கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
Picture of Jesus riding into Jerusalem on a donkey
‘’எல்லா மிருகங்களும் சமம்; ஆனால் சில மிருகங்கள் மற்ற மிருகங்களை விட கூடுதல் சமம்’’ (‘’All animals are equal, but some animals are more equal than others—George Orwell’s Animal Farm) என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. எல்லா மிருகங்களும் சமம்தான். ஆனால் சிங்கத்துக்கு ஏன் ராஜா பதவி? கழுதைக்கு ஏன் இந்த இழி நிலை? பழமொழிகளிலும் சரி, கல்வெட்டுகளிலும் சரி, சங்க இலக்கியத்திலும் சரி—கழுதை என்றால் கொஞ்சம் இளக்காரம் தான். ஆனால் வெளிநாடுகளில் கழுதைக்கு கொஞ்சம் மதிப்பு அதிகம். இவ்வளவுக்கும் இது ஒரு ‘வெஜிடேரியன்’.
உலகப் பேரழகி கிளியோபாட்ரா, தனது அழகைப் பராமரிக்க கழுதைப் பாலில் குடித்ததாகப் படிக்கிறோம். ஏசு கிறிஸ்து ஜெரூசேலம் நகருக்குள் கழுதை மீது வெற்றிகரமாக ஊர்வலமாக வரும் படத்தைப் பார்த்துள்ளோம். மத்தேயு சுவிசேஷத்தில் படித்டுள்ளோம். ஆனால் இந்தியாவில் இதற்கு நேர்மாறான நிலை.
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
கழுதை கெட்டால் குட்டிச் சுவரு
இப்படிப் பல பழமொழிகள். எல்லாம் ‘கழுதை எதிர்ப்புப் பழமொழிகள்’தான். இது இன்று நேற்று துவங்கியது அல்ல. 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி ‘கழுதை எதிர்ப்பு உணர்வு’ இருப்பதை சம்ஸ்கிருத, தமிழ் காவியங்களும், கல்வெட்டுகளும் காட்டுகின்றன. சில சுவையான எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப்போம்.
சங்க இலக்கியத்தில் கழுதை
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை புலவர் நெட்டிமையார் பாடிய பாடலில் கழுதையைப் பூட்டி ஏர் உழுதல் பற்றிப் பாடுகிறார். இதையே காரவேலன் ( 193 BC to 170 BC) கல்வெட்டும் கூறுகிறது.
கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி
பாழ் செய்தனை, அவர் நனதலை நல் எயில்;
(புறம் பாடல் 15, நெட்டிமையார்)
முது குடுமிப் பெருவழுதி தன் பகைவர் நாடுகளை வென்று, தேரோடிய தெருக்கள் வழியாக ஏர்பூட்டிய கழுதைகளை நடத்திச் சென்று உழுதான் என்று புலவர் பாடுகிறார்.
அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியின் புகழ் பாடிய அவ்வையாரும் இதையே கூறுகிறார்:
அணங்குடை மரபின் இருங்களந்தோறும்,
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ! (புறம் 392, அவ்வையார் )
இதன் பொருள்: திறை கொடாத மன்னரின் மதில்களை வஞ்சனையின்றிப் பொருது அழித்துப், போர்க்களத்திலே கடும் போர் இயற்றிக், கழுதை பூட்டி உழுது, கவடியும் வேலும் விதைக்கும் இடையறாத போர் வெற்றி நிறைந்த வேந்தனே!
இதிலிருந்து ஒரு மன்னனை அவமானப்படுத்த, அவன் ஊரைப் பாழ்படுத்துவதோடு, அங்கே கழுதைகளை அனுப்பி ஏர்பூட்டி உழுதல் வழக்கம் என்றும் அதிலும் வெள்ளை வரகு, கொள்ளு பயிரிடுதல் வழக்கம் என்றும் தெரிகிறது. இது நாடு முழுதும் இருந்த பாரதீய பண்பாட்டின் ஒரு அம்சம்.
எல்லோரும் வெறுக்கும் மூதேவியின் வாஹனம் கழுதை!
