கவலைப்படாதே கவின் நிலவே

விடியற் காலையில் சன்னல் வழியே வெள்ளை நிலவை கண்டதால் சில வரிகள்

விடியும் வேளை சன்னல்வழி
வீட்டுக்குள் எட்டி பார்த்து
வெண்ணிலவே என்னருகே உறங்குவதால்
வெட்கத்தால் முகம் மூட
வெள்ளை மேகம் பின்சென்றாயோ..?

சிறுவிபத்தில் சிக்கிய நான்
சீராக எழுந்தது கண்டு
சிரிப்பாய் மலரும் அவள்
சிரிப்பின் சில சிதறல்களாய்
சிறப்பாக விளங்குகிறாய் நீ

காலையிலே கண் விழிக்க
காதலாய் அவள் பார்வை
கண்வழியே மனம் கவரும்
காதல் பார்வையின் கால்பகுதியாய்
காணக் கிடைக்கிறாய் நீ

எனைக்காணும் என்னவளின் முகஒளி
என்னுள் இருந்து எழுவதுவே
என்னவள் போல் நீயும் ஒளிவிட
உன்னொளி உருவாக்கும் உதயனை
உனக்காக மேலும் ஒளியிட சொல்..



-TBT
 
Back
Top