #ப்ருஹஸ்பதியின் சகோதரனான #ஸம்வர்தனின் தலைமையில் ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்திற்கு இந்த்ராதி தேவர்கள் ஸஹாயம் (உதவி) செய்தனர். அப்பொழுது #இராவணன் அங்கு வந்து சேர்ந்தான். அவனின் அசாத்தியமான #புஜபலபராக்ரமத்திற்கு
அஞ்சிதேவர்கள்தங்களின் #ரூபங்களை பக்ஷிகளாகவும், மிருகங்களாகவும் மாற்றிக் கொண்டு #பதுங்கியிருந்தனர். இராவணன் ஒரு அசுத்தமான நாயைப் போல் சபையில் நுழைந்து மருதனை போருக்கு #அழைத்தான். யுத்தம் செய்ய முடியாவிட்டால் #தோல்வியை ஒப்புக் கொள்ளும்படி #நிர்பந்தித்தான். அப்பொழுது அரசன் ‘நீ யார்?” என்று கேட்ட்தற்கு, இராவணன் ஒரு அலட்சிய சிரிப்பு சிரித்து, ‘என்னை தெரியவில்லையா?” உன் அஜ்ஞானத்தை பார்த்து உன் மேல் பரிதாபமாக இருக்கிறது. நான்


#குபேரனின்சகோதரன். #அவனிடம் போர் புரிந்து இந்த #புஷ்பக விமானத்தை #அடைந்தேன். அதற்கு அரசன், ‘நீ உன் #சகோதரடனுடம் போர் புரிந்து #வென்றாயா?” மூவுலகிலும் உன் போன்ற வீரனை பார்ப்பது அரிது. கடும் தவம் புரிந்து #வரங்கள் பெற்றது #எதற்கு? நான் இதுவரை #உன்னைப் பற்றி #கேள்விப்பட்ட்தில்லை. துரோகி, நீ இங்கிருந்து உயிருடன் திரும்பிப் போக முடியாது. உன்னை இங்கிருந்து நேராக யமபுரிக்கு அனுப்புகிறேன், என்று அரசன் போருக்கு தயாராக #ஆயுத்தமானான். அப்பொழுது யாகத்தை தலைமையேற்று நட்த்தும் #ஸம்வர்தன், ‘அரசே, என் பேச்சை மன்னியுங்கள், மஹேஸ்வரனுக்காக செய்யப்படும் யாகத்திற்கு தடை ஏற்பட்டால் உன் வம்சம் #நாசமாவதற்கு #காரணமாகும். #யாக தீக்ஷையில் இருக்கும் பொழுது #யுத்தமோ, #கோபமோகூடாது. யுத்தம் செய்தால் உனக்கு வெற்றி என்பது நிச்சயம் அல்ல, அதுவுமில்லாமல் இராவணனுடன் போர் புரிதல் மிகவும் சிரமமான #காரியம் என்று போதிதார். அதற்கு அரசன் அங்கீகரித்து யாகம் தொடர்ந்து செய்யலானான். அப்பொழுது இராவணனின் மந்திரி இராவணன் வெற்றி பெற்று விட்டான் என்று முழங்கினான். இராவணனும் அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.
அப்பொழுது இந்த்ராதி தேவர்கள் தங்கள் சுய ரூபங்களில் சபைக்குள் வந்தனர். இந்திரன் மயில் உருவத்தில் இருந்த்தினால், மயிலுக்கு ஸர்ப்ப பயம் இருக்காது. மனிதர்கள் உன்னை வதைக்கமாட்டார்கள். உன் நீலவர்ண மயிலிறகு என் ஆயிரம் கண்களை போன்றே இருக்கும். மழை வருவதற்கு முன் நீ இறகை விரித்து ஆடும் காட்சியை பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் போதாது. அவ்வளவு அழகாக இருக்கும் என்று வரத்தை கொடுத்தான்.


யமதர்மராஜன் க்காகத்தை பார்த்து, ‘எனக்கு உன்னிட்த்தில் #ப்ரீதி ஏற்பட்டுள்ளது. உன்னால் யாருக்கும் எந்த #வியாதியும் வராது. உன்னை யாரும் #சாகடிக்கமாட்டார்கள். உனக்கு கொடுக்கப்படும் ஆஹாரத்தினால் பித்ரு லோகத்தில் பித்ருக்கள் #பசி கொடுமையிலிருந்து #முக்தி அடைவார்கள்.


வருணன் ஹம்ஸத்திற்கு பூர்ணசந்திரனை போல் இருப்பாய் என்று வரத்தைக் கொடுத்தான். நீ தண்ணீரில் நீந்தும் போது அழகாக இருப்பாய் என்று வரம் கொடுத்தான். இந்த வரத்திற்கு முன் ஹம்ஸத்தின் இறக்கைகளும், மூக்கும் கறுப்பு நிறத்திலும், ஹ்ருதயம் நீலமாகவும் இருந்தன.


இனி குபேரன் ’பச்சோந்தி’க்கு, ‘நீ தங்கம் போன்ற மேனியோடு ஜொலிப்பாய். உன் தலை பாகம் அருணவர்ணத்துடன் விளங்கும்’ என்ற வரத்தை தந்தார்.
இப்படி தேவதைகள் அந்தந்த பிராணிகளுக்கு வரங்கள் தந்து அரசனின் யாகம் முடியும் வரை இருந்து அரசனுக்கும் வரங்களை தந்து விட்டுச் சென்றனர்.
அதனால் #காகத்திற்கு #அன்னமிட்டால் #பித்ரு #தேவதைகள் #திருப்தி #அடைவார்கள். இது #யமதர்மராஜனின் #வரம்.
 
Back
Top