ஹத்திகும்பா கல்வெட்டு
கலிங்க நாட்டு மன்னன் காரவேலன் சமண மததைப் பின்பற்றிய ஒரு மாமன்னன். அவனுடைய ஹத்திகும்பா கல்வெட்டு அரிய தகவல்களை அளிக்கிறது. 2200 ஆண்டுகளுக்கு முன் மூன்று தமிழரசர்களும் வடக்கத்திய படைஎடுப்பைத் தடுக்க வைத்திருந்த கூட்டணியை முறிஅடித்ததாகப் பெருமை பேசுகிறான். அப்போதைய தமிழ்நாட்டின் அரசியல் நிலையை இவன் கல்வெட்டு எடுத்துக் காட்டுகிறது. காரவேலன் சத்தியம் தவறாத நீதிக்கும் நேர்மைக்கும் பெயர்போன ஒரு தலைவன். சுநீதிமான் என்று நூல்கள் போற்றிய மன்னன்.. ஆன்றோராலும் சான்றோராலும் போற்றப்பட்ட பெருந்தகை. அவனுடைய ஹத்திகும்பா கல்வெட்டும் பாடலிபுத்ரம், ராஜகிரி, தமிழர்களின் துறைமுக நகரம் ஆகியவற்றை கழுதையில் ஏர்பூட்டி உழுததைக் கூறுகிறது. பாண்டிய நாடு வரை அவன் ஆட்சி பரவியதையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. குதிரைகள், யானைகள், ரத்தினக் கற்களை பாண்டிய மன்னன் அனுப்பினான்.
Picture of Shitala Devi
கரும் புள்ளி செம்புள்ளியுடன் ஊர்வலம்
பழைய காலத்தில் குற்றவாளிகளையும், பெண்களுக்கு எதிராக தவறிழைத்தோரையும் கழுதை மீது உட்கார வைத்து, அவன் முகத்தில் கருப்பு, வெள்ளை வர்ணங்களால் புள்ளிகளை வைத்து நகர் வழியாகக் கூட்டிச் செல்வர். இப்போதும் வட இந்தியாவில் இது நடக்கிறது. கழுதைகளை பாரம் சுமக்கப் பயன்படுத்தியதும் நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது. அக நானூறு (89) இது பற்றிப் பாடுகிறது பதிற்றுப்பத்து, பெரும்பாணாற்றுபடையிலும் கழுதையின் ‘’புகழ்’’ உள்ளது. மிளகு பொதி சுமக்கும் கழுதை பற்றியும் கழுதை பூட்டிய ஏர் (ப.பத்து 25) உழுதல் பற்றியும் பாடுகின்றனர்.
கல்வெட்டுச் சாபங்களில் கழுதை
பல கல்வெட்டுகளில் கழுதைச் சாபமும் காணப்படுகிறது. கல்வெட்டுகளில் சொன்ன விஷயங்களை மீறினாலோ, பின்பற்றாவிடிலோ அவர்கள் கழுதைகளைப் புணர்ந்த பாபத்தை அடைவார்கள் என்றும் கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ளன.
வேத காலத்தில் கழுதை
வேத காலத்தில் கழுதைக்கு மதிப்பு இருந்ததாகத் தோன்றுகிறது. அதர்வ வேதமும் (9-6-4), ஐதரேய பிராமணமும் (4-9-1) முறையே இந்திரனும் அக்னியும் கழுதை வாகனத்தில் சென்றதகக் கூறும். கிரேக்க நாட்டில் ஒலிம்பிய தெய்வமன ஹெபைஸ்டோஸ், டயோனிசிஸ் இந்திய கிராம தேவதையான சீதளா தேவி ஆகியோருக்கும் கழுதையே வாகனம்.
இனிமேலாவது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கூப்பிடும்போது ‘’அடச் சீ, கழுதை, இங்கே வா, புத்தகத்தை எடுத்துப் படி ’’ என்று சொல்லாமல் இருப்பார்களாக!!
Cartoon making fun of Napolean when he was exiled to Elba.