கடன் தொல்லை தீர

Status
Not open for further replies.
கடன் தொல்லை தீர

கடன் தொல்லை தீர ,வாங்கிய கடனில் சிறிதளவு இந்த நாளில் திருப்பி கொடுத்தால் கடன் விரைவில் தீரும்..இதை மற்றவர்களுக்கும் தெரிவித்து உதவி செய்யுங்கள்...கடனால் துன்ப்படுவோர் அதிகம்..!






http://www.***********.com/forums/attachment.php?attachmentid=1703&d=1427471994


செவ்வாய் கிழமையில் பெரும்பாலும் கடனை திருப்பி செலுத்துங்கள் ..குளிகை நேரத்தில் யாரிடமும் கடன் வாங்கி விடாதீர்கள் கடன் அதிகமாகி கொண்டே இருக்கும்.செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 முதல் 1.30 க்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால் திரும்ப திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டு விடலாம்..


சங்கடஹர சதுர்த்தி அன்று வன்னி மரத்தின் இலைகளை கொண்டு வினாயகருக்கு அர்ச்சனை செய்ய அளவற்ற கடன்களை அடைக்க வழிபிறக்கும்.


ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் சிவபெருமானுக்கு செந்தாமரை வைத்து 6 நெய்தீபமேற்றி வழிபட கடன்கள் விரைவில் தீரும்..


திண்டிவனம் அருகில் இருக்கும் திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று காலை 5 மணிக்கு பால் அபிசேகம் செய்து வழிபட கடுமையான நெருக்கடிகள் தீரும்.


குலதெய்வம் கோயிலுக்கு மாதம் தோறும் சென்று வழிபடுங்கள் ஆண் தெய்வமாக இருந்தால் அமாவசை அன்றும் பெண் தெய்வமாக இருப்பின் பெள்ர்ணமி அன்றும் செல்லலாம்..16 விதமான அபிசேகம் செய்து சர்க்கரை பொங்கல் வைத்து கோயிலுக்கு வருவோருக்கு பிரசாதமாக கொடுக்கவும் 27 நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..


ஜாதகத்தில் என்ன திசைபுத்தி நடக்கிறதோ அதற்கேற்ரப்படி தான தர்மம் செய்து கர்ம வழி தோசத்தை நிவர்த்தி செய்து கொள்ளவும்.




source: ***********/GGMoorthyiyer
 
Status
Not open for further replies.
Back
Top