கலியுக முடிவு பற்றி லிங்க புராணம்

Status
Not open for further replies.
கலியுக முடிவு பற்றி லிங்க புராணம்

big+linga+purana.jpg


முன்னர் வெளியான சந்தானம் சுவாமிநாதன் கட்டுரைகள்: (1) டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியுமா? (2) கலியுக முடிவும் கல்கி அவதாரமும். இவ் வரிசையில் இதோ மூன்றாவது கட்டுரை:

கலியுக முடிவு பற்றி லிங்க புராணம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்:

1.திருடர்கள் மன்னர்கள் ஆகிவிடுவர். மன்னர்கள் திருடர்கள் ஆகிவிடுவர்.
2.மக்களின் சொத்துக்களை ஆட்சியாளர்கள் பறிமுதல் செய்து அதைக் கெட்ட வழியில் செலவிடுவர்.
3.கொஞ்சம் படித்த அடிப்படை ஒழுக்கம் இல்லாதவர்கள் பெரிய சாமியார்களாகக் கருதப்படுவர்.
4.நிறைய நாடோடிகள் (அகதிகள்?) நாடு நாடாகச் செல்வர்.
5.தாய்மார்களின் கர்ப்பத்திலேயே கருக்கள் அழிக்கப்படும்
6. கோர மிருகங்களின் தொல்லைகள் அதிகரிக்கும்
7.மக்கள் தவறான முடிவுகளுக்கு ஜே போடுவார்கள்
8.ஒருவரை ஒருவர் நம்பமாட்டார்கள். பொறாமை அதிகரிக்கும்.
9.ஆயுட்காலம் குறையும். பலர் 16 வயதி இறப்பார்கள்.
10.பசி, பிணி இவற்றால் கஷ்டப்படுவோர் பூமிக்கடியில் வசிப்பார்கள்.


11.இளம் பெண்கள் கற்பை விலை பேசுவார்கள்
12. மழைக்கான அதிபதி கண்ட கண்ட இடங்களில் கண்ட கண்ட காலங்களில் மழையைக் கொட்டுவான்.
13.கடைக்காரர்கள் கொள்ளை லாபம் அடிப்பர்.
14.கடுமையான, அசிங்கமான மொழி பயன்படுத்தப்படும்
15.பிச்சைக்காரர்கள், வேலை இல்லாதோர் அதிகரிப்பர்
16.ஆட்சியாலர்கள் மக்களுக்கு பாதுகாப்பு வழங்காமல் மக்களின் செல்வத்தை வரிகள் மூலம் பறிப்பதில் குறியாக இருப்பர்.
17.பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக இருக்கும். வேறு லட்சியம் அதுவும் இல்லாமல் பானக்காரர்களின் சொல் கேட்பர்.
18.தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
19.ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் விற்கப்படும்.


லிங்க புராணம் எழுதப்பட்டு 1500 ஆண்டுகட்கு மேலாகிவிட்டது. அப்போதே இப்படி உலகம் தறிகெட்டுப் போகும் என்று எப்படிக் கண்டுபிடித்தனர்? ஞானிகளின் த்ரிகால ஞானம் (முக்காலப் பார்வை) என்றே சொல்ல வேண்டும்.
Contact [email protected]




shiva+as+jyoti.jpg
 
Status
Not open for further replies.
Back
Top