• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

கடுமையாகிறது போக்குவரத்து விதிகள்!

Status
Not open for further replies.
கடுமையாகிறது போக்குவரத்து விதிகள்!

கடுமையாகிறது போக்குவரத்து விதிகள்!

26-8-2015


Tamil_News_large_1328674.jpg


புதுடில்லி: போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு, அபராதம் முதல், சிறையில் களி தின்பது வரையிலான தண்டனைகளை, நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

நாளுக்கு நாள்...
கடந்த ஏப்ரலில், உச்ச நீதிமன்றம் நியமித்த, நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான கமிட்டி, இந்த ஆண்டு பிப்ரவரியில், தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்தது.உ.பி., கேரளா மற்றும் நாகாலாந்து மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் அமைக்கப்படவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாடு முழுவதும் சாலை விபத்தில் பலியாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விபத்துகளை தடுக்க, விதிமுறைகளை அமல்படுத்தினாலும், பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, அடுத்த மாதம் முதல், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட, அதிக வேகத்தில் வண்டி ஓட்டுவது, வண்டி ஓட்டும்போது, மொபைல் போனில் பேசுவது, மது அல்லது போதை மருந்து உட்கொண்டு வாகனம் ஓட்டுவது மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக பொருட்கள் அல்லது பயணிகளை ஏற்றி செல்வது போன்ற விதிமீறல்களில், ஓட்டுனரின் உரிமத்தை பறிமுதல் செய்வது முதல் சிறையில் அடைப்பது வரையிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக மது அல்லது போதை மருந்து உட்கொண்டு வண்டி ஓட்டுபவர்கள் முதல் முறை பிடிபட்டாலும், எந்தவித சலுகையும் காட்டாமல், சிறையில் அடைக்கவேண்டும். அவர்கள் மீது, 1988ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம், பிரிவு 185ன் கீழ், வழக்கு பதிவு செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் கீழ் உள்ள யூனியன் பிரதேசங்களில், 1988ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம், பிரிவு 19 மற்றும் 1989ம் ஆண்டு மத்திய மோட்டார் வாகன சட்டம், பிரிவு 21ன் படி, காலவரையின்றி ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்வது முதல் அவர்களை சிறையில் அடைப்பது வரையிலான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட துறைகள் வழங்கவேண்டும்.

நாடு முழுவதும், இருசக்கர வாகனங்களில் ஓட்டுபவர் மட்டுமல்லாமல், பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டும். மீறுவோருக்கு அபராதம் விதிப்பதுடன், குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் வரை, சாலை பாதுகாப்பு குறித்த பாடத்தை படிக்க உத்தரவிட வேண்டும். இந்த பாடம், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவோருக்கும் பொருந்தும்.

அறிக்கை தாக்கல்: இந்த பரிந்துரைகளை வரும் செப்.1 முதல் அமல்படுத்துவதுடன், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும், போக்குவரத்து துறை செயலர்களுக்கும் பரிந்துரை அறிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.


http://www.dinamalar.com/news_detail.asp?id=1328674
 
Status
Not open for further replies.
Back
Top