V
V.Balasubramani
Guest
கவிழும் சரக்கு ரயில்கள்... அதிகாரிகள் கோடĬ
கவிழும் சரக்கு ரயில்கள்... அதிகாரிகள் கோடிகளை அள்ளியது எப்படி?
திருச்சி பகுதிகளில் அடிக்கடி சரக்கு ரயில்கள் கவிழ்வது வாடிக்கையாகிவிட்டது. நேற்று காலை தூத்துக்குடியிலிருந்து உரம் ஏற்றி வந்த சரக்கு ரயில் ஒன்று திருச்சியில் தடம் புரண்டது.
சுமார் 20 பெட்டிகளில் உரம் ஏற்றி வந்த அந்த ரயில் தடம் புரண்டதில் உயிரிழப்போ அல்லது பலத்த சேதமோ ஏற்படவில்லை. திருச்சியின் குட்ஷெட் யார்டு அருகே குறித்த ரயில் வந்த போதே ரயிலின் கடைசி 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகித் தடம் புரண்டுள்ளன.
ரயில் ஓட்டுனர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு ரயிலை நிறுத்தியதுடன், உயர் அதிகாரிகளுக்கு உடனே தகவல் அளித்தார். இதையடுத்து விரைந்து வந்த திருச்சி ரயில்வே உதவி மேலாளர் மற்றும் ஊழியர்கள் எந்திரங்களின் உதவியுடன் பெட்டிகளை நிமிர்த்த முயன்றனர். 6 மணி நேர போராட்டத்திற்குபிறகு பெட்டிகள் தண்டவாளத்தின் மீது நிமிர்த்தப்பட்டதுடன் பின்னர் உரிய இடத்தில் உர மூட்டைகளும் இறக்கப்பட்டன.
இதேபோல் கடந்த சில வருடங்களில் 5 முறைக்கும் மேல் ரயில் கவிழ்ந்துள்ளது. இப்படியிருக்கும் நிலையில் திருச்சி சரக்கு ரயில் போக்குவரத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழக்கை மத்திய புலனாய்வு படை அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், திருச்சி குட்ஷெட்டில் எடை அளவிடும் கம்ப்யூட்டர் அறைக்கு சீல் வைத்துள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள். விசாரணையில், இந்த ஊழலுக்கும், சரக்கு ரயில்கள் திருச்சியில் அடிக்கடி கவிழ்வதற்கும் தொடர்பு உள்ளது அம்பலமாகி உள்ளது. அனுமதிக்கப்பட்ட மற்றும் பில்லில் குறிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஏற்றப்பட்டு வரும் சரக்குகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் தங்களுக்கு வசூலித்துக்கொண்ட அதிகாரிகளின் தகிடுதத்தங்களால்தான், அதிக பாரம் தாங்காமல் சரக்கு ரயில்கள் அடிக்கடி திருச்சியில் தடம் புரள்வது வாடிக்கையாகிவிட்டது என தெரியவந்துள்ளது.
திருச்சி குட்ஷெட் யார்டில் சரக்கு ரயில்களில் கொண்டு செல்லப்படும் நிலக்கரி, அரிசி, நெல் மூட்டைகள், சிமெண்டு மூட்டைகள் உள்ளிட்டவைகளை எடையிடுவதற்காக நவீன கம்ப்யூட்டர் எடை அளவிடும் கருவி உள்ளது. குட்ஷெட் யார்டில் தண்டவாளத்தின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது இக்கருவி. இதன் அருகே தனியாக சிறிய அறை உள்ளது. இந்த அறையில் கம்ப்யூட்டர் மூலம் எடை கணக்கிடப்படும்.
Read more at: Cargo trains accident ... How to pocket crores? | ??????? ?????? ????????... ?????????? ??????? ???????? ??????? | VIKATAN