ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான தேவேந் திரன் தனது செல்வங்களை இழந்தான். மீண்டும் அவற்றைப் பெற, திருமாலின் அறிவுரைக்கேற்ப அசுரர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. அதை சிவபெருமான் தன் கண்டத்தில் இருத்திக் கொண்டு நீல கண்டனானார். தொடர்ந்து காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை போன்ற பல்வேறு புனித மான பொருட்கள் வந்தன. பாற்கடலிலிருந்து கடைசி யில் திருமாலே தன்வந்திரி யாக அம்ருத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டார். தேவேந்திரன் சாவா மருந் தான அமிர்தத்தையும் தான் இழந்த பிற பொருட் களையும் பெற்று தேவலோகம் சென்றான்
திருமால் மக்களுக்கு மருத்துவராகத் தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும். நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது. தன்வந்திரி பகவான் படத்தை வீட்டில் வைத்து தினமும் கீழுள்ள சுலோகத் தைக் கூறி வழிபடலாம். இதை 16 முறைக்குக் குறையாமல் கூறினால் நல்ல பலன்கள் கிட்டும்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே
இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவேன்றல் அன்று சுக்ர வார பிரதோஷம் மற்றும் ஜலூகா என்னும் அட்டைபூச்சியின் ஜென்ம நட்சத்திரம் உத்திரம்
*(உதிரம்=இரத்தம்) எனவே இன்னும் சிறப்பு