கண்ணிநுண்சிறுத்தாம்பு

praveen

Life is a dream
Staff member
கண்ணிநுண்சிறுத்தாம்பு

"நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவராதலில் அன்னையாய், அத்தனாய் என்னையாண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே".
( 4 ம் பாசுரம்)


பல அறிய விஷயங்களை விளக்கிடும் இப்பாசுரம், "நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்" எனும் வாக்கியத்தை கொண்டு ஆரம்பித்து, "என்னை ஆண்டிடும் தன்மையான சடகோபன் என் நம்பியே" என முடிகின்றது. வேதம் வல்லார்களான அந்தணர்கள் ஒருபோதும் எளியவர்களை வெறுக்காமல் அவர்களை திருத்தி நல்வழிபடுத்துகிறார்கள் என்பதே அந்தணர்களின் கடமையாக காட்டப்பட்டது இங்கே மதுரகவிகளால். ஆனால், ஒருவேளை, இவன் "பகவத் பக்தி இல்லாதவன்" "தகுதியற்றவன்" என்று அவர்களே கைவிட்டாலும், நம்மாழ்வார் அவ்வாறு கைவிடாமல் காத்திடுபவர் என்பதை வேதம் வல்லவரான மதுரகவிகள் காட்டுவதால் இங்கே அவருடைய உயர்ந்த பண்பும், அவ்வாறே, நம்மாழ்வார் எளிய வேளாளர் குலத்தில் தோன்றியவரே என்றாலும் மிகவும் கருணை உடையவர் என்பதை அவர், "அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்" என "மாதவாயும் பிதாவுமாய்" தம்மை ரக்ஷிப்பதை கூறுவதால் ஒரு நல்ல ஆச்சர்யனின் மேன்மையும் அதே போல ஒரு நல்ல சீடனின் எளிமையும் காட்டப்படுகிறது. இது போன்ற பல பல உயர்ந்த கருத்துக்களை கொண்டதே ஆழ்வார்களின் பாசுரங்கள்.


அக்காலத்தே குலத்தால் உயர்வோ தாழ்வோ இல்லை.


அதனாலேயே, இன்றும் அந்தணர்கள் அத்தகைய ஆழ்வார்களின் பக்தியை திருக்கோவில்களில் கொண்டாடி வருகின்றனர். இது இன்னும் பல கோடி வருடங்களானாலும் தொடரும்.


இற்றை நாட்களில் அத்தகைய ஆழ்வார்களின் உயர்ந்த பக்தியை நம்மால் காண முடியுமாகில், அதே நாம் கொண்டாட வேண்டிய ஒன்றாகும்.


ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்!!
 
Back
Top